articles

img

குடியரசுத் தலைவர் உரையில் நாட்டின் முக்கிய பிரச்சனைகள் புறக்கணிப்பு

 தலைவரின் உரை மீதான  நன்றி தெரிவிக்கும் தீர்மானத் தின் மீது  திருத்தங்கள் அளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், நாட்டின் முக்கிய பிரச்சனைகள் பற்றி குடியரசுத் தலைவரின் உரையில் எந்த குறிப்பும் இல்லாதது கண்டனத்திற்குரியது என விமர்சித்தார். வேலையின்மை அதிகரிப்பு, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு,

பொருளாதார மந்தநிலை, மணிப் பூர் வன்முறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து குடியரசுத் தலைவரின் உரையில் எந்த குறிப்பும் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். அதானி குழுமத்திற்கு ஆதர வான லஞ்சம் மற்றும் பாரபட்சம் குற்றச்சாட்டுகள், மின்னணுமய மாக்கல் பெயரில் ஊரக ஏழைக ளின் உரிமைகள் மீதான தாக்கு தல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலா ளர்களின் பரிதாப நிலை ஆகிய வற்றையும் குடியரசுத் தலைவர் உரையில் குறிப்பிடவில்லை என்றார்.

வயநாடு மண்சரிவு பாதிப்பு களுக்கு ஒன்றிய அரசு நிவாரண நிதி மறுத்தது, டாக்டர் அம்பேத்கர் குறித்த உள்துறை அமைச்சரின் அவமதிப்பு கருத்துக்கள், மகாகும்பமேளாவில் பக்தர்க ளுக்கான ஏற்பாடுகளில் நிர்வாகத் தோல்வி, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் கள் அதிகரிப்பு போன்ற முக்கிய பிரச்சனைகளையும் குடியரசுத் தலைவரின் உரை புறக்கணித் துள்ளதாக எம்.பி. சச்சிதானந்தம் தனது திருத்தங்களில் சுட்டிக் காட்டினார். இந்த பிரச்சனைகள் அனைத் தையும் கருத்தில் கொண்டு குடி யரசுத் தலைவரின் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத் தில் திருத்தங்களை முன்மொ ழிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.