மாநிலச் செயலாளர் மேசையிலிருந்து...
https://x.com/ShanmugamCpim
தூய்மை இந்தியா திட்டம், பெண் குழந்தைகளைக் காப்போம் திட்டம், விவசாயிகள் காப்போம் போன்ற அரசுத் திட்டங்களின் பெயரால், பாஜக பொதுமக்களிட மிருந்து பணம் வசூலித்து, அதனைத் தங்கள் கட்சியின் கணக்கில் சேர்த்துக் கொண்ட மகா மோசடி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த மோசடியை, பத்திரிகையாளர் அரவிந்தாக்சன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் தகவல்களைக் கோரி ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். “வித்தியாசமான கட்சி” என்று தன்னைப் பீற்றிக் கொள்ளும் பாஜக, ஊழல் மற்றும் மோசடியிலும் வித்தியாசமான முறையில் அரசுத் திட்டத்தின் பெயரைப் பயன்படுத்திக் கொள்ளையடித்திருக்கிறார்கள். இதுகுறித்து சுதந்திரமான விசாரணைக்கு உட்படுத்தி மக்களுக்கு உண்மையை பாஜக விளக்க வேண்டும். நீங்கள் செய்வீர்களா?
