பிரான்ஸ் ஆதிக்க எதிர்ப்புக்கு தலைமை தாங்கும் ஆப்பிரிக்க பெண்கள்
நியாமி,செப்.5- சஹேல் கூட்டமைப்பு நாடுகளான நைஜர், மாலி, புர்கினா ஃபாசோ ஆகிய நாடுகளில் உள்ள பெண்கள் பிரான்ஸ் நிறுவனங்களின் சுரண்டல் மற்றும் ஆணாதிக்கத்திற்கு எதிராக தீவிரப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நைஜர், மாலி, புர்கினா ஃபாசோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து உரு வாக்கிய கூட்டமைப்பான சஹேல் நாடு களின் கூட்டமைப்பு (AES) தொடங்கப் பட்ட இரண்டாம் ஆண்டு நிறைவு செப்டம்பர் 16 அன்று நடைபெற உள்ளது. இந்த அமைப்பானது பான்-ஆப்பிரிக் கனிசம் என்ற ஒன்றுபட்ட ஆப்பிரிக்கா வின் கருத்தாக்கத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. இந்த சஹேல் கூட்டமைப்பின் இரண்டாம் ஆண்டு நிறைவையொட்டி இறையாண்மைக்காகவும், ஏகாதி பத்தியத்திற்கு எதிராகவும் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஆப்பிரிக்கப் பெண்களின் பங்களிப்பை ஆய்வு செய்யும் வகையில் இணைய வழிக் கருத்த ரங்கம் நடைபெற்றது. அதில் சஹேல் பிராந்தியத்தில் உள்ள ஆப்பிரிக்கப் பெண்கள் ஆணாதிக்கம், ஏகாதிபத்தியம் ஆகிய இரண்டுக்கும் எதிராக தீவிரப்போராட்டம் நடத்தி வரு கின்றனர் என தெரிவிக்கப்பட்டது. அக்கருத்தரங்கில் மேலும் தெரிவிக்கப் பட்டதாவது: சஹேல் பிராந்தியத்தில் பிரான்ஸ் ராணுவம் மற்றும் அந்நாடு களை கொள்ளையடித்து வரும் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு எதிரான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களில் அந்நாட்டுப் பெண்கள் முன்களப் போராளிகளாகவும், அமைப்பாளர்களாகவும், புரட்சியா ளர்களாகவும் இருந்து வருகின்றனர். பிரான்ஸ் அரசின் மொழி திணிப்பு, ஆதிக்கம், மதப் பிளவுவாதம் மற்றும் பிரான்ஸ் நாட்டுக்கு சேவை செய்யும் வகை யிலான கல்வித் திட்டங்களை திணிப்பது ஆகியவற்றுக்கு ஆயிரக்கணக்கான மக்களிடையே தொடர் பிரச்சாரங்களை முன்னெடுத்துச் செல்வதில் அவர்களே முக்கியப் பங்கை வகிக்கின்றனர். ஆப்பிரிக்க ஜனநாயகப் பேரணி போன்ற பெண்கள் சார்ந்து இயங்கும் முற்போக்கு இயக்கங்கள் இப்பெண்களை ஊக்குவித்து தலைவர்களாக மாற்று கின்றன. தாமஸ் சங்காரா போன்ற முற் போக்கு சோசலிஸ்ட் தலைவர்களால் ஈர்க்கப்பட்டு பெண்கள் அரசியலில் தலைமைப் பதவிக்கு உயர்ந்துள்ளனர். அப்பெண்கள் மேலும் ஆயிரக்கணக்கான பெண்களை ஈர்த்து காலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிரான போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது சஹேல் நாடுகளின் கூட்டமைப்பானது அரசியல், பொருளா தாரம், ராணுவம் மற்றும் கலாச்சார இறை யாண்மையை ஒன்றிணைத்துப் பாதுகாப்பதில் புதிய உத்வேகத்தை அளித் துள்ளன. குறிப்பாக இந்நாடுகளில் உள்ள பெண்கள் இந்த வாய்ப்பைப் பயன் படுத்தி தங்கள் நாட்டில் தன்னாட்சி அமை ப்புகளை வலுப்படுத்தி வருகிறார்கள். சஹேல் நாடுகளில் உள்ள பெண்களில் சுமார் 70 சதவீதத்துக்கும் அதிகமான பெண்கள் விவசாயத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களே உள்ளூர்ப் பொருளாதாரங்களையும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் முக்கி யப்பங்கு வகிக்கின்றனர். மேலும் அர சியல், கல்வி மற்றும் இயற்கை வள மேலாண்மையில் பெண்களின் தலை மையை ஏற்றுள்ளனர். இருப்பினும் அர சாங்கத்தில் முடிவெடுக்கும் பதவிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் இன்னும் குறைவாகவே உள்ளது என அதில் குறிப்பி டப்பட்டுள்ளது.