articles

img

‘வந்தே மாதரம்’ பாட கோட்சே சீடர்களுக்கு உரிமை இல்லை! - டாக்டர் வி.சிவதாசன் எம்.பி.,

‘வந்தே மாதரம்’ பாட கோட்சே சீடர்களுக்கு உரிமை இல்லை!

வந்தே மாதரம் மாபெரும் தேசிய இயக் கத்தின் வரலாற்றை நமக்கு நினைவூட்டு கிறது. அந்தப் பாடலின் வரிகள் தேசத்தின் மண்ணுக்கு வணக்கம் செலுத்துவது மட்டுமல்லாமல், மக்களின் போராட்ட உணர்விற்கும் வணக்கம் செலுத்துவ தாகும். வந்தே மாதரம் நமது தேசியப் பாடலாகும்.  யார் அந்த அன்னை? வந்தே மாதரம், அன்னைக்கு வணக்கம் செலுத்து கிறது. யார் அந்த அன்னை? பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய ஒரு  கதை உண்டு. அது ஒரு ஓவியர் மற்றும் அவரது மனைவியின் கதை. ஓவியரான அவர் பாரத மாதாவின் படத்தை வரைகிறார். பாரத மாதாவிற்கு மாதிரியாக இருப்பவர் அவரது மனைவி. அவர் தனது ஓவியத்தை முடித்து, பெருமையுடன் தனது மனைவியிடம் காட்டுகிறார்.

ஆனால் அவளோ, அந்தப் படத்தை மாற்றி, வீட்டில் பிச்சை எடுக்க வரும் ஏழைப் பெண்ணை ‘பாரத மாதாவாக’ சித்தரிக்க வேண்டும் என்று கூறுகிறாள். அந்த ‘பாரத மாதா’ என்பவர்கள், குஜராத் மற்றும் மத்தியப் பிரதே சத்தில் தங்கள் குழந்தைகளுக்குச் சரியான உணவு அளிக்கப் போராடிய லட்சக்கணக்கான தாய்மார்கள். மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தானில் தங்கள் வீடுக ளுக்குக் குடிநீர் கொண்டு வர மைல் கணக்கில் நடந்து செல்லும் தாய்மார்கள். மாபெரும் விவசாயிகள் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அமிர்தசரஸிலிருந்து தில்லி வரையிலும், நாசிக்கிலிருந்து மும்பை வரையி லும் போராட்டத்தில் பங்கேற்க வெறுங்காலுடன் நடந்து வந்தவர்கள்தான் ‘பாரதத் தாய்மார்கள்.’ உத்தரப்பிரதேசத்தில் தெருவில் பிரசவிக்க நிர்பந்திக்கப்பட்ட தாய். இந்த ‘புல்டோசர் ஆட்சியில்’ தங்கள் வீடு புல்டோசரால் இடிக்கப்பட்டதால், ஒரு குளிர்கால இரவில் தங்கள் குழந்தைகளுடன் நடை பாதையில் தூங்க நிர்பந்திக்கப்பட்ட தாய். இவர்கள்தான் நம் பாரதத் தாய்மார்கள். இந்தியா வில் உள்ள தாய்மார்கள் தொழிற்சாலைகளில் இருக்கிறார்கள். நிலக்கரிச் சுரங்கங்களில் பணிபுரி கிறார்கள். கோதுமை மற்றும் நெல் வயல்களில் வேலை செய்கிறார்கள். இவர்கள்தான் ‘பாரத மாதாக்கள்’.

ஜவஹர்லால் நேரு நமக்கு ‘பாரத மாதா’ பற்றிச் சொன்னார். இந்திய மக்களாகிய நாம்தான் ‘பாரத மாதா’. அந்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஒரு கனவு இருந்தது. தூய நீரும் மதிப்புமிகு தானியமும் இதுதொடர்பாக வந்தே மாதரம் பாடல் வரி களில் தூய்மையான நீர் (சுஜல்) குறித்தும், விவசா யிகள் விளைவிக்கும் தானியங்கள் (சுஃபல்) குறித்தும்,  சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்துமான வரிகள் வருகின்றன. ஆனால் சுஜல், தூய்மையான நீர் எங்கே? இங்கே, கங்கையைத் தூய்மைப்படுத்தும் திட்டம் என்ற பெயரில் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளைய டிக்கப்பட்டது. மாபெரும் யமுனை நதி அழுது கொண்டிருக்கிறது. காளியனின் விஷத்தால் அல்ல,  ‘விஷத்தால்’. ஆம், அங்கே ஒரு விஷம் இருக்கிறது. அது அரசாங்கத்தின் உச்சகட்ட திறமையின்மை யையும் அம்பலப்படுத்துகிறது. சுஃபல் எங்கே? விவசாயிகள் சுஃபலை விளை விக்கிறார்கள், ஆனால் அவர்களுக்கு முறையான ஊதியம் கிடைப்பதில்லை. இமாச்சலப் பிரதேசம் மற்றும் காஷ்மீரில் உள்ள ஆப்பிள் விவசாயிகளும், மகாராஷ்டிராவில் உள்ள வெங்காய விவசாயிகளும் போராடுகிறார்கள்.

ஆனால், சந்தையில் விலைகள் மிக அதிகமாக உள்ளன. சந்தையில் சுஃபல் கிடைப்ப தற்கு மிகக் குறைவான வாய்ப்பே உள்ளது. தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களால் கடுமையாக மாசுபட்ட பழங்கள் மட்டுமே சந்தைக்கு வரு கின்றன, சந்தையில் கிடைக்கின்றன. பசுமை, குளிர்காற்று எங்கே? பசுமை எங்கே? குளிர்ந்த காற்று எங்கே? அந்த மான்-நிகோபாரில், சுற்றுச்சூழல் ரீதியாக பாதிக்கப் படக்கூடிய ஒரு பகுதியில் ஒரு கோடி (10 மில்லியன்) மரங்களை வெட்ட அவர்கள் தயாராகி வருகின்றனர். தில்லி மக்கள் உலகின் மிகவும் மாசுபட்ட காற்றை சுவாசிக்கிறார்கள். குளிர்ந்த காற்று எங்கே, தில்லி ஒரு விஷவாயு அறையாகிவிட்டது. வந்தே மாதரத்தில், ‘சுஜலாம் சுஃபலாம் மலயஜ சீதலாம்’ என்று கேட்கிறோம்,  நாதுராமின் சீடர்கள்... ஆனால் நாதுராமின் சீடர்கள் தங்கள் பிரிட்டிஷ் காலனித்துவ எஜமானர்களைப் போலவே வெறுப்புப் பேச்சுகளைப் பேசுகிறார்கள். கௌரி லங்கேஷ், தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோர் நாதுரா மின் சீடர்களால் கொல்லப்பட்டனர். மக்கள் தங்கள் எழுத்துக்களுக்காக, தங்கள் உணவுக்காக, தங்கள் மதத்திற்காக கொல்லப்பட்ட னர். நாதுராமின் சீடர்களால் கொல்லப்பட்டனர். தங்கள் எழுத்துக்களுக்காக சிறைக்கு அனுப்பப் பட்டுள்ளனர்.

ஆனந்த் டெல்டும்டே, பிரபீர் புர்கா யஸ்தா, ஸ்டான் சுவாமி, டீஸ்டா செதல்வாத் மற்றும் முனாவர் ஃபரூக்கி போன்றோர் சிறையில் இருந்த னர். எத்தனை பேர் சிறையில் இருக்கிறார்கள்? வந்தே மாதரத்தின் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. வந்தே மாதரம் எங்கள் தேசிய பாடல். அது எங்களுடைய பாடல், நாதுராமின் சீடர்க ளின் பாடல் அல்ல. ‘ஜன கண மன’ பாடலின் மீது எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், நாதுராமின் சீடர்கள் வந்தே மாதரத்தை, ஜனகண மனவுக்கு என்பதற்கு எதிராக நிறுத்த முயற்சிக்கி றார்கள். அவர்கள் உருதுவை இந்திக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கிறார்கள். அவர்கள் சமஸ்கிரு தத்தைத் தமிழுக்கு எதிராக நிறுத்த முயற்சிக்கி றார்கள். அவர்கள் இவ்வாறு சமூகத்திற்குள்ளும், மக்களிடையேயும் பிரச்சனைகளை உருவாக்க முயற்சிக்கிறார்கள். பகத்சிங், சுர்ஜித், ஏகேஜி மரபு மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர், தியாகி பகத் சிங், லாகூர் தூக்கு மேடைக்குச் செல்லும் வழியில், உருது மொழியில் ‘உலகமக்கள் யாவரும் எங்கள் மக்கள்’ என்று பொருள்படும் உருது பாடலைப் பாடினார். நமது மரபு, மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத் சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ் ஆகி யோரின் மரபு ஆகும். நமது மரபு, 1938 மார்ச் மாதம், 16 வயதில் ஹோஷியார்பூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றிய ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் மரபு ஆகும். நமது மரபு, பல ஆண்டுகள் சிறையில் இருந்து, சமரசமற்ற போராட்டத்தைத் தொடர்ந்த ‘காகாபாபு’ முசாஃபர் அகமதுவின் மரபு ஆகும். நமது மரபு, இந்தியா சுதந்திரம் பெற்றபோது சிறையில் இருந்த மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஏ.கே. கோபாலனின் மரபு ஆகும்.  நமது மரபு, ஆங்கிலேயர்களுக்கு எதிராகப் போராடுவது நேரத்தை வீணடிக்கும் செயல் என்று இந்துக்களிடம் கூறியவர்களின் மரபு அல்ல. அதை யார் சொன்னார்கள்? அந்தக் கேள்விக்கான பதில் அனைவருக்கும் தெரியும். இப்போது, அவர்கள் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒருவருக்கொ ருவர் எதிராக நிறுத்த முயற்சிக்கிறார்கள்.

இது டிசம்பர் மாதம். 23 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 6 ஆம் தேதி, நாதுராமின் சீடர்கள் நமது தேசத்தின் மதச் சார்பற்ற மரபின் மாபெரும் சின்னத்தை இடித்துத் தள்ளினர். அந்த நேரத்தில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. மக்களின் ஒற்றுமைக்கு எதிராக இருப்பவர்கள் மக்களை ஆட்சி செய்திட முடியாது. இதுதான் கவிஞர்  தாகூர் நமக்குப் போதித்திருக்கிறார். இதன் பொருள், தற்போதுள்ள அரசாங்கம் நாட்டு மக்களை ஆட்சி  செய்வதற்கு தார்மீக உரிமை கிடையாது என்பதாகும். மக்களின் ஒற்றுமை குறித்தும், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் இருந்திட வேண்டும் என்பது குறித்தும் தாகூர் மிகவும் கூர்மையான வார்த்தைகளில் கூறி யிருக்கிறார்.  (இந்த சமயத்தில் அவர் பேசுவது அவைத்தலை வரால் நிறுத்தப்பட்டு, அடுத்த உறுப்பினர் பேசத் துவங்கிவிட்டார்.) தமிழில் : ச.வீரமணி