articles

அண்ணாமலையும் - சங்பரிவார அமைப்புகளும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

அண்ணாமலையும் - சங்பரிவார அமைப்புகளும் தமிழக மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும்!

சிபிஎம் வலியுறுத்தல்!

சென்னை, பிப். 18 - மாணவி லாவண்யா தற்கொலைப் பின்னணியில் மதமாற்ற முயற்சி எதுவும் இல்லை என்று சிபிஐ தற்போது அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், மூன்றாண்டுகளுக்கு முன்பு  இச்சம்பவத்தை வைத்து மத வன்முறை யைத் தூண்டிவிட முயன்ற பாஜக தலைவர் அண்ணாமலையும், சங்-பரி வார அமைப்புக்களும் தமிழக மக்க ளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியுள்ளது. நாமக்கல்லில் பிப்ரவரி 17, 18 தேதிகளில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநி லக்குழு கூட்டத்தில், இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் வருமாறு: பாஜக தேசிய தலைமையே முன்னின்று ஏற்படுத்திய பதற்றம் 2022-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல் பட்டியில்  உள்ள ஒரு கிறிஸ்தவ அமைப்பால் நடத்தப்படுகிற பள்ளியில் பயின்று வந்த லாவண்யா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டதையடுத்து தமிழகமே மிகவும் சோகத்திற்கு உள்ளானது. இதைப் பயன்படுத்தி வழக்கம் போல அப்போது பாஜகவின் மாநில தலைவராக இருந்த அண்ணாமலையும், விசுவ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் ‘அது ஒரு மதமாற்ற நிர்பந்தத்தினால் ஏற்பட்ட தற்கொலை; எனவே, சம்பந்தப்பட்ட அமைப்புகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பேசியதோடு மட்டு மின்றி, கிறிஸ்தவர்கள் மீது குறிப்பாக கிறிஸ்தவ சேவை அமைப்புகளின் மீது வன்மத்தைக் கக்கினர். அன்றைய பாஜக தலைவர் ஜே.பி. நட்டா உத்தரவின் பெயரில் பாஜக தேசிய விசார ணை குழுவும் வந்து சென்றது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் இதையொட்டி, சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், இவ்வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். தமிழ்நாடு அரசு, ‘இது சிபிஐ விசாரிக்க வேண்டிய வழக்கு அல்ல!’ என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தபொழுது உச்சநீதிமன்றம் அதை ஏற்கவில்லை. எனவே, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்தது. இப்போது இந்த வழக்கில் சிபிஐ தனது முடிவுகளை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறது.  மதமாற்ற குற்றச்சாட்டு முழுமையும் பொய்யானது அதில், 1. லாவண்யாவின் மர ணத்திற்கு மதமாற்ற முயற்சி காரணம் இல்லை. மாணவி பேசிய எந்த ஒரு வீடியோவிலும் மதமாற்றம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. 2. 2010-ஆம் ஆண்டு முதல் பள்ளியில் படித்து வெளியேறிய மாணவர்களின் சான்றிதழை ஆய்வு செய்ததில் ஒருவர் கூட மதம் மாறவில்லை. 3. லாவண்யாவின் சித்தி, தந்தை ஆகியோர் பாஜக தலைவர்களின் நிர்ப்பந்தத்தால் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். - என்று சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தனது முடிவுகளை சமர்ப்பித்துள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி களும், பாஜகவின் தேசிய தலைமை யும், பாஜக பத்திரிகைகளும் இந்த பிரச்ச னையை நாடு தழுவிய ஒரு பிரச்சனை யாக மாற்றினார்கள். அதேசமயத்தில், தேசிய குழந்தைகள் ஆணையமும் இங்கு வந்தது; ஆனால் அறிக்கை எதையும் வெளியிடவில்லை.  2008 முதல் தொடர் கலவர முயற்சிகள் எனவே, மாணவியின் மரணத்தை  பயன்படுத்தி அரசியல் லாபம் அடை வதற்காக பாஜகவும் சங்பரிவாரமும் தொடர்ச்சியாக முயற்சித்தார்கள் என்பதை சிபிஐ முடிவுகள் வெளிப் படுத்தி இருக்கிறது. இது முதல்முறை அல்ல, இதேபோன்று பல்வேறு சமயங் களில் சங்-பரிவார் அமைப்புகள் ஒவ் வொரு தாக்குதலையும் அல்லது இறப்பையும் அரசியல் லாபமாக மாற்றுவதற்கு மத மோதலையோ அல்லது மற்றொரு வகையில் மோத லையோ தூண்டுவதற்கு முயற்சித்தே வந்திருக்கிறார்கள் என்பதை பார்க்க முடியும். கடந்த 2008-ஆம் ஆண்டு தென்காசி யில் ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் குண்டு  வைத்தவர்கள் இந்து முன்னணியினர் என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் குண்டு வெடித்தவுடன் இரு சமூகங்களிடையே மிகப்பெரிய பதற்றம் அந்த நகரத்தில் உருவானது. எச். ராஜா - தமிழிசை  கிளப்பிவிட்ட பிரச்சனைகள் இதேபோன்று, 2017 ஆம் ஆண்டு  இராமநாதபுரத்தில் சொந்தப் பிரச்சனை களுக்காக அந்த நகரத்தின் பாஜக தலை வர் தாக்கப்பட்ட நிலையில், மாறாக, இஸ்லாமியர்கள் தான், அவரை தாக்கி தொழுகை நடத்திவிட்டு சாவகாச மாக சென்றதாக எச். ராஜா பிரச்சாரம் செய்தார். பின்னர் இந்த சம்பவத்தில் ஈடு பட்டவர்கள் அனைவருமே தாக்கப்பட்ட வர்களின் மதத்தைச் சார்ந்தவர்கள் தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதேபோன்று, அதே 2017-ஆம்  ஆண்டு ஜனவரி மாதத்தில் திருப்பூரில் தற்கொலை செய்து கொண்ட ஒருவரை மதமோதல் மற்றும் அரசியல் கார ணங்களுக்காக கொலை செய்யப்பட்ட தாகவும் தமிழிசை சவுந்தரராஜன் அதை பெரிய பிரச்சனையாக மாற்றினார். பின்னர் அது சொந்த காரணங்களால் நடந்த தற்கொலை என்று கண்டு பிடிக்கப்பட்டது.  மதமோதல் முயற்சி அம்பலமாகியிருக்கிறது இப்படி சாதாரண பிரச்சனைகளை எல்லாம் ஒரு பெரிய மத மோதலாக மாற்றுவதற்கு இவர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடைய நோக்கம் தமிழ்நாட்டை வன்முறைக்குள் தள்ளுவதுதான். எனவே, இப்போது அவர்கள் சொன்ன விபரங்களையும், விசாரணைகளையும் வைத்து உச்சநீதிமன்றத்தில் சிபிஐ ‘இது மதமாற்ற நிர்ப்பந்த மரணம் அல்ல’ என்று தெளிவுபடுத்தி இருக்கிறது. எனவே, அப்போது இந்தப் பிரச்ச னையை வைத்து, மதமோதல் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு பிரச்சாரம் செய்து கொண்டிருந்த பாஜக- வின் அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலையும், அந்த பிரச்சாரத்தை தொடர்ச்சியாக செய்து வந்த சங்-பரிவார அமைப்புகளும் தமிழ்நாட்டு மக்களி டம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வலியுறுத்துகிறது. பாஜக தலைவர்கள் மீது  சட்ட நடவடிக்கை வேண்டும்! மதப் பகைமையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட பாஜகவின் அப்போதைய மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டவர்கள் மீது  சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. தமிழ்நாட்டு மக்கள் இத்தகைய வன்முறைக்கு தூண்டும் கூட்டத்திடம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.  இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.