articles

img

முரட்டுச் சக்கரவர்த்தியின் பதற்றத் தருணங்கள்! - ஹரிஷ் காரே

பஞ்சாப் ஃபெரோஸ்பூர் பாலத்தில் நிகழ்ந்த அந்த 20 நிமிடங்கள் காத்திருப்பு, மிகப் பெரிய அளவிலான  கலகங்கள் வெறியாட்டங் கள் மூலம் இந்தியாவின் பிரதமர் நாற்காலியில் உட்கார்ந்த ஒருவரின் மிகப்பெரிய பலவீனம் எது என்பதை வெளிக்காட்டிவிட்டது.  ஒன்றை நாம் எப்பொழுதும் நினைவில் கொள்ள வேண்டும். நரேந்திர மோடி ஒரு நாகரிக ஜனநாயகத் தின் முக்கிய அம்சங்களை கைகொண்டதன் மூலம் பிரத மராக ஆகவில்லை. தனது சில சூட்சுமங்களை நெம்பு கோலாக பயன்படுத்தி சொந்த கட்சியில் உச்சத்துக்கு  வந்தார்.  ஒரு கும்பலை உசுப்பேற்றி தூண்டிவிடுவது எப்படி எனும் திறமையை அவர் பெற்றிருந்தார். அது தான் “அமைதியான ஆனால் பெரும்பான்மையான” இந்துத்துவ வலதுசாரிகளுக்கு அவர் களநாயகனாக ஆவதற்கு வழிகோலியது.  மிகவும் நுணுக்கமாக திட்டமிடப்பட்ட, எவரும் சந்தேகம் கொள்ள முடியாத, ஆனால் மிகவும் பொறுப்பற்ற மோசமான இந்தத் திற மைதான் அவரது கட்சியில் இருந்த பழமையான தலை வர்களான அத்வானி/முரளி மனோகர் ஜோஷி/சுஷ்மா சுவராஜ்/நிதின் கட்காரி ஆகியோரை ஒரம் கட்டிவிட்டு அவர் மேலே வர சாத்தியமாக்கியது. பா.ஜ.க.வுக்கு அப்பாலும் அவரது முரட்டுத்தனம், “வலிமை” எனும் பெயரால்  மன்மோகன் சிங் அல்லது வாஜ்பாயின் மென் மையான போக்குக்கு எதிரானது என்ற வகையில் பல ராலும் ஆதரிக்கப்பட்டது.

உறைந்து போன பிரதமர்

இப்பொழுது ஃபெரோஸ்பூர் பாலத்தில் நடந்த நிகழ்வுகள் புதிய நரேந்திர மோடியை வெளிப்படுத்தி யுள்ளது; மிக ஆழமான உறுதியற்ற மனிதரை, அதுவும் பயம் கொண்ட ஒரு மனிதரை அந்த நிகழ்வு அம்பலப் படுத்தியுள்ளது. ஒரு வேளை மோடி 10 வயது இளையவராக இருந்தி ருந்தால் கீழ்கண்ட தைரியமான இரு அணுகுமுறைக ளில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்வது சாத்தியமாக இருந்திருக்கும் என நம்ப வாய்ப்பு உண்டு: H தனது விலை உயர்ந்த லிமவுசின் காரிலிருந்து இறங்கி  விவசாயிகளை நோக்கி நடந்து சென்றிருக்க லாம்; அவர்களுடன் கருத்து பரிமாற்றம் செய்திருக்க லாம். அப்படி செய்திருந்தால் தொலைக்காட்சிகளில் மிகப்பெரிய தாக்கம் உருவாகியிருக்கும். அங்கு போரா டிக்கொண்டிருந்த விவசாயிகள் எவரும் ஆபத்தான வர்கள் அல்லது வன்முறையாளர்கள் என சொல்வ தற்கு எந்த முகாந்திரமும் இல்லை. ஒரு பாதகமான சூழ லிலும் பிரதமர் தைரியத்துடனும் உறுதியுடனும்  செயல் பட்டார் எனும் பெயரும் ஏற்பட்டிருக்கும். பல சமயங்க ளில் தன்னை ஆராதிப்பவர்களுடன் அடிக்கடி புகைப் படம் எடுப்பதையும் அது தரும் விளம்பரத்தையும்  அவர் விரும்பியிருக்கிறார்.  

அல்லது தனது பதவி தரும் அதிகாரம் முழுவதை யும் பயன்படுத்தி உள்துறை அமைச்சரிடம் மத்திய பாதுகாப்பு படைகளை உடனடியாக வரவழைத்து போ ராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த ஆணையிட சொல்லியிருக்கலாம். மத்திய பாதுகாப்புப் படைகள் அருகாமையில்தான் இருந்தன. இப்படி செய்வதன் மூலம் அவர் ஒரு செய்தியை நிலைநாட்டியிருக்கலாம்: “ஒரு வலிமையான அரசின் வலிமையான பிரதமர் செல்லும் பாதையை பயன்படுத்தும் உரிமையை எவரும் மறுக்க முடியாது. அமைதியாக போராடும் ஒரு சில விவசாயிகள் முன்பு பயம் இல்லாத பிரதமர் மண்டியிட மாட்டார்” எனும் செய்தியை சொல்லியி ருக்கலாம். இதற்கு மாறாக எப்பொழுதும் புகைப்படத்தையும் விளம்பர நாடகத்தையும் விரும்பும் இந்த மனிதர் விக்கித்து உறைந்து செய்வதறியாது அசைவற்று உட்கார்ந்திருந்தார்.

பிசுபிசுத்த ‘நவீன அஸ்வமேத’ யாகம்

ஃபெரோஸ்பூர்  பாஜக பேரணியில் கூட்டம் பரிதாப மான முறையில் குறைவாக இருந்தது என்பது பிரதம ருக்கு முன் கூட்டியே சொல்லப்பட்டிருக்கும் என்பதை நம்ப இடமுண்டு. (அங்கு 3032 பேர்தான் இருந்தனர் என்பதும் ஆயிரக்கணக்கான இருக்கைகள் காலியாக இருந்தன என்பதும்  உள்ளூர் உளவுத்துறை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது). அந்த பேரணி ஒரு நவீன “அஸ்வமேத யாகம்” எனவும் அதன் மூலம் பஞ்சாபில் தான் இழந்த பெருமையை மீட்பது எனவும் பா.ஜ.க. திட்ட மிட்டிருந்தது. இந்தியாவின் மிகப்பெரிய பணக்கார கட்சி யின் அனைத்து வசதி வாய்ப்புகளும் அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பா.ஜ.க.வினரிடம் இருந்தன.  பேரணியின் நோக்கம் என்ன என்பது மிக தெளிவு: “மூன்று மோசமான வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றாலும் மோடியின் சக்தி எவரும் வெல்ல முடியா தது; மோடி எவருக்கும் தலை வணங்கமாட்டார். இப்பொ ழுதும் அவர்தான் மக்களின் தலைவர். அதற்கு இந்த பேர ணியே சாட்சி!”  இந்த செய்தியை பஞ்சாபிற்கும் தேசத் துக்கும் சொல்வது என்பதுதான் இந்த பேரணியின் நோக்கம். மிகவும் நுட்பமாக திட்டமிடப்பட்டிருந்த இந்த திரைக்கதை பரிதாபமாக தோல்வியடைந்து விட்டது. அனைத்து வசதி வாய்ப்புகளும் நிதியும் இருந்தும் கூட பா.ஜ.க.வினரால் கணிசமான கூட்டத்தை கூட்ட முடிய வில்லை. ஒரு பதற்றமான சூழலை உருவாக்கிவிட்டது. தான் நினைத்ததை சாதித்து பழக்கம் கொண்ட ஒரு மனிதர் தோல்வியின் பயத்தை உணர்ந்த தருணமாக அது இருக்கலாம்.

சர்வாதிகாரம் உருவாக்கிய மமதை

இந்த ஃபெரோஸ்பூர் நாடகத்துக்கு பின்னால் இன் னொரு பெரிய உண்மையும் பொதிந்துள்ளது. மேலும் மேலும் கட்டுப்பாடுகளை இழந்து சர்வாதிகார பாதை யில் செல்லும் ஓர்  அரசின் தலைமைப் பீடத்தில் எதிர் சவால் களே இல்லாமல் ஏழாண்டுகளாக இந்த மனிதர் அமர்ந் திருக்கிறார். இது வானளாவிய அனைத்து அதிகாரங்க ளையும் பயன்படுத்தும் உரிமை  தனக்கு உண்டு எனும் மமதை உணர்வை பிரதமருக்கு உருவாக்கி யுள்ளது. அது மட்டுமல்ல; அவரை சுற்றி இருக்கும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் உளவுத்துறை அதிகாரிக ளுக்கும் ஒருவித பொறுப்பற்ற அசட்டை போக்கை விளைவித்துள்ளது. தான் தவறுகளுக்கு அப்பாற்பட்டவன் என மிக ஆழ மாக நம்பும் இந்த மனிதர் எவ்வித குறைபாடு அல்லது  தோல்வியை  ஏற்றுகொள்வது என்பது கிஞ்சிற்றும் கிடை யாது. தாங்கள் தவறு செய்தாலும் தலைவர் தங்களை பாதுகாப்பார் (குறைந்தபட்சம் பொதுவெளியில்) என்பது அவரை சுற்றியுள்ள அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும்.  தான் செய்வது வெறுமனே சரியானது என்பதை விட மிகச்சரியானதுதான் என்பதைத் தவிர ஜனநாய கப் பொது வெளியில் வேறு எந்த கருத்தையும் கேட்க விரும்பாதவர் தான் அந்தத் தலைவர். தன்னை எவரும் சிறு குறைபாடு உள்ளவர் என்று கூட கருதக்கூடாது எனவும் எண்ணுபவர். தனக்கு தவறு அல்லது தோல்வி என்பது சாத்தியமே இல்லை என்பது அவரின் முடிவார்ந்த உணர்வு. இந்த உணர்வுதான், தன்னைப்பற்றி அவர் உருவாக்கியுள்ள இந்த பிம்பம்தான் உயர் நிர்வாக அதி காரிகள்/ உளவுத்துறை  அதிகாரிகள்/ இராணுவ தளபதி கள் ஆகியோருக்கு தவறுகளை செய்துவிட்டு தப்பிக்க கேடயமாக செயல்படுகிறது.

ஃபெரொஸ்பூர் பாலத்தில் 20 நிமிட நாடகம் முடிந்து 24 மணி நேரத்துக்குள் பணிஓய்வு பெற்ற சில உயர் காவல் துறை அதிகாரிகள் “ஆழ்ந்த சதி” எனும் கருத்தாக் கத்தை உருவாக்கி மக்களிடையே திணிக்க முயன்ற னர். அவர்களில் பலருக்கு இன்னும் கூட ஏதாவது பதவி கிடைக்குமா என ஏக்கம் உண்டு. அந்த அடிவருடிக ளின் கருத்துப்படி “மாநில அரசு இயந்திரமும் போராட் டக்காரர்களும் சேர்ந்து பிரதமரை சங்கடப்படுத்தவும் அவ ருக்கு எதிராக தீங்கிழைக்கவும் திட்டமிட்டு பகிரங்க மாக அரங்கேற்றிய வெட்கங்கெட்ட செயல் இது”. பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த இந்த அதிகா ரிகளுக்கு இத்தகைய கருத்தாக்கங்களை ஏனோ தானோ வென்று உருவாக்குவதின் விளைவுகள் என்ன என்பது நன்றாக தெரியும். எனினும் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிட்டனர். இந்த நாடகம் அனைத்தும்  கூட்டுக் கள வாணித்தனத்தின் ஒரு பகுதி என்பதும் விசுவாசத்தை  வெளிப்படுத்தும் செயல் என்றும்தான் கருத வேண்டி யுள்ளது.

பாதுகாப்பின்மை எனும் மனநோய்!

வயதாகிக்கொண்டிருக்கும் சக்கரவர்த்தியின் பாது காப்பின்மை குறித்து ஒருவித பயத்தையும் மனநோயை யும் உருவாக்குவதற்காகவே அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொழில் போன்ற ஒன்று இப்பொழுது செயல்படுகிற தோ எனும் ஐயம் எழுகிறது. மிகவும் மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர்கள் கூட பொது வெளியில் தாம் எப்படி தோன்ற வேண்டும் என்பது குறித்து திரைக்கு பின்னால் மிகவும்  ஆழமாக திட்ட மிடுகின்றனர் என்பது நன்கு அறியப்பட்ட ஒன்று. திட் டத்துக்கு மாறாக திடீரென்று ஒரு நெருக்கடி உருவாகும் பொழுதுதான் ஒரு தலைவனின் உண்மையான குணமும் உறுதியும் பரிசோதிக்கப்படுகிறது. பிரிட்டன் பிரதமரின் இல்லம் உள்ள “டவுனிங் தெரு நினைவுகள்” எனும் தனது நூலில் முன்னாள்  பிரிட்டன் பிரதமர் மார்க்ரெட் தாட்சர் 1984ஆம் ஆண்டு நடந்த ஒரு  குண்டு வெடிப்பு குறித்து குறிப்பிடுகிறார். அவர் தங்கியி ருந்த பிரைட்டன் கிராண்ட் ஓட்டலில் ஐரிஷ் குடியரசு போராளிகள் குண்டு வெடிப்பை நடத்தினர். ஆனால் இதுபற்றி கவலை கொள்ளாமல் தனது பழமைவாத கட்சி யின் ஆண்டு மாநாட்டில் அவர் பேசியது மட்டுமல்ல; எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி குறித்து தனது உரை யில் இருந்த அனைத்து குறிப்புகளையும் நீக்கினார். ஏனெனில் குண்டு வெடிப்புக்கு பிறகு “எதிர்கட்சியை விமர்சிக்கும் நேரம் அல்ல இது! ஜனநாயகத்தை காக்க ஒற்றுமையை உருவாக்க வேண்டிய நேரம் இது” என அவர் கருதினார்.

தாட்சரின் இந்த அணுகுமுறையையும் நமது பிரத மர், பஞ்சாப் முதல்வரை மோசமான முறையில் விமர்சித் ததையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அந்த ஒற்றை தரு ணத்தில், மோடி ஒரு பக்குவமான தேசிய பிரதமராக பரி ணமித்துவிட்டார் என இன்றும் கூட நம்பும் பரிதா பத்துக்குரிய பலரின் மனதில் சந்தேகத்தை உருவாக்கி விட்டார்.  எத்தகைய நாகரிகமற்ற, பாரபட்சமான அந்த வார்த்தைகள் வாயிலிருந்து வெளிவரும் என்பதை சிந்தனை செய்யுங்கள். இந்த மனிதர்தான் உலகில் மிகவும் செல்வாக்கு பெற்ற ஒரு ராஜதந்திரம் மிக்க சக்கர வர்த்தி என இன்னும் பல அடிவருடிகள் நம்புகின்றனர் என்பது பேரதிர்ச்சிதான்! இந்த தனிநபர் அதிருப்திக்கு பின்னால் பிரதமரை யும் சீக்கிய சமூகத்தையும் மோதவிடும் ஒரு சூழ்ச்சி உள்ளது. வெளிநாடுகளில் இருக்கும் “இந்து சமூகத் தின் நலனுக்கு” எதிராக உள்ள சில  தேச விரோத  சக்திகளும் சில சீக்கியர்களும் சேர்ந்து ஒரு பெரிய சதியை உருவாக்கியுள்ளனர் எனும் கருத்தாக்கத்தை உருவாக்க பெரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. உத் தரப்பிரதேசத்திலும் உத்தரகண்டிலும் தன்னை விட்டு விலகுகின்ற,  ஊசலாடிக் கொண்டுள்ள இந்துக்களின் வாக்கு வங்கியை தனக்கு ஆதரவாக மாற்ற வேண்டிய மோடியின் தேவையை புரிந்துகொள்ள இயலும். ஆனால் அதற்காக சீக்கியர்களை எதிரிகளாக நிலைநிறுத்த முயல்வது என்பது தேசத்தின் பேரழிவை உருவாக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

கட்டுரையாளர் : பத்திரிகையாளர்/ முன்னாள் பிரதமரின் ஊடக ஆலோசகர்  தமிழில் : அ.அன்வர் உசேன் 

;