உயர்கல்வித்துறையின் அர சாணை எண்:53, (நாள் 3.3.2023) மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணி யாற்றும் 65 இணை பேராசிரியர்கள் பதவி உயர்வு அளிக்கப்பட்டு பெரும் பாலானோர் தூர இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். பணி ஓய்வு பெற சராசரியாக நான்கு ஆண்டு கள் மட்டுமே எஞ்சிய நிலையில் இந்த பதவி உயர்வின் மூலம் அடிப்படை ஊதியத்தில் உயர்வு இல்லை. இத னால் ஓய்வூதிய பணப்பலன்கள் எது வும்கிடையாது. பணிஓய்வுபெறு வதற்கு இரண்டு மாதமே உள்ள பேரா சிரியர் ஒருவரும் தனது குடும்பத்தை வி்ட்டு 100 கிமீ-க்கு அப்பால் உள்ள கல்லூரிக்கு இடமாற்றம் செய்யப் பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.
பாதிக்கப்பட்ட இணைப் பேராசிரியர்கள்
இந்த பதவி உயர்வு மாறுதலில் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டது சென்ற ஆண்டு புதிதாக துவக்கப் பட்ட 20 புதிய அரசு கலை மற்றும் அறி வியல் கல்லூரிகளும் அவைகளில் பொறுப்பு முதல்வர்களான இணை பேராசிரியர்களும்தான். பொறுப்பு முதல்வராக நியமிக்கப்பட்டிருந்த 20 இணை பேராசிரியர்கள் இந்தக் கல்லூரிகளுக்கான அடிப்படை வசதி களை உருவாக்க, மாணவர் சேர்க்கை யை உயர்த்த துவக்கத்தில் போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் பற்றாக் குறையான கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை வைத்துக் கொண்டு கல்லூரிகளை ஓரளவிற்கு நல்ல தகுதி நிலைக்குக் கொண்டு வர முயற்சித்து வந்தனர். சுருக்கமாக சொல்வதானால், பெரும்பாலான பொறுப்பு முதல்வர்கள் அந்தந்த இடங்களில் உள்ள, பிரமுகர்களிடமும் தொண்டு அமைப்புகளிடமும் இட வசதி மற்றும் தளவாட பொருட்களுக்கான நன்கொடைகள் பெற யாசகவேள்வி யும் நடத்தினர். பல ஊர்களில் உள் ளூர் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கி்டைக்கவில்லை. அருகாமை கல்லூரிகளில் இருந்து புதிதாக உரு வாக்கப்பட்ட கல்லூரிகளில் நியமிக்கப் பட்ட எல்லா பொறுப்பு முதல்வர் களும் அடிப்படை ஊழியர் பணிகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் செய்ய வேண்டிய நிலை இருந்தது. இந்த கல்லூரிகளில் செய்து முடிக்க வேண்டிய அடிப்படைப் பணி கள் இன்னமும் ஏராளம் உள்ளன. மிக முக்கியமாக வரும் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கையை குறையாமல் உறுதிப்படுத்தி அதிகரிக்க வேண்டும். இதற்கு ஏற்கனவே பெற்றி ருந்த தல தொடர்புகள் மற்றும் அனுபவ அறிவுடன் அதே கல்லூரிகளில் பணி யாற்றினால்தான் எதிர்வரும் காலங் களில் இது சாத்தியமாகும். இந்தக் கல்லூரிகளில் பணியாற்றி வந்த பெரும் பாலான இணைப் பேராசிரியர் களைதான் உயர்கல்வித்துறை அதிரடி யாக பதவி உயர்வு என்ற பெயரில் இட மாற்றம் செய்து தொலை தூரங் களுக்கு தூக்கி அடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடமாறுதலின் விளைவுகள்
கடுமையாக உழைத்து பணி யாற்றிய இப்பேராசிரியர்களின் வெகு ஜனக் கல்விக்கான அர்ப்பணிப்பு உறுதியான நேர்மை மற்றும் நிர்வாக மன உறுதியின் மீது இந்த இடமாறு தல்கள் ஒரு தாக்குதலை நடத்தி உள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தளி, புதுக்கோட்டை மாவட்டத்தில் திரு மயம், திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் (ஒரே ஒரு மகளிர் கலைக்கல்லூரி), திண்டுக்கல் மாவட்டத்தில் ரெட்டியார்சத்திரம் போன்ற இடங்களில் உள்ள புதிய கல்லூரிகளை உதாரணமாக கூற முடியும். இந்த இடங்களில் எதிரெதிர் பதிலியாக நியமிக்கப்பட்டு வந்தி ணைந்த பேராசிரியர்களும் தொலை விலிருந்து தான் வந்துள்ளனர். சென்னையில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்திற்கும் திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லூருக்கும் சேலத்தில் இருந்து திருவாரூர் மாவட்டம் நன்னிலத்திற் கும் அளிக்கப்பட்ட மாறுதல்கள் சில உதாரணங்கள் ஆகும். அரசியலில் ஒருவருக்கு குறிப்பிட்ட தொகை கொடுத்தால்தான் தாங்கள் எதிர்பார்க்கும் ஊர்களில் தொடர முடியும் என ‘இடைத் தர கர்கள்’ திரைமறைவில் பேராசிரி யர்கள் மத்தியில் நிர்பந்தத்தை உரு வாக்கியதாகவும் மோசடி வசூல் வேட்டையில் இறங்கியதாகவும் பின்னர் அந்தத் தொகையை அவர்களே பங்கு போட்டுக் கொண்டு கபளீகரம் செய்து கொண்டதாகவும் தகவல்கள் தெரிவித்தன.
உடல்நிலை குடும்ப சூழ்நிலை வயது எஞ்சிய பணிக்காலம் - கார ணமாக படித்தவர்களும் இரை யாகக் கூடும் என்பதற்கு இவை உதா ரணங்களாகும். இதில் அருவருப் பான விஷயம் என்னவென்றால் கடந்த அதிமுக ஆட்சியில் ஆதரிக்கப் பட்டு நீண்ட காலமாக உயர்கல்வித் துறையின் அதிகார மட்டத்தில் ஊடுருவி டிரான்ஸ்பர் போஸ்டிங்கு களில் ஏற்கனவே ஊறி நொதித்து ஊதிப் பெருத்த ஒரு சில சுயநல ஊழல் பெருச்சாளிகள்தான் இதற்கு காரணம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. இதற்கு தீர்வாக இரண்டு சாத்தியக் கூறுகள் உள்ளன. ஒன்று புதிய கல்லூரிகளில் இருந்து தூர இடங் களுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்ட வர்களிடம் உடனே விருப்பக் கடிதம் பெற்று மீண்டும் அந்த கல்லூரிகளில் முதல்வர்களாக நியமிக்கவேண்டும். இரண்டு, பதவி உயர்வு இட மாறுதல் உள்ளிட்ட நியமன ஆணைகளில் நிழல் ராஜ்ஜியம் நடத்தும் ஊழல் பெருச்சாளிகளை கண்டுபிடித்து வாலை பிடித்து சுவற்றில் அடித்துதூர வீசி எறிந்து கல்வித்துறையை சுத்திகரிக்க வேண்டும். பாதிப்பிற்கு உள்ளான நேரெதிர் பதிலி பேராசிரியர்களுக்கும் உரிய பரிகாரம் வழங்க வேண்டும். இதையே கல்வி யாளர்கள் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க் க்கிறார்கள். தமிழ்நாடு அரசும் மாநில நிர்வாகமும் இதில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நீடா சுப்பையா