காயத்ரி மந்திரமும் கார் கண்ணாடியும்
இன்றைக்கு காலை யில் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. பக்கத்து வீட்டு போர்டி கோவுக்கு போய் அவர் கார் கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்து கொண்டிருந்தேன். “ என்ன சார் ! என்ன பண்றீங்க” என்றவாறே இராம்ஜி ஒரு துண்டை தோளில் போர்த்தியவாறு வெளியில் வந்தார். “ஒன்னுமில்லே ! கார் ஸ்டார்ட் ஆகல்லே! ஒங்க கார் கண்ணாடியை அட் ஜஸ்ட் செய்து கொண்டி ருக்கிறேன்!” “என்ன சார்! ஜோக்க டிக்கிறீங்க?” “இதுல என்ன சார் ஜோக்கு இருக்கு? கண் ணாடி இருக்கே அது எதுக்க எது இருந்தாலும் அதை பிரதிபலிக்கும் இல்லையா? அது எப்படிங்கிறீங்க? உல கமே அந்த கண்ணாடிக் குள்ள இருக்கு... எதாவது ஒரு பொருள் எதிர இருந்தா உடனே கண்ணாடி அது இதானா பாத்துக்கோன்னு காமிக்கிறது... “ இராம்ஜி கொஞ்சம் கவ லையோடு என்னை பார்த்தார். “ இந்த கண்ணாடி யிலி ருந்து ஒரு வைப்ரேஷன் எப்போதும் பரவிகிட்டே இருக்கிறது ! இந்த வைப்ரே ஷன் உலகத்துல எல்லாத் தையும் சீர்படுத்தி வைக்கி றது. சுருக்கமா சொன்னா நீங்க கண்ணாடியை பாத்து தானே ஒங்க கலைஞ்சி போன தலையை சரி செஞ்சுக்கிறீங்க!” “அதனால” “அதனால ஒங்க கார் கண்ணாடியை சரி பண்ணிய ஒடனே அதுலேருந்து ஒரு வைப்ரேஷன் கிளம்பி அதாவது ஒரு காஸ்மிக் எனர்ஜி கிளம்பி என்னோட கார் கண்ணாடியை அடை கிறது. அந்த அதிர்வை அது உள்வாங்கி அப்படியே காரின் எல்லா பாகங்களை யும் சீர் செய்கிறது!”.இப்போது இராம்ஜி மிகவும் வருத்தமாக ஆதுரத்துடன் என்னை பார்த்தார். “சார்! இது ஒரு பிகினிங் ஸ்டேஜ்தான்! நல்ல சைக்கி யாட்ரிஸ்ட்ட பாத்தா உடனே சரி செஞ்சுடலாம்!” என் றார். “ரொம்ப பைத்தியக்கா ரத்தனமா இருக்குல்ல! நீங்க தான சார் நம்ப வாட்ஸப்பு குரூப்புல போட்டிருந்தீங்க! காயத்ரி மந்திரத்தை காலை யில சொல்லும்போது அப்ப டியே ஒரு வைப்ரேஷன் ஏற் பட்டு ஒரு காஸ்மிக் எனர்ஜி நம் உடல் மீது பரவுகிறது. அது நம் உறுப்புகளை நன்கு வைத்துக் கொள்வ தோடு மனதில் நல்ல மாற் றங்களை ஏற்படுத்துகிறது. அப்படியே வான்மண்ட லத்துல பரவி நம்மை பாதிக் கும் கிரகங்களை சீர் படுத்து கிறது. இப்படி நீங்க சொன்ன தெல்லாம் நடக்கும்னா நான் சொன்னது ஏன் சார் நடக் காது?”. “கஷ்ட காலம்” என்ற வாறே இராம்ஜி போய்விட் டார்.
