articles

ஆளுநர்கள் ‘அட்ராசிட்டிஸ்’ - மதுரை சொக்கன்

ஆளுநர்கள் ‘அட்ராசிட்டிஸ்’

‘மாயி’ திரைப்படத்தில் வைகைப் புயல் வடிவேலு  நடிக்கும் நகைச்சுவை காட்சி ஒன்று உண்டு. பெண் பார்க்கப் போன இடத்தில் பெண்ணை  ‘வாம்மா மின்னலு’ என்று அழைத்தவுடன் பெண் மின்னல் வேகத்தில் தோன்றி மறைவார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி செவ்வாயன்று சட்டப்பேரவையில் மின்னலையும் மிஞ்சும் வகையில் வந்தவுடன் வெளிநடப்பு செய்துவிட்டார்.  பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி வெளிநடப்பு செய்யும் எண்ணத் தோடுதான் வந்திருந்தார். அதற்கான கார ணத்தை அவர் தேடும் முன்பே எடப்பாடி யாருக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஆளுநர் ரவி வெளிநடப்பு செய்துள்ளார்.  தன்னுடைய வெளிநடப்பிற்கு அவர் கூறும்  காரணங்கள் எதுவும் பொருத்தமாக இல்லை. பேரவை துவங்கும் போது தமிழ்த்தாய் வாழ்த்தும்

, முடியும் போது தேசிய கீதமும் பாடப்படுவதுதான் தமிழ்நாடு சட்டப்பேரவையின் மரபு. இதேபோல ஒவ்வொரு சபைக்கும் தனித்த மரபுகள் உண்டு. இதில் தவறில்லை.  பொருந்தாத காரணங்கள் கடந்த ஆண்டும் இதேபோல துவக்கத்தி லேயே தேசிய கீதம் பாடவில்லை என்று கூறி விட்டு ஆளுநர் ஓட்டம்பிடித்தார். அப்பொழுதே சபாநாயகர் உரிய விளக்கம் அளித்தார். பொரு ந்தாத ஒரு காரணத்தை ஆளுநர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பது பொருத்தமல்ல.  அடுத்ததாக நான் பேசுவதற்கான ஒலிபெருக்கி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சபாநாயகர் மைக் வேலை செய்தது என்பது ஆளுநரின் அடுத்த குற்றச்சாட்டு. ஆளுநர் உரையை வாசிக்குமாறு சபாநா யகர் உரிய மரியாதையோடு கேட்டுக் கொண்டது காணொலியாகவே உள்ளது. பேசவே துவங்காத நிலையில் வெளிநடப்பு செய்த ஆளுநர் மைக் வேலை செய்யவில்லை என்பதை எவ்வாறு கண்டுபிடித்தார். எனவே இதுவும் பொருத்தமற்றது.  அதுமட்டுமின்றி சபாநாயகர் அவையை விட்டு வெளிநடப்பு செய்து

அவருடைய மாளிகை க்குச் செல்லும் முன்பே மாளிகையிலிருந்து விரிவான அறிக்கை வெளிவருகிறது. அப்படி யென்றால் இங்கு நடந்த சம்பவங்களை வைத்து  அறிக்கை தயாரிக்கப்படவில்லை. மாறாக அறிக்கையை தயாரித்துக் கொடுத்துவிட்டுத் தான் ஆளுநர் வந்திருக்கிறார். நல்லவேளை யாக இவர் வெளிநடப்பு செய்வதற்கு முன்பே அந்த அறிக்கை வெளியாகவில்லை.  அவையைப் புறக்கணித்ததற்கான கார ணத்தை விளக்கி 13 அம்சங்களை, ‘மக்கள் மாளிகை’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள் ளது. இந்த உரை ஆளுநர் உரை என்று கூறப் பட்டாலும் அதை தயாரித்துத் தருவது மாநில அரசுதான். அதைத்தான் ஆளுநர் வாசிக்க வேண்டும். அதுதான் மரபு. அதுதான் சட்டம். உதாரணமாக நாடாளுமன்றத்தில் குடிய ரசுத் தலைவர் உரை என்பது ஒன்றிய அரசின் கொள்கைக் குறிப்புதான். ஒருவேளை குடியரசுத்  தலைவராக இருப்பவருக்கு அதில் மாற்றுக் கருத்து இருந்தாலும் அவர் அதை ஒரு போதும் வெளிப்படுத்தியது இல்லை. வெளிப்படுத்த முடி யாது. ஆளுநர் தன்னுடைய விருப்பம் போல்  உரை நிகழ்த்துவதற்கு இது ஒன்றும் ஆர்எஸ்எஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டம் அல்ல.  ஆதாரங்கள் இல்லாத அவதூறு அறிக்கை தமிழ்நாட்டைப் பற்றி அவதூறு செய்யும் வகையில் ஆதாரமற்ற பல்வேறு விசயங்களைத் தான் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கை பட்டியலிடுகிறது. இதற்கான ஆதாரங்கள் எதை யும் அவர் சொல்லவில்லை.

இந்த லட்சணத்தில் இந்த அம்சங்களை ஏன் குறிப்பிடவில்லை என்று ஆளுநர் வீராப்பு காட்டுகிறார். ஒன்றிய அரசுக்கு எதிரான அம்சங்களைப் பட்டியலிட்டு இவை ஏன் உரையில் இடம்பெறவில்லை என்று குடியரசுத் தலைவர் கேட்டால் அது பொருத்தமாக இருக்குமா? ஆளுநர் ஒவ்வொரு நாளும் ஒரு போட்டி அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கிறார். சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த தன் மூலம் தமிழ்நாட்டு மக்களையே அவர் இழிவுபடுத்தியுள்ளார். எனவேதான் ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவி விலக வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது.  தமிழ்நாடு என்று சொல்வதே ஆர்.என்.ரவிக்கு கசப்பாக இருக்கிறது. தமிழ்நாடு அரசு அங்கீகரித்த திருவள்ளுவர் படத்திற்கு மாறாக  காவி உடையும் விபூதிப் பட்டையும் அடித்த வள்ளு வர் படத்தை ஆளுநர் மாளிகை வெளியிடுகிறது. மக்கள் மாளிகை என்று பெயரை மாற்றினால் மட்டும் போதாது. பொறுப்புக்கு வரும் மாநிலத்தின் மக்களை மதிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும். பழனிசாமியின் முரட்டு முட்டு! இதுஒருபுறமிருக்க, ஆளுநரைத் தொடர்ந்து வெளிநடப்பு செய்வதில் பின்தங்கி வெளியே வந்த எடப்பாடி பழனிசாமி ஆளுநருக்கு முரட்டு  முட்டாக கொடுக்கிறார். ஆளுநர் சொல்வது அத்தனையும் உண்மை என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்கிறார். தாம் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஒரு அவையை ஆளுநர் அவமதிப்பது குறித்து அவருக்கு கொஞ்சமும் கூச்சம் இல்லை

. மாறாக ஆளுநர் மீது தவ றான எண்ணத்தை உருவாக்குவதாக ஆதங்கப் படுகிறார். தவறான செய்தியை வாசிக்கமாட்டேன் என்று ஆளுநர் சொல்வது நியாயம் தான் என்கிறார். இவரும் முதலமைச்சராக இருந்தவர்.  இவர் ஆட்சியில் ஆளுநர்கள் தங்களது விருப்பத்திற்கேற்பத்தான் பேசினார்களா? அல்லது அரசு எழுதி கொடுத்த உரையை வாசித்தார்களா என்பதை எடப்பாடி பழனிசாமி விளக்கம் வேண்டும். அதிமுக ஆட்சியில் ஆளுநர்கள் இப்படி நடத்தப்பட்டதில்லை என்றும் அங்கலாய்க்கிறார். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஆளுநராக இருந்த சென்னாரெட்டி பட்டபாடு தெரியாதா? ஆளுநர் மாளிகைக்கு மின்சாரம், தண்ணீர் துண்டிக்கப்பட்டது தெரியாதா? மாற்று வழிகளை யோசிப்பது நல்லது தமிழ்நாடு ஆளுநர் மட்டுமல்ல, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் மாநில அரசு தயாரித்து கொடுத்த உரையை முழு மையாக வாசிக்காமல் சில பகுதிகளை விட்டி ருக்கிறார். ஒன்றிய அரசு கேரளத்திற்கு உரிய  நிதி வழங்காமல் புறக்கணிப்பதை ஆளுநர் தவிர்த்திருப்பதாக பேரவையிலேயே முதல்வர் பினராயி விஜயன் சுட்டிக்காட்டி கண்டித்திருக் கிறார். இந்த உண்மையை சொல்வதில் ஆளு நருக்கு என்ன தயக்கம் என்று அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.  தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை இல்லாமலேயே ஆண்டின் முதல் சட்டப்பேர வைக் கூட்டத்தை நடத்துவதற்கான அரசியல் சட்டத்திருத்தத்தை கொண்டுவர  உரிய முயற்சி கள் மேற்கொள்ளப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளது சரியானது.

ஆளுநர்கள் தங்களது அரசியல் சட்டக் கடமையை முறை யாக செய்ய மறுக்கும் போது மாற்று வழிகளை ஜன நாயக எண்ணம் கொண்டவர்கள் ஆலோசிப்பது நல்லது.  தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை  சவுந்தரராஜன் இருந்த போது அவரை அழைக்கா மலேயே சட்டப்பேரவையை முதல்வராக இருந்த சந்திரசேகர ராவ் நடத்திய முன்மாதிரிகளும் உண்டு.  மாநில சட்டமன்றங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவை. அதனால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுதான் அதிகாரமுடையது. ஆளுநர் பதவி என்பது நியமனப் பதவிதான். பிரிட்டிஷ் காலத்து ஆளுநர் போல ஆர்எஸ்எஸ் சார்பு ஆளுநர்கள் தங்களைக் கருதுவது ஆபத்தானது.  ஆடு, தாடி உவமை ஏற்கெனவே உள்ள  நிலையில் தாடி ஆட்டை நினைப்பது பொருத்த மல்ல. உச்சநீதிமன்றத்தால் பல முறை உச்சந் தலையில் குட்டுவாங்கிய பிறகும் தமிழ்நாடு ஆளுநர் மனம் வருந்தவும் இல்லை. திருந்தவும் இல்லை. இவர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறியது போல தமிழ்நாட்டை விட்டும் வெளியேறுவதே நல்லது.