articles

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சாதகமான அரசியல் சட்ட திருத்தம்

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சாதகமான அரசியல் சட்ட திருத்தம்

பாகிஸ்தானின் நீதித்துறை அமைப்பில் அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில், ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசு அரசியல் சட்டத்தில் திருத்தங் கள் செய்து வருகிறது. நவம்பர் 8-9-ல்  செனட்டில் இறுதி செய்யப்பட்ட 27-வது அரசியல் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங் கள் நடைபெறுகின்றன. இந்தத் திருத்தங்கள் நாட்டின் ராணு வத்தின் மேலாதிக்கத்தை மேலும் அதி கரிக்கும் நோக்கம் கொண்டவை. இதன் மூலம், உயர்நீதிமன்ற நீதிபதிகளை மாற்றும் அதிக அதிகாரம் ஜனாதி பதிக்கு வழங்கப்படுகிறது. மேலும், அரசியல் சட்டத்தின் 243-வது சரத்து மாற்றியமைக்கப்பட்டு, பாதுகாப்புப் படைகளின் தலைவரான CHIEF of  DEFENSE FORCES என்ற புதிய பதவி உருவாக்கப்படுகிறது. இந்த அதிகாரிக்கு ஜனாதிபதிக்குச் சமமான வாழ்நாள் வசதிகளும், வழக்குத் தொடுப்பிலிருந்து முழு விலக்கும் வழங்கப்படுகிறது. மக்க ளால் தேர்வு செய்யப்பட்ட அரசுகளுக்கு எதிராக ராணுவம் சதி செய்த நீண்ட வர லாறு கொண்ட பாகிஸ்தானில், இந்தத் திருத்தம் குடிமக்களின் கட்டுப்பாட்டை மேலும் பலவீனமாக்கும் என எதிர்க்கட்சிகள் மற்றும் மனித உரிமை ஆணையம் விமர்சித்துள்ளது.