இருப்பது ஒரு மோதிரம் பதிக்க தேர்ந்தெடுக்க எத்தனை கற்கள்? பழகிய வானம் தான் பலமுறை பார் புது நட்சத்திரம் தெரியும். அம்மாவின் ஜோடி மூக்குத்தி ஜொலிக்கும். கோடி நட்சத்திரங்கள் அதை பிரதிபலிக்கும். வானத்துக்கு தான் எத்தனை ஞானம்? ஒளிரும் அச்சரங்களையே எழுதிக்காட்டுகிறதே. பல வண்ண வானவில்லை காணவில்லை என அழுகிறது மேகம். அதை மானுடம் உணரவில்லை என்பது தான் சோகம். அகவல் காலம் அப்போது. தகவல் காலம் இப்போது. ஆரத்தழுவும் காலம் தான் அமைந்து வருதல் எப்போது? - ஜீவி