பனாமா: தொழிலாளர் வேலைநிறுத்தமும் மக்கள் எதிர்ப்பும்
மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் 2024 மே 5-ல் ஜோஸ் ரவுல் முலினோ 34.23% வாக்குகள் பெற்று ஜனாதிபதியாகத் தேர்வானார். பொருளாதார ரீதியாகப் பனாமாவைச் செழிப்பாக்குவேன் என்றும் சமூக அமைதியை நிலைநாட்டப் போவதாக வாக்குறுதிகளை அவர் வழங்கினார். நவீன தாராளமயக் கொள்கைகளும் அமெரிக்க ஆதரவும் ஆனால் முலினோ நவீன தாராளமயக் கொள்கைகளையே பின்பற்றினார். பனாமாவின் வரலாற்றில் நீண்டகாலம் தலையீடு செய்து வரும் அமெரிக்காவின் வெளிநாட்டுக் கொள்கைகளை அவர் ஆதரிக்கிறார். இது திரட்டப்பட்ட தொழிலாளர் மத்தியில் கடும் எதிர்ப்பை உருவாக்கியது. ஓராண்டு பதவிக்காலம் நிறைவுபெற்ற நிலையில், பனாமா மக்களின் 9% பேர் மட்டுமே நாடு சரியான திசையில் செல்வதாக நம்புகின்றனர். வேலைநிறுத்தமும் போராட்டங்களும் சுகாதார ஊழியர்கள், ஆசிரியர்கள், மாணவர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாயத் தொழிலாளர்கள் உட்பட பலரும் 60 நாட்களுக்கு மேல் வேலைநிறுத்தம் செய்தனர். தினசரி தெருக்களில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை நடத்தினர். மக்களின் கோரிக்கைகள் தாமிரச் சுரங்கம்: 2023-ல் பெரும் ஆர்ப்பாட்டங்களால் மூடப்பட்ட தாமிரச் சுரங்கம் மீண்டும் திறக்கப்படுவதை மக்கள் ஏற்கவில்லை. பென்ஷன் குறைப்பு: சட்டப் பிரிவு 462-ன் மூலம் பென்ஷன் குறைப்பு செய்யப்படுவது தொழிலாளர் மத்தியில் மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது. சமூகப் பாதுகாப்பு தனியார்மயம்: சமூகப் பாதுகாப்பு அமைப்புகளை தனியார்மயமாக்கும் முயற்சிகளை மக்கள் எதிர்க்கின்றனர். இந்நிலைமைகள் பனாமாவில் அமெரிக்காவின் நீண்டகால தலையீடு மற்றும் நவீன தாராளமயக் கொள்கைகளின் பாதிப்புகளை வெளிப்படுத்துகின்றன.