மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிச் சட்டத்தை அழிக்கும் மோடி அரசின் சதி!
மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கூட்டம் இன்று அவர் பெயரில் உள்ள சட்டத்தையே அழிக்க முனைந்துவிட்டது. பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு, கிரா மப்புற உழைக்கும் மக்களின் வேலைவாய்ப்புக்கான உரிமையைப் பறிக்கும் வகையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தை (MGNREGA) நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக புதிய மசோதாவைக் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது. இந்த புதிய சட்டம் ‘விக்சித் பாரத் – வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்தரவாதத் திட்டம் (கிராமப்புறம்): VB-G Ram G 2025’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக் கப்பட்டுள்ளது. பாஜக தலைமையில் 2014-இல் மத்திய ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காலத்தில் இருந்து,
மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தை அழிப்பது என்ற கெடு நோக்கத்துடன், எல்லாவிதமான ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகளிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களும், நாடாளு மன்றத்தில் எதிர் விவாதங்களும் நடந்து வருகிறது. கடும் எதிர்ப்புகள் எழுகிற பொழுது சற்று அடக்கி வாசிப்பார்கள், அதன்பின்பு தங்களுடைய சதி வேலை யைத் தொடர்வார்கள் என்பதுதான் கடந்த பத்தாண்டு கால அனுபவம். இப்பொழுது அதை மீண்டும் தொடங்கியுள்ளார்கள். இந்தியாவில் உள்ள 24 கோடி விவசாயத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதார முன்னேற்றம் மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது என்கிற கொள்கைகளை அறவே நீக்கிவிட்டு, அவர்களுக்கு எதிராகச் செயல்படு வதையே நோக்கமாகக் கொண்ட தொழிலாளி வர்க்க விரோதக் கட்சி பாஜக. அதனால், அது தன்னுடைய திட்டத்தை அமல்படுத்துவதிலேயே கண்ணும் கருத்து மாக இருக்கிறது. இதை இந்திய நாட்டின் ஜனநாயக சக்திகளும், உழைப்பாளிகளின் நலனுக்காக குரல் கொடுக்கக்கூடிய இயக்கங்களும் ஒருபொழுதும் அனுமதிக்காது, முறியடித்தே தீருவார்கள் என்பதுதான் வரலாறு.
வேலை உறுதிச் சட்டத்தின் அடிப்படை அம்சங்கள் மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதிச் சட்டத்தில், கிராமப்புற விவசாயக் கூலித் தொழிலா ளிகளுக்கு ‘100 நாட்கள் வேலை’ என்பது சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 நாட்கள் வேலை வழங்கப்படவில்லை என்றால், அதற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், இதை ஒன்றிய அரசு உறுதியாக அமல்படுத்த வேண்டும், மாநில அரசு களுக்கும் இதில் பொறுப்புண்டு என்றும் தெளிவா கக் குறிப்பிடப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தினசரி ஊதியமும் உயர்த்தித் தரப்பட வேண்டும், அதில் காலதாமதம் செய்யக்கூடாது என்றும் சட்டத்தில் உள்ளது. மேலும், 100 நாள் பணிகளை எக்காரணத்தைக் கொண்டும் எந்திரங்களை வைத்து செய்யக்கூடாது, காண்ட்ராக்ட்க்கு விடக் கூடாது என்ற உறுதியான உத்தரவும் அதில் உள்ளது. உரிமையைப் பறிக்கும் புதிய மசோதாவின் அபாயங்கள் ஆனால், இன்றைய பாஜக அரசு, இந்தச் சட்டத்தின் பெயரையும், அதில் உள்ள உறுதிமொழி களையும் அடியோடு நீக்கி, ‘VB-G Ram G 2025’ திட்டத்தை அறிவித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படை யான ‘சட்டப்பூர்வ உரிமை’ என்பதை மாற்றி, புதிய மசோதா அதனை ஒரு ‘விருப்பத்தின் அடிப்படையி லான திட்டம்’ என்று அறிவிக்க முயல்கிறது. இதன் மூலம், உழைக்கும் மக்களின் வேலை செய்வதற்கான சட்டப்பூர்வ உரிமையைப் பறிக்க மோடி அரசு சதி செய்கிறது. மேலும், இந்த மசோதா நிதி மற்றும் நிர்வாகச் சுமையை மாநில அரசுகள்
தலையில் ஏற்றுகிறது. முன்பு 75:25 (மத்திய:மாநிலம்) என இருந்த செல வின விகிதத்தை 60:40 என மாற்றுவது மாநில அரசுகளுக்கு கடும் நிதிச் சுமையை ஏற்படுத்தும். புதிய திட்டத்தில் ஒன்றிய அரசு ஒரு ‘சாதாரண ஒதுக் கீட்டை’ மட்டுமே நிர்ணயிக்க அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது. இதன்மூலம், தேவை அதிகரித்தாலும், கூடுதல் நிதியை வழங்க ஒன்றிய அரசுக்குச் சட்டப் பூர்வக் கடமை இனி இருக்காது. அத்துடன், விவசாய வேலைகள் நடக்கும் உச்சப் பருவங்களில் இத்திட்டத்தின் கீழ் எந்த வேலையும் தொடங்கப்படவோ, செயல்படுத்தப்படவோ கூடாது என்று மசோதாவின் பிரிவு 6 குறிப்பிடுகிறது. இது கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்புகளை நேரடியாகக் குறைத்து, ஊதிய உத்தரவாதத்தின் நோக்கத்தையே பலவீனப் படுத்துகிறது. கடந்த காலச் சிதைப்பு முயற்சிகள் துவக்க காலத்தில் இருந்தே இந்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் சிதைக்கும் வேலைகளை மோடி அரசு செய்து வந்தது. நிதியைக் குறைத்தது, வேலை நாட்களைக் குறைத்தது, ஊதியத்தை முறையே கணக்கிட்டு வழங்குவதில் காலதாமதம் செய்தது. வங்கிகள் மூலம் பட்டுவாடா என்ற பெயரில் நீண்ட கால தாமதம் செய்தது. 100 நாள் வேலைக்கு வந்தால் இரண்டு முறை புகைப்படம் எடுக்க வேண்டும்
(காலை 11 மணி, மாலை 2 மணி), அப்படி எடுக்க வில்லை என்றால் சம்பளம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. மனித உழைப்பிற்கு முன்னுரிமை என்ற விதியை மீறி, காண்ட்ராக்ட் முறையில் எந்திரங்களை வைத்துப் பணிகளைச் செய்ய வைத்தது. மேலும், பொருட்களை வாங்க பத்து சதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்ற விதியை மீறி, 40 சதத்திற்கு பணத்தை எடுத்து காண்ட்ராக்ட் தனி நபர்களுக்கு விடலாம் என்ற நடைமுறையைப் பின்பற்றி னார்கள். இவை அனைத்தும் சட்டவிரோதமான செயல்களாகும். ஒரு கிராமத்தில் 500 தொழிலா ளிகள் இருந்தாலும், அதில் 100 பேருக்குக் கூட வேலை வழங்குவதில்லை. இதையும் முறை வைத்து வழங்குகிறோம் என்கிற பெயரிலே வார்டு வாரியாக வேலை நாட்களைக் குறைத்து, ஆட்களையும் குறைத்து மொத்தத்தில் அந்தச் சட்டத்தையே சார மில்லாமல்
சக்கையாக்கினார்கள். ஆதார் இணைப்பு மூலம் தொழிலாளர்களை நீக்கிய கொடுமை 24 கோடி விவசாயக் கூலித் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பை ஆதார் அட்டையுடன் இணைத்து, எட்டு கோடி பேரை பட்டியலில் இருந்து நீக்கி னார்கள். சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க எவ்வளவு சீரழிவு வேலைகள் செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்துவிட்டு, தாங்கள் நினைத் ததை முழுமையாக அமல்படுத்த முடியவில்லை என்ற ஒரே காரணத்திற்காக, தற்போது சட்டத்தின் பெயரையும் சாரத்தையும் மாற்றியுள்ளனர். தேசப் பிதா மகாத்மா காந்தியின் பெயரில் உள்ள இந்த சட்டத்தை அழித்தொழிக்கும் கொடூரமான சிந்த னைதான் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கை. இதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் குரல் கொடுத்திடும்; உழைப்பாளிகள் ஒன்றுபட்டு எழுவார் கள் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. கட்டுரையாளர் : அகில இந்திய துணைத்தலைவர், அகில இந்திய விவசாயத்தொழிலாளர் சங்கம்.
