articles

img

மே 20 - பொது வேலைநிறுத்தம் ஏன்? எதற்காக - ஆர்.எஸ்.செண்பகம்

மே 20 - பொது வேலைநிறுத்தம் ஏன்  எதற்காக  - ஆர்.எஸ்.செண்பகம்

இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கம் ஒரு 17 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து, மே 20 அன்று, நாடு தழுவிய 29ஆவது அகில இந்திய வேலை நிறுத்தத்திற்குத் தயாராகிக் கொண்டி ருக்கிறது. இது,

1.கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான ஒன்றிய அர சாங்கம் அமலாக்கத் துடிக்கும் தொழிலாளர் சட்டத் தொகுப்பு மசோதாக்கள் மற்றும் தனியார்மயக் கொள்கைகளுக்கு எதிரான வேலை நிறுத்தம்.

2. நியாயமான ஊதியம், ஓய்வுக்காலப் பயன்கள், பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பொருளாதார நீதிக்கான வேலை நிறுத்தம்.

3. இந்தியக் குடிமக்களின் ஜனநாயக உரிமைகள் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் எதிர்ப்பியக்க உரிமைகளை உறுதிப்படுத்துவ தற்கான வேலைநிறுத்தம்.

அரசியலமைப்புச் சட்டம் சொல்லுவதென்ன?

இக்கோரிக்கைகளின் சட்டப்பூர்வ தன்மை குறித்து இந்திய அரசியலமைப்புச் சட்டம்  என்ன சொல்கிறது என்பதை  பார்க்கலாம். இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது குடிமக்க ளின் சாசனம்.  அது தான் நாட்டு மக்களுக்கிடையேயான  உறவு பற்றியும் பேசுகிறது.   அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு பற்றியும் பேசுகிறது.  மேலும், அரசு தனது குடிமக்களுக்கான சோசலிச, ஜனநாயகக் கட மைகளை எவ்வாறெல்லாம் வழங்க முடியும் என்ப தற்கான வழிகாட்டுதல்களையும் அளிக்கிறது.  இந்தியக் குடியரசு ஒரு இறையாண்மை பொருந்திய மதச்சார்பற்ற, ஜனநாயக, சோசலிசக் குடியரசு என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரை வரை யறை செய்துள்ளது.  ஜனநாயக, சோசலிசக் குடியரசு என்ற அம்சத்தை கவனத்தில் கொண்டு, இந்தியக் குடி மக்களுக்கு, இந்நாட்டின் தொழிலாளர்களுக்கு அரசி யலமைப்புச் சட்டம் என்னென்ன வழிவகைகளை தனது பிரிவுகளின் மூலம் உத்தரவாதம் செய்ய முனை கிறது என்பதைப் பார்க்கலாம்.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 39, 41, 42, 43, 43ஏ, 45 மற்றும் 51A(e) என்ற பிரிவுகளின் கீழ் அரசுக் கான வழி காட்டுதல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.  அதன் படி, அரசு பின்பற்ற வேண்டிய குறிப்பிட்ட கொள்கை களை கோடிட்டுக் காட்டுகிறது.

சமவேலை - சமஊதியம் குழந்தைகள் ஆரோக்கியம்

பிரிவு 39 நியாயமான மற்றும் நீதியுடன் கூடிய சமூக ஒழுங்கை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து குடிமக்களுக்கும் போதுமான வாழ்வாதார வழிகளை அதாவது சம்பாதிக்கும் வழி முறைகளை உருவாக்குதல், வளங்களை சமமாக விநி யோகித்தல் அதாவது ஒரு சாராரின் கைகளில் செல்வம் குவிவதை தடுக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் அதாவது ஆண்கள் மற்றும் பெண்கள் இரு வரும் ஒரே அல்லது ஒத்த வேலைக்கு சம ஊதியம் பெறுவதை உறுதி செய்ய அரசு பாடுபட வேண்டும். மற்றும் தொழிலாளர்கள் மற்றும் குழந்தைகளின் பாது காப்பு  அதாவது ஆண், பெண் தொழிலாளர்களின் ஆரோக்கியத்தையும் வலிமையையும், குழந்தைக ளின் இளமைப் பருவத்தையும் அரசு பாதுகாக்க வேண்டும். அவர்கள் சுரண்டப்படவோ அல்லது பொ ருத்தமற்ற வேலையில் தள்ளப்படவோ கூடாது என்ப தை உறுதி செய்ய வேண்டும்.  குழந்தைகள் ஆரோக்கி யமான முறையில், சுதந்திரத்துடனும், கண்ணியத்துட னும் வளர அரசு வாய்ப்புகளை வழங்க வேண்டும்.

வேலை வாய்ப்பு

பிரிவு 41 அனைவருக்கும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு கடமைப்பட்டுள்ளது. அனை வருக்கும் கல்வி உரிமையை அரசு வழங்க வேண்டும். அரசின் பொருளாதாரத் திறன் மற்றும் வளர்ச்சியி னைப் பொறுத்து வேலையின்மை, முதுமை, நோய், இயலாமை மற்றும் தகுதியற்ற பிற சூழ்நிலைகளில் அரசு பொது உதவியை வழங்க வேண்டும்.

நியாயமான ஊதியம் - வேலை நேரம் பாதுகாப்பான பணிச்சுழல்  

 பிரிவு 42 மகப்பேறு நிவாரணம் உட்பட நியாயமான மற்றும் மனிதாபிமான வேலை நிலைமைகளை அரசு வழங்க வேண்டியதன் அவசியத்தைக் கட்டாயப்படுத்துகிறது. இதன் பொருள் அரசாங்கம் அனைத்து தொழிலா ளர்களுக்கும் நியாயமான ஊதியம், மற்றும் நியாய மான வேலை நேரங்களை உறுதி செய்ய வேண்டும். அதாவது நியாயமான ஊதியங்கள், நியாயமான வேலை நேரம் மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்கள் மற்றும் வேலை நிலைமைகள் உட்பட தொழிலாளர்கள் நியாய மாகவும் கண்ணியமாகவும் நடத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். அத்துடன் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்க ளுக்குத் தேவையான அனைத்து  ஆதரவு நடவடிக்கை களையும், சலுகைகளையும் வழங்க வேண்டும். இதில் ஊதிய விடுப்பு, மருத்துவச் செலவுகள் மற்றும் பிற கொடுப்பனவுகளும் அடங்கும்.  (இது அரசாங்க நடவ டிக்கைகளுக்கு வழிகாட்டும் கொள்கையாக இருந்த போதிலும், நீதிமன்றங்கள் உழைக்கும் பெண்களின் உரிமைகளை நிலைநிறுத்த மகப்பேறு சலுகைச் சட்டம் போன்ற பிற சட்டங்களுடன் இணைத்து இந்த ஷரத்தைப் பயன்படுத்தியுள்ளன என்பது கவனிக்கத்தக்கது).

கண்ணியமான வாழ்க்கைத்தரம்

பிரிவு 43 விவசாய, தொழில்துறை மற்றும் பிற தொழிலா ளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் வாழ்க்கை ஊதியம் மற்றும் நியாயமான ஊதி யத்தைப் பெறுவதையும், கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் நிலையை உத்தரவாதப் படுத்தும் வகையில்  வேலை செய்வதையும் உறுதி செய்ய அரசு பாடுபட வேண்டும்.  தொழிலாளர்கள் ஓய்வு நேரத்தை அனுபவிக்கவும் சமூக மற்றும் கலாச் சார நடவடிக்கைகளில் பங்கேற்கவும் வாய்ப்புகளை வழங்க அரசு பாடுபட வேண்டும்.  கிராமப்புறங்களில் குடிசைத் தொழில்களின் வளர்ச்சியை அரசு ஊக்கு விக்க வேண்டும். அதற்கு கிராமப்புறங்களில் தனிநபர் அல்லது கூட்டுறவு அடிப்படையில் குடிசைத் தொ ழில்களை ஊக்குவிப்பதையும் இது வலியுறுத்து கிறது. (சட்டத்தின் மூலமாகவும், பொருளாதார அமைப் பினை உருவாக்குவதன் மூலமும் அரசு இந்த நோக் கங்களை அடைய முடியும்). தொழிலாளர்களுக்கு அதிகாரமளித்தல் பிரிவு 43A 1976 ஆம் ஆண்டு 42 ஆவது திருத்தத்தால் சேர்க்கப் பட்டது. தொழில்களின் நிர்வாகத்தில் (“எந்தவொரு தொ ழிலிலும் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், நிறுவனங்கள் அல்லது பிற அமைப்புகளுக்கு”) தொழிலாளர்களின் பங்களிப்பைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க அரசைக் கட்டாயப்படுத்துகிறது. தொழிலாளர்க ளுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தொழில்துறை நிறு வனங்களுக்குள் முடிவெடுப்பதில் ஈடுபாட்டை ஊக்கு விப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. “பொருத்த மான சட்டம் அல்லது வேறு ஏதேனும் வழியில்” இதனை அரசு செயல்படுத்த வேண்டும். இருப்பினும், இவை அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் சட்டங்களை வகுப்பதில் வழிகாட்டுதல்களாக மட்டுமே இருக் கின்றன.

சமூக அநீதி - சுரண்டலிலிருந்து பாதுகாப்பது அவசியம்

பிரிவு 46 மக்களில் நலிந்த பிரிவுகளின் அதாவது ஒதுக்கப் பட்ட சமூகங்களின் குறிப்பாக பட்டியல் சாதிகள் மற்றும் பட்டியல் பழங்குடியினரின் கல்வி மற்றும் பொருளா தார நிலையை மேம்படுத்த அரசு சிறப்பு நடவடிக்கை களை எடுக்கக் கடமைப்பட்டுள்ளது.  சமூக அநீதி மற்றும் சுரண்டலில் இருந்து இவர்களைப் பாதுகாப்ப தையும் இது கட்டாயப்படுத்துகிறது.  நியாயமற்ற முறை யில் நடத்துதல் மற்றும் சுரண்டலில் இருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை இது வலியுறுத்துகிறது.  

நல்லிணக்கம் - சகோதரத்துவம்

பிரிவு 51A(e) மத, மொழி, பிராந்திய அல்லது பிரிவு வேறுபாடு களைத் தாண்டி, அனைத்து இந்தியர்களிடையேயும் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வளர்ப்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படைக் கடமை என்பதை கோடிட்டுக் காட்டுகிறது. பெண் களின் கண்ணியத்தினை இழிவுபடுத்தும் எந்தவொரு நடைமுறைகளையும் கைவிட வேண்டும் என்ற கடமையும் இதில் அடங்கும்.  அதாவது பெண்களின் கண்ணியத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்கள் மற்றும் அணுகு முறைகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்து கிறது. எனவே, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உறுதிசெய்யப்பட்டுள்ள இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியே மே 20 மாபெரும் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. முழுவெற்றி பெற அனைத்துப்பகுதி தொழிலாளர்களையும் அணிதிரட்டுவோம்!