articles

வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்!

வெனிசுலா மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம்!

புதுதில்லி, ஜன. 5 - வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிர மிப்பிற்கும், அந்நாட்டு ஜனாதிபதி மதுரோவை, அவருடைய மனைவியுடன் அமெரிக்கா கடத்தியதற்கும் இடதுசாரிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செய லாளர் து. ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (எம்எல்- விடுதலை) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச்செயலாளர் ஜி. தேவராஜன், புரட்சி சோசலிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா கையொப்பமிட்டு கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஐ.நா. சாசனத்தை மீறி  இறையாண்மை மீது தாக்குதல் வெனிசுலா மீதான அமெரிக்காவின் ஆக்கிர மிப்பையும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகி யோரைக் கடத்தி இருப்பதையும் நாங்கள் வன்மை யாகக் கண்டிக்கிறோம். இது ஐ.நா. சாசனத்தை அப்பட்டமாக மீறி, ஓர் இறையாண்மை கொண்ட நாட்டின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தனது  உரையில், ‘வெனிசுலாவின் எண்ணெய் வளங் களைக் கைப்பற்றுவோம்’ என்று கூறியதன் மூலம், இந்த ஆக்கிரமிப்பிற்குப் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ ஒரு படி மேலே சென்று, கியூபாவும் மெக்சிகோவும் தங்களின் அடுத்த இலக்குகள் என்று எச்சரித்துள்ளார்.  உலகின் சரிபாதியை ஆதிக்கத்தில் வைக்க முயற்சி 2025-ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு உத்தி, வெளியிடப்பட்ட சில நாட்களுக்கு பிறகு வெளிவந்துள்ள இந்த அறிக்கைகள், இராணுவத் தாக்குதல்களை நடத்துவதாக இருந்தாலும் கூட, அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு  உலகின் மீதும் தனது மேலாதிக்கத்தை நிலை நாட்ட முயல்கிறது என்பதைத் தெளிவாகக் காட்டு கின்றன. பூமிப்பந்தின் மேற்கு சரிபாதியை தனது  சொந்த முற்றம் போலக் கருதி, தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவது என்ற இழி புகழ்பெற்ற மன்றோ கோட்பாட்டின் டிரம்ப் துணைக் கோட்பாட்டை அமெரிக்கா திணிக்க விரும்புகிறது. போராடும் வெனிசுலா  மக்களுக்கு முழு ஆதரவு வெனிசுலா மக்கள் அமெரிக்க ஆக்கிரமிப் பிற்கு எதிராகவும், தங்கள் நாட்டின் இறையாண்மை யைப் பாதுகாப்பதற்காகவும் பெருமளவில் அணி திரண்டு வருவதை அங்கிருந்து வரும் செய்திகள் காட்டுகின்றன. போராடும் வெனிசுலா மக்களுக்கு எங்களின் முழுமையான ஆதரவையும் ஒருமைப் பாட்டையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம். இடதுசாரிக் கட்சிகளாகிய நாங்கள், அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும், லத்தீன் அமெரிக்க மக்களின் ஒருமைப்பாட்டிற்காகவும் நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். நமது நாட்டின் அமைதியை விரும்பும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் அனைவரும் பெரு மளவில் அணிதிரண்டு இந்தப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் அறைகூவல் விடுக்கிறோம். இந்திய அரசாங்கம், அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கண்டிக்கும் உலக நாடுகளின் குரல்களுடன் இணைந்து, வெனிசுலா வுடன் உறுதியாக நிற்க வேண்டும். இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறிக்கையில் கூறியுள்ளன.   (ந.நி.)