ஆளுநர் ரவியின் பொய்களும் உண்மை நிலவரமும்
தமிழ்நாடு சட்டப்பேரவை செவ்வாயன்று கூடிய பொழுது மூன்றாவது முறையாக ஆளுநர் அமைச்சரவையின் உரையை படிக்காமல் வெளிநடப்பு செய்து அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளை சிதைத்துள்ளார். அவர் வெளிநடப்பு செய்த சில நிமிடங்களில் ஒரு அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதில் அமைச்சரவை அறிக்கையில் ஏராளமான பொய்கள் இருந்ததாகவும் அதனால்தான் அதை படிக்கவில்லை எனவும் கூறியுள்ளார். ஆனால் ஆளுநரின் அறிக்கையில்தான் பொய்கள் நிரம்பி வழிகின்றன. சில ஒப்பீடுகள்:
ஆளுநர் குற்றச்சாட்டு உண்மை 1. நேரடி அந்நிய முதலீட்டில் 4 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு 4ஆவது இடத்தில் இருந்தது. இன்று 6ஆவது இடத்தை தக்கவைக்க திணறல். 2025 ஏப்ரல்-செப்டம்பர் வரையிலான காலத்தில் தமிழ்நாடு 3ஆவது இடத்தில் உள்ளது. 2022இல் இருந்த 6ஆவது இடத்திலிருந்து முன்னேற்றம். 2. தமிழ்நாட்டில்தான் தற்கொலைகள் அதிகமாக உள்ளன. தமிழ்நாடு தற்கொலைகளின் தலைநகரம். பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிராதான் தற்கொலைகளில் முதலிடம். தமிழ்நாட்டைவிட அங்குதான் தற்கொலைகள் அதிகம். எனினும் ஜெயலலிதா ஆட்சியிலிருந்தே தமிழ்நாடு 2ஆம் இடத்தில் உள்ளது. 3 தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் அதீதமாக உயர்வு. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போதை பயன்பாடு 100% உயர்வு. ஆனால் பா.ஜ.க. ஆளும் அசாமில் 260% மற்றும் பீகாரில் 180% உயர்வு. தெலுங்கானாவில் 220% உயர்வு. 4 தலித் மக்கள் மீதான தாக்குதல் கடுமையாக உயர்வு. தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிகரிப்பு. ஒன்றிய அரசின் தரவுகள் படி தலித் மக்கள் மீதான தாக்குதலில் தமிழ்நாடு 13ஆவது இடத்தில் உள்ளது. பா.ஜ.க. ஆளும் உ.பி/ பீகார்/ ம.பி. போன்ற மாநிலங்களில் தலித் மக்கள் மீதான தாக்குதல் அதிகம். ஹாத்ரஸ் கொடுமையை மறக்க இயலுமா? 5 பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு வீழ்ச்சி. போக்சோ குற்றங்கள் 50%; பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் 33% உயர்வு. இந்தியாவிலேயே பெண்களுக்கு எதிராக வன்முறை அதிகமாக நடக்கும் முதல் 5 மாநிலங்கள் உத்தரப்பிரதேசம்/ ராஜஸ்தான்/ மத்தியப் பிரதேசம்/ மேற்குவங்கம்/ மகாராஷ்டிரா. இதில் 4இல் பா.ஜ.க. ஆளுங்கட்சி. பில்கிஸ் பானு வழக்கை மறக்க இயலுமா? பாலியல் பலாத்காரம் செய்த கயவர்கள் இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டது பா.ஜ.க. ஆளும் குஜராத் என்பதை மறைக்க இயலுமா? 6 இந்தியாவில் உள்ள 5.5 கோடி சிறு குறு நிறுவனங்களில் 40 லட்சம்தான் தமிழ்நாட்டில் உள்ளன. அவை திணறுகின்றன. இந்தியாவில் உள்ள 7.5 கோடி சிறு குறு நிறுவனங்களில் 60 லட்சம் தமிழ்நாட்டில் உள்ளன. இந்தியாவிலேயே இதுதான் மிக அதிகம். ஒன்றிய அரசின் கொள்கைகள்தான் சிறு குறு நிறுவனங்களுக்கு பாதகமாக உள்ளன. 7 கீழ்மட்ட ஊழியர்களிடையே கடும் அதிருப்தி உள்ளது. அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு இல்லை. ஒன்றிய அரசின் மோசமான ஓய்வூதியத்திற்கு மாறாக நியாயமான ஓய்வூதியம்/ சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகள் பரிசீலனை/ தூய்மைப் பணியாளர்கள் கோரிக்கைகள் ஏற்பு ஆகியவை காரணமாக போராட்டங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. வேறு சில பிரிவினரின் கோரிக்கைகளும் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஒன்றிய அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை கவனிக்கிறதா? கவனித்தால் ஏன் பிப்ரவரி 12 அகில இந்திய வேலைநிறுத்தம்? 8 சட்டமன்றத்தில் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை. முதலில் தமிழ் தாய் வாழ்த்தும் இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படுகின்றன. 9 எனது மைக் அணைக்கப்பட்டது. இது அண்டப் புளுகு என அமைச்சர் ரகுபதி மறுத்துள்ளார். 10 கோவில்கள் தவறாக நிர்வகிக்கப்படுகின்றன. கோடிக்கணக்கான பக்தர்கள் மனம் புண்படும்படி நிகழ்வுகள் நடக்கின்றன. தமிழ்நாட்டில் 2021க்கு பின்னர் 3325 கோவில்கள் ரூ.1460 கோடி செலவில் பராமரிக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளன. இதில் 1000 ஆண்டுகளுக்கும் அதிகமான பழமையான கோவில்கள் 352 அடங்கும். மேலும் 2021க்கு பின்னர் கோவிலுக்கு சொந்தமான 7500 ஏக்கர் நிலம் (மதிப்பு ரூ.8,000 கோடி) மீட்கப்பட்டுள்ளது. 11 தமிழ்நாட்டில் கல்வியின் தரம் சரிந்துள்ளது. ஒன்றிய அரசின் தரவுகள் அடிப்படையில் கல்வியில் தமிழ்நாடு கேரளாவுக்கு அடுத்த படியாக 2ஆம் இடத்தில் உள்ளது. உயர்கல்வி போன்ற சில அம்சங்களில் முதலிடத்தில் உள்ளது. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை ஒப்பிடும் பொழுது பலமடங்கு தமிழ்நாடு கல்வியில் முன்னேற்றம் கண்டுள்ளது.
