“ரூ. 17 லட்சம் கோடி சொத்துக்கள் கொள்ளை போவதை ஏற்க முடியாது!”
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பால கிருஷ்ணன் சமூகவலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது: 17 லட்சம் கோடி ரூபாய்க்கு நிதி அமைச்சகம் சத்தமில்லாமல் நமது பொதுச்சொத்துக்களை மொத்த விற்பனை செய்யவுள்ளது. பொருளாதார விவகார துறை (DEA) முன்னெடுப்பில் 852 பொதுத் துறைகள், பொது - தனியார் ‘கூட்டு முயற்சி’ (PPP) என்ற திட்டத்தின் கீழ் தனி யாருக்கு வழங்குவதற்காக பட்டியலிடப் பட்டுள்ளன. பல தலைமுறைகளாக சேர்த்த பொதுச்சொத்து நம் கடும் உழைப்பில் உருவான பொதுச்சொத்துக்கள், தனியார் மற்றும் வெளிநாட்டு ஏகபோக நிறுவனங் களுக்கு தாராளமாக தாரைவார்க்கப் படவுள்ளன. சாலை, ரயில் பாதை, துறை முகம், மின்சாரம் உள்ளிட்ட பொதுத் துறை சொத்துகள் - நிலங்கள், பல தலை முறைகளாக தொழிலாளர் வியர்வை யால் கட்டியமைத்த பொதுத் துறை களின் சொத்துக்களை வாடகைக்கு விடுகிறார்கள். இந்த திட்டத்தை ‘பிபிபி’ என சொல்லிக் கொள்வது வெற்று ஏமாற்று வார்த்தையாகும். பொது மக்களுக்கு நட்டம், தனியா ருக்கு லாபம் என்பதுதான் ‘பிபிபி’ என்ப தன் உண்மையான விரிவாக்கம். பயன்படுத்துவதற்கான வாடகை யை மட்டும் செலுத்தி, தேய்மானத்தை மொத்தமும் பொதுமக்கள் தலையில் சுமத்திவிட்டு, லாபத்தை அள்ளிக் கொண்டு செல்வார்கள். இவ்வாறு பழைய நிறுவனங்கள் மட்டுமன்றி, புதிதாக கட்டமைத்த நிறுவனங்களும் பெரு முதலாளிகள் வசம் தரப்படுகின்றன. ஏழை மக்களிடம் நிலத்தை வாங்கும் போது, பொதுத்துறைக்காக என்று சொல்லித்தான் அரசாங்கம் பெற்றுக் கொள்ளும், ஆனால், பின்னர் கடற்கரை முதல், நெடுஞ்சாலை வரை எல்லா கட்ட மைப்பும் தனியாரின் பராமரிப்பில் செல்லும். ஏற்கெனவே இயங்கிவரும் ரயில் நிலையங்கள், சாலைகள், துறை முகங்களை புதுப்பித்து இயக்குவதாகச் சொல்லி தனியாரிடம் கொடுத்து அதில் பல ஆண்டுகள் நோகாமல் வாடகை /சுங்கம் வசூலிக்க அனுமதி தரவுள்ளார்கள். நட்டம் மக்களுக்கு... லாபம் தனியாருக்கு... இதில் வணிக சாத்தியம் குறைவான திட்டங்களுக்கு 40 சதவிகிதம் வரை அரசே மானியம் கொடுத்து தனியாரிடம் ஒப்படைக்கவுள்ளது. திட்டம் தோல்வி யடைந்தால் மொத்த நட்டமும் மக்க ளுக்கு. வெற்றியானால், லாபம் மொத்த மும் தனியாருக்கு. இது வேறொன்றுமல்ல, சட்டப்படி யான கொள்ளை. சி.ஏ.ஜி. கண்காணிப்பு கூட இருக்காது என்பதால் பொதுமக்கள் இந்தக் கொள்ளையை கண்காணிக்கக் கூட வழியிருக்காது. தனியார் தங்களுக்கு தேவையான மூலதனத்தை வங்கியில் கடனாக வாங்குவார். மானியத்தை அரசிடம் பெற்றுக் கொள்வார். வங்கிக் கடனையாவது முழுமையாக செலுத்துவாரா இல்லை வராக்கடனாக நிறுத்தி வைத்து அதையும் கொள்ளை யடிப்பாரா? என்று சொல்ல முடியாது. அதிகாரக் குவிப்பின் பின்னுள்ள சூழ்ச்சி மாநில அரசுகள் கட்டமைத்த 620 திட்டங்களையும் இதில் சேர்த்துள் ளார்கள். பாஜக விரும்பும் ஒற்றை அதி காரக் குவிப்பின் பின்னுள்ள சூழ்ச்சியை யே இது எடுத்துக் காட்டுகிறது. ஒருபக்கம் நூறு நாள் வேலைக்குக் கூட வேட்டு வைத்து, தொழிலாளர்களை யும், ஏழை எளிய மக்களையும் போரா ட்டக் களத்தில் தள்ளியுள்ளது மோடி அரசு. மறு பக்கத்திலோ 17 லட்சம் கோடி ரூபாய், நம் நாட்டு மக்கள் வரிப்பணத் தில், நம் தொழிலாளர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட பொதுச் சொத்துக் களைக் கொள்ளையடிக்கிறது. இந்த நவ தாராளமய திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.
