articles

img

தஞ்சையில் வடிவமைக்கப்படும் இந்திய மொழி நாள்காட்டிகள்

தஞ்சையில் வடிவமைக்கப்படும் இந்திய மொழி நாள்காட்டிகள்

சிவகாசி என்பது பட்டாசுகளுக்கு மட்டுமல்ல; நவீன அச்சுப் பணிகளுக்கும் புகழ் பெற்ற நகரம். இந்நகரிலிருந்துதான் இந்தியா முழுவதற்கும் நாள்காட்டிகள் (காலண்டர்கள்) அச்சடித்து அனுப்பப்படுகின்றன. முன்பு தமிழ் நாள்காட்டிகள் மட்டுமே இங்கு அச்சடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த பல ஆண்டுகளாகப் பல்வேறு இந்திய மொழிகளில் நாள்காட்டிகள் அச்சாகின்றன. அந்த நாட்காட்டிகளுக்கான வடி வமைப்பு மற்றும் பல மொழிகளில் தட்டச்சு  செய்யும் அரிய பணி தஞ்சாவூரில் நடை பெறுகிறது என்பதே புதிய மற்றும் கவ னிக்கத்தக்க செய்தியாகும். தஞ்சாவூர் மாநகரின் கூட்டுறவு காலனியில் சற்றே ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ளது முல்லைபாரதி பிரிண்டர்ஸ் என்னும் அச்சகம். இந்த அச்சகத்தில் வடிவ மைக்கப்படும் நாள்காட்டிகள்தான் இந்தியா முழுமைக்கும் செல்கின்றன. இந்திய அளவில் நாள்காட்டிகள் அச்சிடுவது என்றாலே சிவகாசிதான். அங்குதான் அதிக எண்ணிக்கையிலான அச்சகங்கள் நிறைந்துள்ளன. அங்  குள்ள அச்சகங்களுக்குத் தேவை யான நாட்காட்டிகளை வடிவமைக்கப் பல்துறை வரைகலை (Graphic Desig ners) நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். அவர்களில் முன்னணி வகிப்பதுடன் தனிச்சிறப்புடன் ஒளிர்பவர் தஞ்சாவூரைச்  சேர்ந்த முல்லைபாரதி பிரிண்டர்ஸ் அதம்பை வை. இராமமூர்த்தி ஆவார். இவர் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலை யாளம், தெலுங்கு, கன்னடம், மராத்தி,  குஜராத்தி, பஞ்சாபி, ஒடியா, பெங்காலி,  அஸ்ஸாமி ஆகிய மொழிகளுடன், தேவ நாகரி எழுத்து வடிவத்திலும், கிரந்த எழுத்து வடிவத்திலும் படிக்கவும், எழுத வும், மேலும் கணிப்பொறியில் பிழை யின்றி அச்சிடும் தனித்துவமான ஆற்றல்  பெற்றவர். சிவகாசியில் உள்ள புகழ்பெற்ற அச்ச கங்களுக்கு இவர் பல ஆண்டுகளாக இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்ன டம், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஒடியா,  பெங்காலி, அஸ்ஸாமி ஆகிய பத்து மொழிகளில் மாதாந்திர நாட்காட்டிகளை நேர்த்தியாக வடிவமைத்து வழங்கி வருகிறார். இவரது சிறப்பான மற்றும் துல்லிய மான வடிவமைப்பின் காரணமாகவே ஆண்டுதோறும் சிவகாசியிலிருந்து இந்திய மொழிகளில் அச்சிடும் பணிகள்  இவருக்குத் தொடர்ந்து வந்துகொண்டி ருக்கின்றன. எம்.ஏ., ஆங்கிலம், எம்.ஏ., மொழி பெயர்ப்பியலுடன் முனைவர் பட்ட ஆய்விலும் ஈடுபட்டுள்ள இவர், மலை யாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிரு தம் ஆகிய மொழிகளில் பல்கலைக்கழ கங்களில் பயின்று பட்டயம் (டிப்ளமோ) பெற்றுள்ளார். இந்தியில் பிரவேசிகா நிலை வரை படித்துள்ளார். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மொழி களில் இதுவரை ஆயிரக்கணக்கான நூல்களை அச்சிட்டு வழங்கியுள்ளார். பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக் கும் பல நூல்களை அச்சிட்டுத் தந்துள்  ளார். மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்  கும் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கி யுள்ளார் என்பது இவரது பன்னாட்டுச் சேவையை எடுத்துக்காட்டுகிறது. திறந்த எழுத்து மீட்டுருவாக்கம் வங்கிகள் மற்றும் மத்திய அரசு நிறு வனங்கள் பலவற்றுக்குத் தேவைப்படும் இருமொழி, மும்மொழி பணிகளையும் இவர் திறம்படச் செய்து தருகிறார். தமி ழகக் கல்வெட்டுகளில் உள்ள கிரந்த எழுத்து வடிவத்தை நேரடியாகத் தட்டச்சு  செய்து அச்சிடுவது இவரது மிக முக்கிய மான தனிச்சிறப்பாகும். கிரந்த எழுத்து  வடிவத்தில் ஏராளமான ஓலைச்சுவடி களும் பழைய நூல்களும் உள்ளன.  அவற்றை மீட்டுருவாக்கம் (Restoration)  செய்யும் பணியில் இவரது பங்களிப்பு மகத்தானது எனலாம். இத்தனைப் பெருமைக்குரிய இவர்,  பத்து மொழிகளில் நாட்காட்டி வடிவ மைத்துத் தந்தாலும், தன் தாய்மொழி யான தமிழில் இவர் இதுவரை நாட் காட்டி அச்சிட வாய்ப்பு வந்ததில்லை என்ற  சிறு வருத்தம் இவருக்கு இருக்கிறது. கேள்வி: பாரம்பரியமிக்க தமிழ்நாடு அரசு  அச்சகத்தில் சிறப்பு மொழி கணினி  வடிவமைப்பாளர் பணி உருவாக் கப்பட்ட காலத்திலிருந்து, தகுதி யான விண்ணப்பதாரர் இல்லாத தால் நீண்ட காலமாக காலியாக உள்ளது. ஒரே ஒரு பணியிடம் மட்டுமே உள்ள இப்பணிக்குத் தகுதி யான நபர் நீங்கள் மட்டும்தான். அப்பணிக்குச் சென்றிருக்கலாமே? இராமமூர்த்தியின் பதில்: இப்பணிக்கு இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்ன டம், சமஸ்கிருதம் (தேவநாகரி மற்றும் கிரந்தம்) என்ற ஆறு மொழிகளில் நான்கு  மொழிகளில் அச்சிடத் தெரிந்தால் போது மானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம் ஆகிய நான்கு மொழி களில் டிப்ளமோவும் பெற்றுள்ள எனக்கு,  இதில் குறிப்பிடப்பட்ட ஆறு மொழிகளி லும் விரைவாகவும், நேரடியாகவும் அச்சி டத் தெரியும். ஆனால், வயதைக் காரணம் காட்டி என்னைத் தேர்வு செய்யவில்லை. இப் பணிக்கு இதுவரை தகுதியான யாரும் இல்லாத நிலையில், வயதைத் தளர்த்தி எனக்கு இப்பணியை வழங்கினால் உட னடியாகச் செல்வதற்கு நான் தயாரா கவே உள்ளேன். சென்னையில் ‘தீக்கதிர்’ ஆரம்பிக்கப் பட்ட 1993ஆம் ஆண்டிலிருந்து சில கணிப்பொறி வடிவமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார். அப்போது தீக்கதிர் பொது மேலாளராகப் பணி யாற்றிய தோழர் சி. கல்யாணசுந்தரம் அவர்களின் வழிகாட்டுதலால்தான் தான் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளேன் என பெருமையுடன் இராமமூர்த்தி நினைவு கூருகிறார். தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கணிப்பொறித் துறை யில், கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக  இத்துறையில் நாளுக்கு நாள் தன்னை மெருகேற்றி, இந்திய மொழிகள் பல வற்றைத் திறம்படக் கற்று, அச்சிடும் தனிப்பெரும் ஆற்றல் படைத்தவர் அதம்பை வை. இராமமூர்த்தி என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.