சமையலறையில் எதிரொலிக்கும் ஏகாதிபத்திய யுத்தம்!
“அனைத்து வறுமைக்கும் மேலாக அறி யாமையே ஒரு தேசத்தின் மிகப் பெரிய எதிரியாகும். மக்களுக்கு சேவை செய்வதே கடவுளுக்குச் செய்யும் உண்மையான தொண்டு ஆகும். நான் தனிநபர் அல்ல, நான் ஒரு மக்கள் கூட்டம்” என கர்ஜித்த ஹூயூகோ சாவேஸ் அவர்களின் வழியில் வெனிசுலாவை இடதுசாரிப் பாதையில் அழைத்துச் சென்ற ஜனாதிபதி மதுரோ நிக்கோலசை, வெனிசுலாவிற்குள் புகுந்து கடத்திச் சென்று அமெரிக்க ஏகாதிபத்திய ஓநாய் கூட்டம் நள்ளிரவில் தனது அட்டூழியத்தை அரங்கேற்றியது.
நேட்டோ விரிவாக்கம் என்ற பெயரில் உக்ரை னைத் தூண்டிவிட்டு கடந்த 4 ஆண்டுகளாக ரஷ்யா வுடன் யுத்தம் நடத்தவும் அமெரிக்கா உதவி வரு கிறது. தற்போது பாலஸ்தீனம், லெபனான், ஈரான் மீது இஸ்ரேலைப் பயன்படுத்திப் போரைத் துவக்கி, அரபு நாடுகளைப் போர்க்களத்திற்குள் தள்ளிவிட்டு தனக்கான ஆதாயத்தைத் தேடத் தொடங்கியுள்ளது. மறுபுறம் கனடாவை, கிரீன்லாந்தை தனது பகுதி யாக மாற்றுவேன் என்பதும், அனைத்து விதமான சர்வதேச சட்டங்களையும் காலில் போட்டு மிதித்து இன்று நர வேட்டைக்காடாய் பாலஸ்தீனத்தையும், ஈரானையும் மாற்றி வருகிறது அமெரிக்கா. லெனின் வரையறுத்த ஏகாதிபத்தியம் “ஏகாதிபத்தியம் என்பது முதலாளித்துவத்தின் உச்சக்கட்டம். இது உற்பத்தி மற்றும் நிதி மூலதனக் குவிப்பும் ஒருசேர ஏகபோகமாக மாறுவதும், ஏக போக நிறுவனங்களின் ஆட்சி மற்றும் நிதி மூல தனத்தின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்ட காலமுமா கும்” என்று லெனின் வரையறுத்தார்.
அவரைப் பொறுத்தவரை, ஏகாதிபத்தியம் என்பது அழியும் நிலை யில் உள்ள முதலாளித்துவம் (Moribund Capi talism). இது உலகப் போர்களுக்கும் புரட்சிகளுக் கும் வழிவகுக்கும் என்பது அவரது கருத்தாகும். லெனின் முன்வைத்த ஏகாதிபத்தியத்தின் முதன்மையான பண்புகள்: o உற்பத்தி மற்றும் மூலதனக் குவிப்பு (Monopoly). o நிதி மூலதனத்தின் எழுச்சி (Finance Capital). o மூலதன ஏற்றுமதி (Export of Capital). o ஏகபோக நிறுவனங்கள் தங்களுக்குள் சந்தை யைப் பிரித்துக் கொள்ளுதல். o உலகப் பரப்பை வல்லரசு நாடுகள் தங்கள் கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வருதல். அவர் வாழ்ந்த காலத்தில் ஏகாதிபத்தியம் குறித்து வரையறுத்த நிலைப்பாடு இன்றும் பொருந்தக்கூடி யதே. நிதி மூலதனம் இன்று உலகமயமாகியுள்ளது. சமகாலத்தில் ஏகாதிபத்தியம் இன்று ஏகாதிபத்தியம் என்பது பன்னாட்டு நிறுவ னங்களின் ஏகபோகமாக மாறியுள்ளது. கூகுள், ஆப்பிள், அமேசான், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவ னங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம். லெனின் குறிப்பிட்ட நிதிப்பிரபுகள் (சர்வதேச நிதி நிறுவ னங்கள்) இன்று டிஜிட்டல் வடிவத்தில் உலகப் பொரு ளாதாரத்தை இயக்குகின்றன. மூலதன ஏற்றுமதி மூலம் நாடுகள் இன்று கட்டுப் படுத்தப்படுகின்றன.
ஏழை நாடுகளில் முதலீடு செய்து அந்த நாடுகளின் வளங்களைச் சுரண்டுவதோடு, அவர்களைக் கடன் வலையில் (Debt Trap) விழ வைக்கிறார்கள். எண்ணெய் வளமிக்க மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் கனிம வளம் மிக்க ஆப்பி ரிக்க நாடுகளில் நடக்கும் மோதல்கள், வல்லரசுகள் இயற்கை வளங்களைக் கைப்பற்ற நினைப்பதன் விளைவே. இது லெனின் சொன்ன சர்வதேச ஒட்டுண்ணித்தனத்தின் நவீன வடிவமாகும். உயர் தொழில்நுட்பம் கொண்டுள்ள நாடுகள், மலிவான உழைப்பு கிடைக்கும் ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளுக்குத் தங்கள் உற்பத்தியை மாற்றுகின்றன. இதன் மூலம் அமெரிக்க ஏகாதிபத்தியம் தனது கட்டுப் பாட்டில் உலக இயற்கை வளங்களைக் கொண்டு வரத் துடிக்கிறது. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அமெரிக்கா அனுமதி கொடுத்தால்தான் உலக நாடுகள் வாங்க முடியும் என்ற சூழல், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் இறையாண்மையைக் கட்டுப் படுத்துவதை உறுதிப்படுத்துகிறது.
நவீன காலனியாதிக்கத்தை அமெரிக்கா தலைமை யிலான ஏகாதிபத்தியம் நிறைவேற்றுகிறது. கானா நாட்டின் ஜனாதிபதியாக இருந்த குவாமே நிக்ரூமா விளக்கியது போல, ஒரு நாடு காகித அளவில் சுதந்திர நாடாக இருக்கும்; ஆனால் அதன் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கைகள் வெளியிலிருந்து வல்லரசுகளால் தீர்மானிக்கப்படும். இன்று கடன் வலை, பொம்மை அரசாங்கங்கள், கலாச்சார ஏக போகம் எனப் பல வழிமுறைகள் இதற்குப் பயன் படுத்தப்படுகின்றன.
குருதி குடிக்கும் மேலாதிக்கம் “நேற்று பிசாசு இங்கே வந்தது; இன்றும் அதன் கந்தக நெடி வீசுகிறது” என்று 2006-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷை விமர்சித்து வெனிசுலா ஜனாதிபதி சாவேஸ் பேசினார். இப்போதும் டொனால்டு டிரம்ப் நடவடிக்கைகள் அதைப் போன்றே உள்ளன. இறையாண்மை பெற்ற பாலஸ்தீனம் முதல் ஈரான் வரை தாக்குதல் நடத்தி பல்லாயிரக்கணக்கா னோரைப் பலியாக்கியுள்ளார் டிரம்ப். தான் விரும்பும் நபர் ஆட்சியில் அமர வேண்டு மென உத்தரவிடுவது, ஐநா சபையை உருவாக்கிய நாடுகளின் இறையாண்மையை மீறிச் செயல்படும் அத்துமீறிய நடவடிக்கையாகும். இது சர்வதேச விதிமுறைகளைத் தலைகீழாக மாற்றுகிறது. டிரம்ப்பின் நோக்கங்களும் விளைவுகளும் வெனிசுலாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்களைக் கைப்பற்றும் நோக்கத்தை டொனால்டு டிரம்ப் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே தெரிவித்து விட்டார். டிரம்ப்பின் முதன்மை நோக்கம் வட மற்றும் தென் அமெரிக்க கண்டம் முழுவதையும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரு வதுதான்.
இந்தப் பிராந்தியத்தில் இருந்து ரஷ்யா, சீனா போன்ற நாடுகளின் வர்த்தகத் தலையீடுகளை முற்றாகத் துண்டிப்பதே அமெரிக்காவின் கொள்கை யாக உள்ளது. இதற்காகத்தான் எலான் மஸ்க் போன்றவர்களும் குரல் கொடுக்கிறார்கள். அமெரிக்க மேலாதிக்கத்திற்கு எதிராக பிரிக்ஸ் (BRICS) போன்ற மாற்று முயற்சிகள் ஒருபுறம் நடந்தா லும், இந்தியாவின் மோடி போன்ற வலதுசாரிகள் அந்தப் பன்முகத் தன்மையைச் சீரழிக்கின்றனர். டிரம்ப் தன்னை அமைதித் தூதராகச் சித்தரித்துக் கொண்டாலும், உண்மையில் அவர் உலகின் அச்சுறுத்தலாகவே மாறியுள்ளார்.
இந்திய நெருக்கடி ஈரான் - இஸ்ரேல் மோதலால் ஹோர்முஸ் நீரி ணையை ஈரான் மூடியது, கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுத் தேவைகளுக்கு வளைகுடா நாடுகளைச் சார்ந்திருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்குக் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது. o இந்தியாவில் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹60-ஆம், வணிகப் பயன் சிலிண்டர் விலை ₹115 வரையும் அதிகரித்துள்ளது. o சரக்குகள் தேங்கியிருப்பதால் ஏற்றுமதியில் இந்தியா சரிவைச் சந்தித்துள்ளது (பாசுமதி அரிசி, நாமக்கல் முட்டை, திருப்பூர் பின்னலாடை போன்றவை). o கன்டெய்னர் கட்டணங்கள் 1200 டாலரில் இருந்து 4800 டாலர் வரை உயர்ந்துள்ளது. இந்தியாவின் எண்ணெய்த் தேவையில் 85% இறக்கு மதியைச் சார்ந்தே உள்ளதால், இந்தப் பாதிப்பு இன்னும் தீவிரமடையும். அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ₹92.35 வரை வீழ்ந்துள்ளது.
இந்த நிலையிலும் இந்திய அரசு தனது அமெரிக்க ஆதரவு நிலையிலேயே இருந்து கொண்டு இந்திய மக்களை மறந்து வருகிறது. இதற்குப் பின்னால் கார்ப்பரேட்டுகளின் நலனும், ஏகாதி பத்திய ஆதரவு அரசியலுமே உள்ளது. இதற்கு எதிராக இந்திய மக்கள் கிளர்ந்தெழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமே தீர்வு ஏகாதிபத்தியம் என்பது வெறும் ராணுவ நட வடிக்கை மட்டுமல்ல, அது வளரும் நாடுகளின் இறை யாண்மையைப் பறிக்கும் பொருளாதாரப் போர். இன்று இந்தியா எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வும், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியும் தற்செயலானவை அல்ல; அவை அமெரிக்க நலன்களுக்காக நாம் நமது பொருளாதா ரக் கொள்கைகளை அடகு வைத்ததன் நேரடி விளைவாகும்.
வளைகுடா நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தற்சார்பு பொருளாதாரக் கொள்கைகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, இன்னமும் பன்னாட்டு மூலதனத்திற்காகக் காத்தி ருப்பது தற்கொலைக்குச் சமமானது. ஏகாதிபத்திய ஒட்டுண்ணித்தனம் நமது சமைய லறை வரை ஊடுருவிவிட்டது என்பதற்கு சிலிண்டர் விலை உயர்வே சாட்சி. இதனை முறியடிக்க, இயற்கை வளங்கள் மீதான மக்கள் அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும். ரஷ்யா, சீனா மற்றும் பிரிக்ஸ் நாடுகளு டன் இணைந்து டாலர் மேலாதிக்கத்திற்கு மாற்றாக வலுவான வர்த்தகக் கட்டமைப்பை உருவாக்க இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். வெனிசுலாவில் சாவேஸ் விதைத்த போராட்ட உணர்வு இன்று ஆசியாவிற்கும் அவசியமாகிறது. ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுபடாமல் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க முடியாது. உழைப்பாளி மக்கள் ஒன்றிணைந்து நடத்தும் அரசியல் போராட்டங்களே இந்த நவீன காலனியாதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும். ஏகாதிபத்தியத்தின் சவக்குழியை உழைக்கும் வர்க்கம் தோண்டும் காலம் வெகுதொலைவில் இல்லை.
