அமைதியாக போராடும் செவிலியர்கள் மீது காவல்துறை அத்துமீறல் நடவடிக்கை
சென்னை, டிச.20 - தமிழ்நாட்டில் தங்கள் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி செவி லியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராடும் செவிலியர் கள் மீது காவல்துறை அத்துமீறல் நட வடிக்கையை அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் ஜி.பிரமிளா, மாநில பொதுச் செயலாளர் அ.ராதிகா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது: அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை முன்வைத்து போ ராட்டம் நடத்தி வரும் செவிலியர்களை தள்ளி இழுத்தல், தடுத்து நிறுத்தல், மிரட்டல், ஆண் காவலர்களைக் கொண்டு பெண் செவிலியர்களை தரை யில் இருந்து இழுத்துச் செல்வது உள் ளிட்ட நடவடிக்கைகள் ஜனநாயகத்தி ற்கு எதிரானவையாகும். பெண்களின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமை மீதான தாக்குதலாகும். கொரோனா உள்ளிட்ட அனைத்து பேரிடர்களிலும் மக்களுக்காக தங்கள் உயிரையே பணயம் வைத்து பணி யாற்றிய செவிலியர்கள் இன்று தங்கள் உரிமையை கேட்கிறார்கள் என்ப தற்காக ஒடுக்கப்படுவது கடும் கண்ட னத்திற்குரியது. ஊதிய உயர்வு மற்றும் ஒரே நிலை யான ஊதிய அமைப்பு கொண்டு வர வேண்டும். ஒப்பந்த-தற்காலிக செவி லியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். பணிநேரம், பணிச்சுமை மற்றும் வேலை பாதுகாப்பு தொடர்பான தெளி வான விதிமுறைகள் அமல்படுத்தப்பட வேண்டும். பதவி உயர்வு, மூப்புக் கான உரிமைகள் மற்றும் நலன்கள் வழங்கப்பட வேண்டும். மருத்துவக் காப்பீடு, நலவிதிகள் மற்றும் பெண்க ளுக்கான பாதுகாப்பு நடைமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி நிறைவேற்றிட வேண்டும். சுகாதாரத் துறையின் முதுகெலும் பாக செயல்படும் செவிலியர் போ ராட்டத்தில் காவல்துறை நடத்திய அத்துமீறலுக்கு உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். செவிலியர்களின் அனைத்து நியாயமான கோரிக்கைகளையும் தமிழக அரசு பரிசீலித்து நிறைவேற்ற வேண்டும். செவிலியர்கள் நடத்தும் உரிமைக்கான, அமைதியான போ ராட்டத்திற்கு அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள் ளனர்.