articles

img

ஸ்கேன் இந்தியா

ஊழல்  

அரசாங்கத்தைக் குடும்பச் சொத்தாக மாற்றிவிட்டார் என்று அருணாச்சல பாஜக முதல்வர் பேமா காண்டு மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அவருடைய துணைவியார், சகோதரர் மற்றும் அண்ணி ஆகியோரின் பெயரில் உள்ள நான்கு நிறு வனங்களுக்கு 383.74 கோடி ரூபாய் மதிப்பி லான 146 அரசு வேலைகள் தரப்பட்டுள்ளன. இவையனைத்தும் தவாங் மாவட்டத்திற்கான விபரங்களாகும். ஒரே மாவட்டத்தில் இவ்வளவு என்றால், மொத்தம் எவ்வளவு இருக்கும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. பல பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகளே கோராமல் வேலைக்கான ஆணைகள் மூலமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தின் வழக்கு விசாரணையின்போது மாநில அரசே ஒப்படைக்கப்பட்டவையாகும். இந்த விவகா ரத்தில் பாஜகவின் தலைமை எந்தக் கருத்தும் சொல்லாமல் மவுனம் சாதித்து வருகிறது.  

வந்துருங்க..!  

திரும்பி வந்துருங்க... என்ற செய்தி ஒன்றிய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்குப் பறந்தது. அப்போதுதான் அவர் தில்லியில் இருந்து அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். கேங் கால்வாய் அமைக்கப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டதைக் கொண்டாடும் நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் வந்திருந்தார். ஆனால் இந்தக் கால்வாய்த் திட்டத்தில் பஞ்சாப்பை விட ராஜஸ்தானுக்கு அதிக நீர் தரப்படுகிறது என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். அது மட்டுமில்லாமல், அண்மையில் பாஜக எடுத்த பஞ்சாப் செனட் கலைப்பு, சண்டிகர் நிர்வாகத்தை சீர்குலைக்கும் வகையில் எடுத்த முடிவு ஆகியவையும் கடும் அதிருப்தியை மக்களிடம் ஏற்படுத்தியிருந்தன. இதனால் நிகழ்ச்சியில் எதிர்ப்பு இருக்கும் என்று பஞ்சாப் மாநில பாஜகவும் சொல்லிவிட்டது. இதனால்தான் அலறியடித்துக் கொண்டு அமைச்சரை திரும்ப வரச் சொல்லிவிட்டார்கள்.  

முற்றுப்புள்ளி

 பாஜககாரர்கள் கைகளில் சிக்கி படாதபாடு படுகிறார் மகாத்மா காந்தி. ஒடிசா சட்டமன்றத்தில் அக்கட்சியின் உறுப்பினர் சந்தோஷ் கதுவா, காந்தியைப் பற்றிய சர்ச்சைக் குரிய கருத்துகளை தெரி வித்தார். இத்தனைக்கும் நிதிநிலை அறிக்கை குறித்த விவாதம்தான் நடந்து கொண்டிருந்தது. சம்பந்தமேயில்லாமல் அவர் காந்தியைப் பற்றி விமர்சித்தார். எதிர்க்கட்சி கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அந்தக் கருத்து கள் அவைக்குறிப்பில் இடம் பெறாது என்று சபாநாயகர் கூறினார். ஆனால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று சொன்னார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வளாகத்தில் இருந்த காந்தி சிலை முன்பாகத் திரண்டு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி குறித்து தொடர்ந்து அபாண்டமாகப் பேசி வரு கிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண் டும் என்று அவர்கள் கருத்து தெரிவித்தனர்.  

வெற்றி  

பஞ்சாப் பல்கலைக்கழகத்தை சீர்குலைக்கும் முயற்சியை முறியடிப்பதில் முதல் கட்ட வெற்றியை மாணவர்கள் எட்டியுள்ளனர். பஞ்சாப் பல்கலைக்கழகப் பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரில் மாணவர் அமைப்புகள் கரம் கோர்த்தன. புதிதாகச் சேர வரும் மாணவர்கள் அனைவரும் ஒரு  பத்திரத்தில் கையொப்பம் இட வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டனர். போராட்டம், ஊர்வலம் நடத்துவதாக இருந்தால் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் அனுமதி வாங்கிவிட்டு தான் நடத்துவோம் என்று எழுதி அதில் கையெழுத்திடுமாறு கட்டாயப்படுத்தப் பட்டார்கள். இது மாணவர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஐந்து மாணவிகள் போராட்டத்தைத் தொடங்கினர். ஒரு மாத காலத்திற்குப் பின்னால், மாணவர்களின் கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. செனட் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதும் கோரிக்கைகளில் ஒன்றாகும். அதற்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.