articles

img

எரிகின்ற கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் புதிய நான்கு தொகுப்புச் சட்டங்கள் - கே. விஜயன்

எரிகின்ற கொள்ளியில் எண்ணெயை ஊற்றும் புதிய நான்கு தொகுப்புச் சட்டங்கள்

நாடு முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் என்ற பெயரில் உழைப்பைச் சுரண்டி, உற்பத்தியில் முதலாளிகளுக்கு மிக  அதிக லாபத்தைப் பெற்றுத் தரும் வஞ்சகமான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு செய்து வருகிறது. நீம், அவுட் சோர்சிங், நேபா, அப்ரண்டிஸ் எனப் பல்வேறு பெயர்களில் சுமார் 12  கோடி தொழிலாளர்கள் சட்டப் பாது காப்பிற்கு வெளியே வைக்கப்பட்டுள் ளனர். இந்நிலையில், 2025 நவம்பர் 21 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய நான்கு சட்டத் தொகுப்புகள், இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை எவ்வித எதிர்ப்பும் காட்ட முடியாத வர்களாக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கின்றன.  ஒப்பந்தக்காரரே முதலாளி: சட்டச் சதி  புதிய சட்டத் தொகுப்பின்படி, ஒப்பந்தக்காரரே ‘வேலையளிப்பவ ராக’ (Employer) மாற்றப்பட்டுள்ளார். இதற்கு முன் இருந்த ‘ஒப்பந்தத் தொழிலாளர் சட்டம் 1970’-ல், ஒப்  பந்தக்காரர் யாருடைய உற்பத்திக் காக வேலை செய்கிறாரோ, அந்த நிறுவனத்தின் முதன்மை நிர்வாகமே (Principal Employer) பொறுப்பாவார். தற்போது நிர்வாகத்திற்கும் தொழி லாளிக்கும் இடையிலான நேரடித் தொடர்பு சட்டப்பூர்வமாகத் துண்டிக்க ப்பட்டுள்ளது. ‘ஒழுங்குபடுத்துதல் மற்றும் ஒழித்தல்’ என்ற சொற்களே சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. அன்றே 1970- களிலேயே மார்க்சி ஸ்ட் கட்சி நாடாளுமன்றத்தில் எச்சரித்தபடி, ஒப்பந்த முறை இனி நிரந்தரம் என்பது மோடி அரசால் உறுதி செய்யப்பட்டுவிட்டது.  50 தொழிலாளர் வரம்பும் 5 ஆண்டு உரிமமும்  முன்பு 20 தொழிலாளர்களுக்கு மேல் இருந்தால் உரிமம் பெற வேண்டும் என்ற விதி, தற்போது 50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ கத்தில் ஏற்கனவே அதிமுக அரசு இதனை 50 ஆக உயர்த்தி இருந்த நிலையில், தற்போது ஒன்றிய அரசு நாடு முழுவதும் இதைப் பொதுவாக்கி யுள்ளது. மேலும், ஒப்பந்த அனுமதி யானது 2 ஆண்டு களில் இருந்து 5 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு தொழிலாளி ஓய்வுபெறும் வரை ஒப் பந்தத்  தொழி லாளியாகவே நீடிக்கும் அவல நிலை உருவாகிறது.  ஒவ்வொரு 5 ஆண்டிற்கும் பழைய தொழிலாளர்கள் வெளி யேற்றப்பட்டுப் புதியவர்கள் உள் வாங்கப்படும்போது, பிஎஃப் (PF) கணக்குகளின் எண்ணிக்கையை வைத்து வேலைவாய்ப்பு பெருகி யுள்ளதாக மோடி அரசு புள்ளிவிவர மோசடி செய்கிறது. உண்மையில், உழைப்பவருக்கு எவ்விதப் பணிப் பாதுகாப்பும், போனஸ் அல்லது இதர சலுகைகளும் முறையாகக் கிடைக்காது.  ஊதியக் குறைப்பும் அட்டவணைத் தொழில் ஒழிப்பும்  தமிழகத்தில் நிலவும் 93 வகை யான ‘அட்டவணைத் தொழில்கள்’ (Scheduled Employment) மற்றும் அதற்கான குறைந்தபட்ச ஊதிய முறையைப் புதிய தொகுப்பு ஒழித்து விடும். ஒன்றிய அரசு அறிவித்துள்ள ‘ அடிப்படை ஊதியம்’ (Floor Wage) தினசரி ரூ. 178 என்பது மாபெரும் ஏமாற்று வேலையாகும். தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளிக்கு ஒரு நாளைக்கு ரூ. 934 ஊதியம் நிலவும் சூழலில், ரூ. 178-ஐ அடிப்படையாகக் கொண்டு மாநில அரசுகள் ஊதி யத்தை நிர்ணயம் செய்ய முற்பட் டால், அது வருமானத்தைப் பாதியாகக் குறைத்துவிடும்.  உதார ணமாக, உத்தரப்பிரதேசத்தில் ரூ. 422, தில்லியில் ரூ. 785 என நிலவும் ஊதிய விகிதங்களை இந்த ரூ. 178 என்ற மிகக்குறைந்த வழிகாட்டுதல் ஒட்டுமொத்தமாகக் கீழ்நோக்கி இழுத்துச் செல்லும் அபாயம் உள் ளது. சுரங்கத்தில் வேலை செய்பவர் முதல் சமதளத்தில் பணி செய்பவர் வரை அனைவரையும் ஒரே தட்டில் வைப்பது உழைப்புச் சுரண்டலாகும்.  சட்டப் பாதுகாப்பிலிருந்து வெளியேற்றம்  புதிய ‘தொழிலுறவுத் தொகுப்பின்’ படி, தொழிற்சாலைகளில் அமைக் கப்படும் குறைதீர்ப்புக் குழுவில் நிர்வாகத்தின் வருகைப் பட்டியலில் (Muster Roll) பெயர் உள்ள தொழிலா ளர்கள் மட்டுமே இடம்பெற முடியும். ஒப்பந்தத் தொழிலாளர்களின் பெயர் இதில் இருக்காது என்பதால், அவர்கள் தொழிற் தகராறு செய்யவோ, சமரச அதிகாரி முன் னால் தாவா எழுப்பவோ முடியாது. உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளி சட்டரீதியான பாது காப்பிலிருந்து முற்றிலுமாக வெளி யேற்றப்படுகிறார்.  உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் சிதைப்பு  நிரந்தரப் பணிகளில் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தினால் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற ‘ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா’ (2001) உள்ளிட்ட பல முக்கியத் தீர்ப்புகள் இந்தப் புதிய சட்டங்களால் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளன. ஒப்பந்தத் தொழிலாளி தான் செய் யும் பணி நிரந்தரத் தன்மை வாய்ந்தது என்பதை நிரூபிக்கக் கூட வாய்ப்பில்லாமல் முடக்கப் பட்டுள்ளார்.  இந்திய அரசியல் சாச னப் பிரிவு 23-ன் படி சுரண்டல் முறை ஒழிக்கப்பட வேண்டும். ஆனால், மோடி அரசு சட்டத்தின் வாயிலாகவே சுரண்டலை அங்கீகரிக்கிறது. வெளி மாநிலத் தொழிலாளர்கள், கிக் தொழி லாளர்கள் மற்றும் ஒப்பந்தத் தொழி லாளர்களை நவீனக் கொத்தடிமை களாக்கும் இந்த மோசடியை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் கொந்தளிக்கட்டும்! தமிழ்நாட்டில் டிச.23 போராட்டத்தை வெற்றி பெறச் செய்வோம்!