articles

img

சாதியக் கொடுமைகள் தான் சனாதனம்!

சனாதனம் குறித்து உண்மையை பேசியதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சனாதன சக்திகள் கொலை மிரட்டல் விடுத்து, வழக்குகளை தொடுத்து வருகின்றனர். இதனை கண்டித்து வெள்ளியன்று (செப்.8) சைதாப்பேட்டை அரங்கநாதன் சுரங்க பாலம் அருகே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சைதை கிளை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மாநில பொருளாளர் சைதை ெஜ,  துணைத் தலைவர் சுந்தரவள்ளி, கிளைச்  செயலாளர் மு.சாலா மற்றும் கே.மணிகண்டன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), கிரி (ஆட்டோ சங்கம்) உள்ளிட்டோர்  பேசினர்.