articles

img

பாசிசத்தின் இந்தியப் பதிப்பு எப்படி இருக்கும்? - ப.முருகன்

இனவெறி பேசும். மதவெறி கிளப்பும். கலாச்சாரம் கதைக்கும். தேசியம் சிலாகிக்கும். ஏழைகளை ஏறி மிதிக்கும். உழைப்பாளிகளை ஒட்டச் சுரண்டும். முதலாளிகளுக்கு சாமரம் வீசும். ரத்தவெறி  பிடித்தலையும், ஆனால் சமாதானத்தூது வர் போல் நடிக்கும். பொய்மையே பேசும்.  அதை உண்மை என்றே சாதிக்கும். அதுதான்  பாசிசம் எனச்சொல்லாம். ஆனால் அதற்குள்  மட்டும் அடங்குவதில்லை. அது தேவைக்கு ஏற்ப சூழலுக்கு ஏற்ப விதவிதமாய் வேஷங்கள் போடும். வெவ்வேறு முகம் காட்டும். அதன் நோக்கம் இனரீதியான ஆதிக்கம் செலுத்துவதே. அதற்காக இல்லாததும் பொல்லாததும் சொல்லும். அதை நல்லதென்றே நம்பச் சொல்லும்.  இத்தாலியில் துவங்கிய பாசிசம், ஜெர் மனியில் நாஜிசம் என்றானது. இந்தியாவிலோ இந்துத்துவா என்கிறது. இத்தாலியிலும் ஜெர்மனியிலும் அதிகாரத்தைப் பிடிப்ப தற்காக தனிமனிதர்களான முசோலினியும், ஹிட்லரும் ஆரிய இனவெறியைக் கிளப்பி னார்கள். யூத மதத்தினரை கொடூரமாக அழித்தார்கள். தேசியம் பேசி முதலாளி களின் ஆதரவைப் பெற்றார்கள். அவர் களது காரியத்தை சாதித்துக்கொண்டார்கள். ஹிட்லர் தனது குருவான முசோலினியையும் மிஞ்சி தனது நாட்டில் மட்டுமல்லாது மற்ற நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்துவதற்காக நாடுகள் மீது போர் தொடுத்தான். அதற்கு இனவெறியும் காரணமாய் இருந்தது.

ரஷ்யாவில் உழைப்பாளிகளின் ஆட்சி வந்தது போல தங்கள் நாடுகளிலும் வந்து விடக் கூடாது என்பதற்காக முதலாளிகள் அவர்களை ஆதரித்தார்கள். அவர்களுக்குத் தேவை லாபம்தானே. மக்களின் உயிர்கள் பற்றி கவலை என்ன? ஆனால் இவர்கள் இருவருமே தங்களது சித்தாந்தத்தை சோச லிசம் என்று கூறிக்கொண்டார்கள். அவர்களைப்போல் இந்துத்துவவாதிகளும் சோசலிசம் பேசினார்கள். அதாவது காந்திய  சோசலிசம் என்றார்கள் என்பது கவனிக்கத் தக்கது.  முசோலினி, ஹிட்லரின் கதி என்னவென்பது வரலாறு கண்டுவிட்டது. அவையாவும் முப்பது ஆண்டுகளுக்குள் முடிந்துவிட்டது. ஆனால் இந்தியா வில் தனிப்பட்ட நபரால் அல்ல  ஆர்எஸ்எஸ் எனும் நூற்றாண்டு காணப்போகும் அமைப்பால்  நடைபெறுகிறது. இந்து மகாசபைக்கு முன்பே  ஆரியசமாஜம் - தயானந்த சரஸ்வதி என்பவரால் விதை ஊன்றியது. திலகரும் தண்ணீர் ஊற்றினார். மூஞ்சே முசோலினியைச் சந்தித்து மூல  பலம் பெற்று இந்து மகாசபை சார்பில்  ராணுவப் பள்ளி நடத்தினார். ஹெட்கே வார் ஆர்எஸ்எஸ் - ஐ துவக்கினார். மூஞ்சேவுக்கும் ஹெட்கேவாருக்கும் இடையில்தான் சாவர்க்கர் தலையெடுத்து ஆரிய இனப்பெருமிதத்தை இந்துப் பெரு மிதமாக மாற்றினார். சுதந்திரப் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்து பிரிட்டி ஷாரிடம் பென்ஷன் பெற்று இந்துத்துவா அணிதிரட்டலுக்கு ஆட்சியாளர்களின் தயவைப் பயன்படுத்தினார். முஸ்லீம் கள்தான் எதிரிகள் என்றார். அதனால்தான் இந்து- முஸ்லிம் ஒற்றுமை பேசிய காந்தியை கொலை செய்ய கோட்சேவை அனுப்பினார். 

கோல்வால்கர், ஆரிய இனத்தின் மேன்மைக்கு வேதகால முலாம் பூசி சனாதன - நால் வருண - மனுதர்ம சாதிய  ஏற்றத்தாழ்வுகளை மறைத்து இந்துக்களின் எதிரிகள் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் என்று கூறி மதவெறியைக் கூர்மையாக்கினார். அடுத்தடுத்த ஆர்எஸ்எஸ் தலைவர்கள் அர சியல் களத்தில் இறங்கி ஆட்சியை பிடிக்க - அரசியல் பிரிவாக ஜனசங்கம் துவங்கி ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சியில் இடம்பெற்ற னர். பின்னர் ஆர்எஸ்எஸ் தொடர்பை விடச்சொன்னதால் ஜனதா-விலிருந்து வெளி யேறி பாரதிய ஜனதா கட்சியை துவக்கி னர்.  பாபர் மசூதி இடிப்பு, மண்டல் கமிஷன் எதிர்ப்பு, அயோத்தி ராமர் கோவில், குஜராத் படுகொலை என்று கொடூரங்கள் நிகழ்த்தி மதவெறி தாக்கத்தில் ஒன்றிய ஆட்சியை கூட்டணியாகவும் தனி யாகவும் பிடித்துவிட்டனர். அதனால் தற்போது அவர் களது ஒற்றை நோக்கத் துக்காக பல்வேறு பெயர் களில் பல்வேறு திட்டங் களைப் புகுத்துகின்றனர். ஜனநாயகம், மதச்சார் பின்மை, சமூக நீதி, அடிப்படை உரிமை களை வழங்கும் அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிய முயற்சிக்கின்ற னர். அதை நீர்த்துப் போகச் செய்யும் திருத்தங்களை செய்கின்றனர். எதிர்ப்பவ ர்களை தேசவிரோதிகள் என்கின்றனர். பரி வாரங்களைக் கொண்டு கொலை செய் கின்றனர். என்ஐஏ மூலம் சிறையிலடைக் கின்றனர். “இந்த நாட்டில் மனுதர்ம ஆட்சி யை கொண்டுவர முயற்சிக்கின்றனர். மாநில  உரிமைகளைப் பறிக்கின்றனர். சமஸ்கிருதம், இந்தியைத் திணிக்கின்றனர். தமிழ்மொழியை அழிக்கத் துடிக்கின்றனர். நாடாளுமன்ற ஜனநாயகத்தை மட்டுமல்ல, நாடாளுமன்றத்தையே மாற்றி ஒற்றைத் தலைமை அதிபர் ஆட்சிமுறைக்கு எத்தனிக்கின்றனர். மாநிலங்களைக் கூறு போட்டு தொகுதிகளை அதிகப்படுத்தி சர்வாதிகாரத்தை நோக்கி நடை போடவே எண்ணிக்கை அதிகரிக்கும்.இடவசதி வேண்டும் என்று புதிய நாடாளுமன்றத்தை கட்டியதாகக் கூறுகின்றனர். அதுவும் கூட புராணகால புனைவுகள் காட்சிப் படுத்தப்பட்டதாக; ஜனநாயகத்தை, அர சியல் சட்ட மாண்புகளை குழிதோண்டிப் புதைப்பதாக உள்ளது எனத் தெரிய வந்துள்ளது. 

எனவே அவர்களது மாய்மாலங்களை யும் தகிடு தத்தங்களையும் மக்களிடையே எடுத்துரைக்க அனைத்து தகவல்களும் நிறைந்ததாக ஆதாரப் பூர்வ விபரங்களு டன் ஆய்வாளர் அருணன் அவர்களால் படைக்கப்பட்ட நூல்தான் ‘முசோலினி முதல் மோடி வரை’.  பாசிசக் கோட்பாடு மற்றும் நடைமுறை சங்பரிவார ஆட்சியின் சிந்தனை மற்றும் செயல்பாட்டுடன் எப்படி பொருந்திப் போகின்றன என்பதை இந்த நூல் விவரிக்கிறது. பாஜக அரசு பாசிச அரசே என்பதற்கான ஆதாரங்களை இது தருகிறது. பாசிச எதிர்ப்புப் போர்க்களத்தில் இந்த நூல் ஓர் அறிவாயுதமாகத் திகமும் என்று நூலாசிரியர் கூறுவது முற்றிலும் பொருத்தமே. கம்யூனிஸ்ட்டுகள்  உள்ளிட்ட சமூகப் போராளிகள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூலாகும்.

முசோலினி முதல் மோடி வரை (கட்டுரைகள்)
ஆசிரியர்: அருணன் 
வெளியீடு: வசந்தம் 
வெளியீட்டகம், 
69 - 24ஏ, அனுமார் 
கோவில் படித்துறை, 
சிம்மக்கல், மதுரை - 625001.
பேசி : 9384813030. 
பக்கம். : 144, விலை: ரூ.120