articles

img

துள்ளிக்குதிக்கும் 90, 80! அள்ளிக்குவிக்கும் பதக்கங்கள்

துள்ளிக்குதிக்கும் 90, 80! அள்ளிக்குவிக்கும்  பதக்கங்கள்

வயது வெறும் எண்ணிக்கைதான் என்பதை நிரூபிக்கும் வகையில், கோவை ஹோப் காலேஜ் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் - லட்சுமி தம்பதியினர், ஓய்வு பெற்ற பிறகும் மூத்தோர் தடகளப் போட்டிகளில் உலகம் முழுவதும் பங்கேற்று நூற்றுக்கணக்கான பதக்கங்களை வென்று வருகின்றனர். 90 வயதான கணவரும், 80 வயதான மனைவியும் இன்றளவும் உடல்திறன் மற்றும் தன்னம்பிக்கையின் உச்சத்தைத் தொடும் அசாத்திய ஜோடி இவர்கள். லோகநாதன் தனியார் பொறியியல் கல்லூரியிலும், லட்சுமி அரசு மேல்நிலைப்  பள்ளியிலும் உடற்கல்வி இயக்குநர் களாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். சிறுவயது முதலே விளையாட்டில் ஈடு பாடு கொண்ட லோகநாதன், 9-ஆம் வகுப்பு  படிக்கும் போதே மாநில அளவிலான போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற வர். அந்த உத்வேகம் இன்று 90 வயதி லும் தொடர்கிறது. ஓய்வுக்குப் பிறகு மாவட்டம், மாநிலம், தேசியம், ஆசியம் என அடுத்தடுத்து மூத்தோர் தடகளப் போட்டிகளில் கலந்து கொண்டு பல நூறு பதக்கங்களையும் கோப்பைகளையும் குவித்துள்ளார். தனது வெற்றியை இணையர் லட்சுமி யுடன் பகிர்ந்து கொள்ள விரும்பிய லோக நாதன், ஓய்வு பெற்ற பிறகு அவருக்கும்  பயிற்சி அளித்து மூத்தோர் போட்டி களுக்கு அனுப்பி வைத்தார். இன்று 80 வய திலும் உலகின் பல நாடுகளில் நடைபெறும்  சர்வதேச மாஸ்டர்ஸ் தடகளப் போட்டி களில் தங்கம், வெள்ளி, வெண்கலம் எனப் பதக்கங்களை அள்ளி வருகிறார் லட்சுமி. பணி ஓய்வுக்குப்பின் பதக்க வேட்டை  “திருமணமான புதிதில் முதல் குழந்தை  பிறந்த நிலையிலும் என்னை உயர்கல்வி படிக்க வைத்தவர் என் கணவர். 8 பட்டப் படிப்புகள் முடித்தேன். உடற்கல்வி ஆசிரி யையாகப் பணியாற்றினேன். ஓய்வுக்குப் பிறகு வீட்டில் சும்மா இருப்பதை விட ஏதா வது சாதிக்க வேண்டும் என்று என் கண வர் ஊக்கமளித்தார். அவரே பயிற்சியும் கொடுத்தார். இன்று பின்லாந்து உள்ளிட்ட  பல நாடுகளில் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்றிருக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் லட்சுமி. 2011-இல் ஜார்க்கண்டில் நடந்த போட்டியின்போது காலில் பலத்த காயம் ஏற்பட்டு, “இனி விளையாட முடியாது” என மருத்துவர்கள் கைவிரித்த நிலை யிலும், யோகா, உடற்பயிற்சி, மனப்பயிற்சி யால் முழுமையாகக் குணமடைந்து அடுத்த ஆண்டே ஆசியப் போட்டியில் பதக்கம் வென்றார் லட்சுமி. “தன்னம் பிக்கை இருந்தால் எந்த வயதிலும் சாதிக்க லாம்” என்பதே அவரது மந்திரம். வளையல்களான பதக்கங்கள் 90 வயதான லோகநாதன் இப்போது போட்டிகளில் பங்கேற்பதைத் தவிர்த்தா லும், மனைவியின் ஒவ்வொரு வெற்றி யையும் கொண்டாடுகிறார். “எங்கள் தங்கப் பதக்கங்களை உருக்கி வளைய லாகச் செய்து என் மனைவி கையில் அணிந்திருக்கிறேன். இது எங்கள் வெற்றி யின் நினைவுச் சின்னம்” எனப் புன்ன கைக்கிறார். குழந்தைகளும் பேரக்குழந்தைகளும் சர்வதேசப் போட்டிகளுக்கு வந்து உற்சா கப்படுத்துவதால், இந்தத் தம்பதியர் இளைய தலைமுறைக்கு உந்து சக்தி யாகத் திகழ்கின்றனர். “மாணவர்கள் எங்க ளைப் பார்த்து விளையாட்டில் ஆர்வம்  கொள்ள வேண்டும். மூத்தோருக்கான போட்டிகளுக்கு அரசு நிதி உதவி அளித் தால் இன்னும் பலர் பங்கேற்பார்கள்” என்கிறார் லட்சுமி. நரைத்த முடியும், தளர்ந்த மேனியும்  ஒருபுறம் இருந்தாலும், தடகளப் போட்டி களில் இவர்கள் குவித்து வரும்  பதக்கங்கள், இளைய தலைமுறையின ருக்கே சவால் விடுகின்றன. ஒவ்வொரு பந்தயத்திலும் ஒருவரையொருவர் உற்சா கப்படுத்தி, தங்களின் அசைக்க முடியாத அன்பையும், அணையாத ஊக்கத்தையும் வெளிப்படுத்தும் இவர்களின் பயணம், எண்ணற்றோருக்கு உத்வேகத்தைத் தருகிறது. தோல்விகளைக் கண்டு துவ ளாமல், தங்கள் காதல் துணையுடன் கைகோர்த்து இவர்கள் ஓடும் ஒவ்வொரு மைலும், ஒரு வீர காவியம்.