முற்போக்கு முகமூடி மூலம் தூவிவிடப்படும் அவதூறுகள் - அ.அன்வர் உசேன்
ராஜசங்கீதன் எனும் பத்திரிகையா ளர் ‘தி வயர்’ இணைய இதழில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு குறித்து எழுதிய கட்டுரை பல விமர்சனங்களை உள்ளடக்கி யுள்ளது. இக்கட்டுரையும் சில ‘முன்னாள் கம்யூனிஸ்டுகளின்’ சமூக ஊடகப் பதிவு களும் உண்மைகளைத் திரித்தும், தவ றான தகவல்களைப் பரப்பியும் வரு கின்றன. இத்தகைய விமர்சனங்கள் ஆக்கப்பூர்வமாக இல்லாமல், கட்சிக்கு எதிரான அவதூறுகளாகவே அமைந்து உள்ளன.
இந்திய பாசிசம் குறித்த விவாதம்
ராஜசங்கீதனின் கட்டுரை கீழ்கண்ட வாறு குறிப்பிடுகிறது:
• “இப்பொழுதும் கூட பாஜகவின் பாசிசம் முன்னேறிக் கொண்டிருக்கும் பொழுது மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தீர்மானம் இந்தியா முழுமையாக பாசிசத்தை அடைய
வில்லை என கூறுகிறது. இந்த தெளிவின்மை
யால் யார் லாபம் அடைவர்?”
இந்த விமர்சனம் அடிப்படையிலேயே முரண்பாடுடையது. பாசிசம் முன்னேறிக் கொண்டிருப்பதை ஒப்புக்கொள்ளும் அதே வேளையில், அது முழுமை யடைந்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி ஏன் அறிவிக்கவில்லை என்ற கேள்வி எழுப்பு கிறது. பாசிசம் முழுமையாக நிலைநாட்டப் பட்டால் என்ன நடக்கும் என்பதை உணர்ந்தே கட்சி இத்தகைய நிலைப் பாட்டை கொண்டுள்ளது. அத்தகைய சூழ லில் ஜனநாயக உரிமைகள் முற்றிலும் மறுக்கப்படும், எதிர்க்குரல்கள் அனைத்தும் ஒடுக்கப்படும். இந்த ஆபத்தை எதிர் கொள்ளவே கட்சியின் தீர்மானம் வலு வான எச்சரிக்கையை வழங்குகிறது. குறிப்பிடத்தக்க மற்றொரு அம்சம், அக்கட்டுரையில் ஆர்.எஸ்.எஸ். பற்றிய குறிப்பு இல்லாதது. பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தான் இந்தியா வில் பாசிச சித்தாந்தத்தின் முக்கிய ஊற்றுக்கண்ணாக உள்ளது என்ற அடிப் படைப் புரிதலே இல்லாமல் பாசிசத்தை பற்றிய எந்த விவாதமும் முழுமையடை யாது.
முடிவுகளை “வலுவான மாநிலங்கள் ஆக்கிரமிக்கின்றனவா?”
தி வயர் கட்டுரையில் இவ்வாறு குறிப் பிடப்படுகிறது:
• மார்க்சிஸ்ட் கட்சியில் “தேசிய அளவில் முடிவுகள் உருவாக்கும் இடத்தில் வங்காள நிலை மற்றும் கேரளா நிலை எடுக்கும் தலை வர்களால் நிரப்பப்பட்டுள்ளது... தேசத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து போதுமான பிரதி நிதித்துவம் இல்லை. பெரும்பாலான சம யங்களில் மற்றவர்கள் இந்த இரு மாநிலங் களின் ஏதாவது ஒரு நிலையை ஏற்றுக்கொள் வதை தவிர வேறு வழியில்லை.”
இந்த குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது. 2024ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி: மொத்த கட்சி உறுப்பினர்கள்: 10,19,009 கேரளாவின் உறுப்பினர்கள்: 5,64,895 (55%) அரசியல் தலைமைக் குழுவில் கேரளாவைச் சேர்ந்தவர்கள்: 4 பேர் (22%) மத்தியக் குழுவில் கேரளாவைச் சேர்ந்தவர்கள்: 18 பேர் (21%) இந்த விவரங்கள் மாநாட்டின் பத்திரி கையாளர் சந்திப்பில் பகிரங்கமாக வழங்கப்பட்டவை. கட்சியின் கொள்கை முடிவுகள் எடுப்பதில் அரசியல் தலை மைக் குழுவும் மத்தியக் குழுவும் முக்கிய பங்காற்றுகின்றன. இதில் கேரளாவின் பிரதிநிதித்துவம் எங்கே அதிகமாக உள்ளது? கட்சியின் வளர்ச்சியிலும் செயல்பாடு களிலும் மேற்கு வங்கம் மற்றும் கேரளா மாநிலக்குழுக்கள் பெரும் பங்காற்றி யுள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. எனினும், கட்சி முடிவுகளில் கேரளா அல்லது மேற்கு வங்கத்தின் நிலைப் பாடுகள் மட்டுமே திணிக்கப்படுகின்றன என்பது நியாயமற்ற குற்றச்சாட்டாகும்.
ஜனநாயக மத்தியத்துவம்
கட்டுரையில் ஜனநாயக மத்தியத்து வம் குறித்து பின்வருமாறு குறிப்பிடப்படு கிறது:
ஜனநாயக மத்தியத்துவம் கட்டுரையில்
ஜனநாயக மத்தியத்து வம் குறித்து பின்வருமாறு குறிப்பிடப்படு கிறது:
• “ஜனநாயக மத்தியத்துவ மாடலில் கட்சியின் அனைத்து முடிவுகளும் பெரும் பான்மை-சிறுபான்மை என்ற அடிப்படையில் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்படுகின்றன. பெரும்பான்மை முடிவுதான் கட்சியின் இறுதி நிலை என நிலைநாட்டப்படுகிறது.”
ஜனநாயக மத்தியத்துவம் என்பது வெறும் பெரும்பான்மை-சிறுபான்மை வாக்கெடுப்பு மட்டுமல்ல. புரட்சியின் பல அம்சங்களில் லெனினது நிலைப்பாடு களுக்கு மாறாக நின்றவர் டிராட்ஸ்கி. ஆனால் அவரே கூட, “விவாதங்களில் ஜனநாயகம்; அமலாக்கத்தில் மத்தி யத்துவம்” என்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் சாரம் என்கிறார். ஒரு பிரச்சனையை விவா திப்பதில் அதிகபட்ச ஜனநாயகமும், முடிவை அமலாக்குவதில் அதிகபட்ச மத்தியத்துவமும் தேவைப்படுகிறது. ஜனநாயக மத்தியத்துவத்தின் ஒரு முக்கிய அம்சம், கட்சி உறுப்பினர்கள் கொள்கை முடிவுகளில் பங்கேற்க வைப்ப தாகும். உதாரணமாக, கட்சியின் வரைவு அரசியல் தீர்மானம் அனைத்து மொழி களிலும் மொழிபெயர்க்கப்பட்டு உறுப்பி னர்களின் விவாதத்திற்கு முன்வைக்கப்பட் டது. 4200க்கும் அதிகமான திருத்தங்கள் முன்மொழியப்பட்டு, அவற்றில் 133 திருத் தங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதுவும் ஜனநாயக மத்தியத்துவத்தின் முக்கிய அம்சமாகும். கட்சி அமைப்புகள் பட்டிமன்ற மேடை கள் அல்ல. கட்சியின் கட்டுப்பாட்டிற்குள் தன்னை உட்படுத்தி, கூட்டு முடிவுகளை மதித்து செயல்படுவது கம்யூனிஸ்டு இயக்கத்தின் அடிப்படைப் பண்பாகும்.
சாதிய இட ஒதுக்கீடு விவாதம்
திவயர் கட்டுரையில் சாதிய அடிப்ப டையில் கட்சியில் இட ஒதுக்கீடு தேவை என வாதிடப்படுகிறது:
• “காங்கிரஸ் கூட சாதிய அடிப்படையில் இட ஒதுக்கீடுக்காக தனது அமைப்பு சட்டத்தை திருத்திவிட்டது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி இன்னும் செய்யவில்லை”
கம்யூனிஸ்டு கட்சி, சமூக சூழல்கள் அமைப்புக்குள் பொருத்தமாக பிரதி பலிப்பதை உறுதிசெய்கிறது. குறிப்பாக தலித் பிரிவினர், பிற்படுத்தப்பட்ட பிரிவி னர், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் தலைமையில் இடம்பெறுவதற்காக கட்சி தொடர்ந்து முயற்சித்து வருகிறது. எனி னும், சாதிய அடிப்படையில் கட்சி அமைப் புக்குள் இட ஒதுக்கீடு என்பது கம்யூனிஸ்டு கோட்பாட்டுடன் பொருந்தாத ஒன்றாகும். கட்சியில் தியாகம், செயல்பாடுகள், அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகிய வற்றின் அடிப்படையிலேயே தோழர்கள் தலைமைப் பொறுப்புக்கு உயர்த்தப்படு கிறார்கள்.
பெரியாரும் சிங்காரவேலரும்
அக்கட்டுரையில் தமிழ்நாட்டில் கம்யூ னிசம் குறித்து:
• “தமிழ்நாட்டில் கம்யூனிசத்தின் அறி முகம் கம்யூனிஸ்டு கட்சிகளிடமிருந்து வர வில்லை. பெரியார் மூலமாகத்தான் வந்தது. அவர்தான் 1931 காலத்திலேயே கம்யூனிஸ்டு அறிக்கையை மொழிபெயர்த்தார்.”
- என்று கூறப்பட்டுள்ளது. வரலாற்று உண்மைகளை புறக் கணித்த கூற்று இது. பெரியாருக்கு முன்பே சிங்காரவேலர் தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடி யாக செயல்பட்டார். 1925ஆம் ஆண்டு கான்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்டு மாநாட்டில் சிங்காரவேலர் தலைமை தாங்கினார். மே தினம் கொண்டாடியதும், லெனினுக்கு கடற்கரையில் அஞ்சலி கூட்டம் நடத்தியதும் வரலாற்று நிகழ்வு கள். பெரியாரின் பங்கு போற்றப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை. மாறாக, இரு பெரும் தலைவர்களையும் ஒருவருக்கெதிராக மற்றொருவரை நிறுத்து வது சரியான அணுகுமுறை அல்ல. பிராமணரல்லாத இயக்கம் குறித்து பெரியாருக்கு முன்பே மகாராஷ்டிராவில் ஜோதிபா பூலே பிராமணியத்துக்கு எதி ராக இயக்கம் உருவாக்கியது குறிப்பிடத் தக்கது. பெரியாரை இனவாதி என கம்யூ னிஸ்டுகள் குறிப்பிட்டதாக செய்யப்படும் குற்றச்சாட்டு தவறானது. பெரியார் மிகப் பெரிய சீர்திருத்தவாதி, வர்ணாசிரமத் துக்கு எதிராக போராடிய சமூக போராளி என்பதே கம்யூனிஸ்டு இயக்கத்தின் நிலைப்பாடாகும்.
தமிழும் கம்யூனிஸ்டுகளும்
1960களில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலிருந்து கம்யூனிஸ்டுகள் விலகி நின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்மைக்கு புறம்பானது. எந்த ஒரு மாநிலத்தின் மீதும் எந்த ஒரு மொழியை யும் திணிக்கக் கூடாது என்பதே கம்யூ னிஸ்டுகளின் நிலைப்பாடாகும். தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியது தோழர் பி.ராம மூர்த்தி. தமிழுக்காக உயிரை கொடுத்த சங்கரலிங்கனார் தனது உடலை கம்யூ னிஸ்டுகளிடம் ஒப்படைக்க வேண்டும் என உயில் எழுதி வைத்தார். நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எனும் பெயரை சூட்ட வேண்டும் என தீர்மானம் முன்மொழிந்தது பி.ராம மூர்த்தி. தமிழ்நாட்டில் அனைத்து அலு வல்களிலும் தமிழை பயன்படுத்த வேண் டும் என சட்டமன்றத்தில் வலியுறுத்தி யவர் தோழர் சங்கரய்யா. “தி வயர்” இதழில் வெளியான கட்டுரை யும் சில முன்னாள் கம்யூனிஸ்டுகளின் சமூக ஊடக பதிவுகளும் தவறான தகவல் களை பரப்புவதாக அமைந்துள்ளன. ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை கட்சி எப்போதும் வரவேற்கிறது. ஆனால் அவ தூறுகள் விமர்சனங்களாக மாறிவிடாது. தற்போதைய காலகட்டத்தில் நவீன பாசி சத்தின் ஆபத்தை எதிர்கொள்ள முற் போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.