articles

img

பரமக்குடியில் சிபிஎம் நிதி அளிப்பு - பிரச்சார பொதுக்கூட்டம்

பரமக்குடியில் சிபிஎம் நிதி அளிப்பு - பிரச்சார பொதுக்கூட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் நிதியளிப்பு மற்றும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் வியாழனன்று நடைபெற்றது. இதில் முதல் கட்டமாக மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்திடம் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்டச் செயலாளர் ரெ.குருவேல் வழங்கினார். பரமக்குடி வட்டாரச் செயலாளர் இ.கே.தட்சிணாமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் கே.பி.பெருமாள் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.சிவாஜி, வி.மயில்வாகணன், தி.ராஜா, வி.காசிநாததுரை, நா.கலையரசன், எம்.ராஜ்குமார்,  கே.கருணாகரன், இ.கண்ணகி, விவசாய சங்க மாவட்டத் தலைவர் எம்.முத்துராமு, சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.சந்தானம், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ஆரோக்கிய நிர்மலா ஆகியோர் கருத்துரை ஆற்றினர்.  பரமக்குடி நகர் குழு செயலாளர் ஆர்.முனியசாமி நன்றி கூறினார்.