articles

img

சிறுபான்மையினர் உரிமை காப்பது ஜனநாயக சக்திகளின் கடமை! - செந்தில்குமார்

சிறுபான்மையினர் உரிமை காப்பது ஜனநாயக சக்திகளின் கடமை!

மத, இன, மொழி சிறுபான்மை யினரின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களின் நலன்களை மேம்படுத்தவும் 1992 ஆம்  ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை ‘உலக சிறுபான்மையினர் உரிமை தினத்தை’ அறிவித்தது. ஆனால், இன்று உலகம் முழுவதும் தீவிர வலது சாரி மற்றும் பிற்போக்கு சக்திகளால் சிறு பான்மையினரின் உரிமைகள் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப் பட்டுள்ளன. சர்வதேச அளவில் வளரும் வெறுப்பு அரசியல் முதலாளித்துவ சமத்துவமின்மை யால் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளுக்கு, குடியேறிய சிறு பான்மையினரே காரணம் என்று அமெரிக்காவின் டொனால்டு டிரம்ப் போன்ற தலைவர்கள் குற்றம் சாட்டு கின்றனர். பிரிட்டனில் ஆளும் வர்க்கத் தின் இனவெறிப் பேச்சுகளால், இந்தி யப் பெண்கள் மீதான பாலியல் வன் கொடுமைகள் உள்ளிட்ட வன்முறை கள் அரங்கேறுகின்றன. அண்டை நாடான வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வழிபாட்டு உரிமைகளும் வீடுகளும் தாக்கப்படுகின்றன. இலங்கையிலும் ஆட்சி மாற்றத்திற்குப் பின்னரும் தமிழ் மக்கள் அவ்வப்போது அச்சப்படும் சூழலே நீடிக்கிறது. இந்தியாவில் பறிக்கப்படும் உரிமைகள் இந்திய அரசியலமைப்புச் சட்டப்  பிரிவுகள் 29 மற்றும் 30 சிறுபான்மை யினருக்குப் பாதுகாப்பு வழங்கினா லும், இன்று அதிகாரத்தில் உள்ள சங்பரி வார் சக்திகளால் அந்த உரிமைகள் திட்டமிட்டுப் பறிக்கப்படுகின்றன. மதமாற்றத் தடைச் சட்டம்: சத்தீஸ்கர் மாநிலத்தில் சொந்த விருப்பின் பேரில் வேலைக்குச் சென்ற கன்னியாஸ்திரிகள் மத மாற்றக் குற்றச்சாட்டில் கைது செய்யப் பட்டு, தேசத் துரோக வழக்குகளுக்கு ஆளாக்கப்பட்ட னர். பாஜக ஆளும் பல மாநிலங்களில் கொண்டு வரப் பட்டுள்ள கடுமையான மதமாற்றத் தடைச் சட்டங்கள், குற்றம் சுமத்தப் பட்டவரே தான் நிரபராதி என நிரூபிக்க வேண்டும் என்ற ஜனநாயக விரோத அம்சத்தைக் கொண்டுள்ள ன. வக்பு வாரி யத் திருத்தச் சட்டம்: வக்பு சொத்துக்களை நிர்மூலமாக்கு வதை நோக்க மாகக் கொண்டு இச்சட்டம் கொண்டுவரப் படுகிறது. இஸ்லாமியர் அல்லாத வர்கள் வாரிய அதிகாரிகளாக இருக்க லாம் என்பது போன்ற விதிகள் மத உரி மைகளில் தலையிடும் செயலாகும். வாக்காளர் மற்றும் குடியுரிமைத் திருத்தம்: தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் குடியுரிமைத் திருத்தச் சட்டம் ஆகியவற்றின் மூலம் சிறுபான்மையினரைத் தங்கள் குடியுரிமையை நிரூபிக்கச் சொல்லி அலைக்கழிப்பதும், அவர்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறிக்க முயல்வதும் நவீன பாசிசப் போக்காகும். கட்டமைக்கப்படும் வெறுப்புப் பிரச்சாரம் உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர் பேரணி நடத்தியதற்காக இளைஞர்கள் சிறையிலடைக்கப்படுகின்றனர். “அயோத்தியை விட்டு முஸ்லிம்கள் வெளியேற வேண்டும்” போன்ற வெறுப்புப் பேச்சுகள் பொதுவெளியில் உமிழப்படுகின்றன. மகாராஷ்டிரா, குஜராத் மாநிலங்களில் பாரம்பரிய நடனமான ‘கர்பா’ ஆட வருபவர்களிடம் அடையாள அட்டை கேட்கப்படுகிறது. கர்நாடகாவில் புகழ்பெற்ற எழுத்தாளர் பானு முஸ்தாக் போன்றவர்கள் மிரட்டப்படுகின்றனர். நீதிமன்றத் தீர்ப்புகளிலும் ஒருதலைப்பட்சமான போக்குகள் தென்படுகின்றன. குடியுரிமைப் போராட்டக் கைதிகள் உமர் காலித் போன்றவர்கள் சிறையில் வாட, மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங்  தாக்கூர் போன்றவர்கள் விடுவிக்கப்படு கின்றனர். தமிழகத்தின் நிலை தமிழகத்தில் திருப்பரங்குன்றம் தர்கா விவகாரம் போன்ற பிரச்சனை களை அரசு சிறப்பாகக் கையாண்டது பாராட்டுக்குரியது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் போன்றவர்கள் பெரும்பான்மை மக்களுக்குச் சாதகமாகவே தீர்ப்புகள் இருக்க வேண்டும் என மிரட்டல் விடுக்கின்றனர். திண்டுக்கல் போன்ற இடங்களில் வரலாற்றுத் திரிபுகளை உருவாக்கி சிறுபான்மையினருக்கு எதிராகக் கதையாடல்கள் கட்டமைக்கப் படுகின்றன. வர்க்க ஒற்றுமையே தீர்வு நாட்டின் பிரதமரும் உள்துறை அமைச்சருமே கூட சிறு பான்மையினரை அந்நியர்களாகவும், குடியேறியவர்களாகவும் சித்தரிப்பது வேதனையானது. முதலில் சிறுபா ன்மையினரின் அடையாளங்கள் பெரும்பான்மை அடையாளத்தைச் சிதைப்பதாகக் கட்டுக்கதைகளை உருவாக்குகின்றனர். பிறகு, சிறு பான்மை அடையாளத்தை அழித்தால்தான் நம் அடையாளத்தை மீட்டெடுக்க முடியும் என மக்களைத் திரட்டுகின்றனர். உலகம் முழுவதும் முதலாளித்துவ சமூக அமைப்பால் உருவான பசி, வேலையின்மை போன்ற அடிப்படைப் பிரச்சனைகளுக்கு எதிரான குரல்கள் ஒலிக்காமல் இருக்க, மத மற்றும்  இன அடையாளங்களை முன்னி றுத்தி தீவிர வலதுசாரிகள் செயல்படு கின்றனர். இந்தியாவில் ஆளும் வர்க்கம் மதத்தைத் தனது ஆயுத மாகப் பயன்படுத்துகிறது. இந்த நவ தாராளவாத மற்றும் நவபாசிசத் தன்மைகளை எதிர்கொள்ள, உழைக்கும் மக்களின் வர்க்க ஒற்று மையே இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும். சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பாது காப்பதே உண்மையான ஜனநாயக மாகும்.