articles

img

மனித இரத்தத்திலும் நுண் பிளாஸ்டிக்குகள் - சிதம்பரம் இரவிச்சந்திரன்

மனித இரத்தத்திலும் நுண் பிளாஸ்டிக் குகள் கலந்திருப்பது முதல்முறை யாகக் கண்டறியப்பட்டுள்லது. இந்த நுண் துகள்கள் பரிசோதிக்கப்பட்டவர்களில் 80%  பேரின் இரத்தத்தில் காணப்பட்டது. இவை  உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் பயணம் செய்து உறுப்புகளில் தங்கும் ஆற்றல் உடை யவை. இதனால் உடல் நலத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் இன்னமும் தெளிவாகத் தெரியவில்லை. என்றாலும் நுண் பிளாஸ்டிக் குகள் மனித செல்களைப் பாதிப்படையச் செய்யும் என்று ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.

மனித மலத்திலும்  நுண் பிளாஸ்டிக்குகள்

காற்று மாசு மூலம் ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் முன்கூட்டி மரணமடைகின்றனர். பெரும் எண்ணிக்கையிலான பிளாஸ்டிக் கழிவுகள் குப்பையாகக் கொட்டப்படுகின்றன. இதனால் நுண் பிளாஸ்டிக்குகள் எவரெஸ்ட் சிகரம் முதல் பசுபிக் பெருங்கடலின் தொலைதூர ஆழ்கடல் பகுதி வரை பரவி ஒட்டுமொத்த பூமியையே மாசடையச்செய்கின்றன. ஏற்கனவே மனிதர்கள் இவற்றை உணவு, நீர்,  சுவாசம் மூலம் நுகர்வதனால் குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களின்ன் மலத்தில்  இத்துகள்கள் கலந்திருப்பது கண்டறியப் பட்டுள்ளது.

80% மனிதர்களில்  நுண் பிளாஸ்டிக் கலந்த இரத்தம்

பரிசோதனை நடத்தப்பட்டவர்களில் 80% பேரின் இரத்தத்தில் நுண் பிளாஸ்டிக்குகள் இருந்தன. இரத்த மாதிரிகலில் 50% குடி நீர்  மற்றும் குளிர்பான பாட்டில்களில் காணப்படும் பெட் (PET) பிளாஸ்டிக்குகள் இருந்தன. 25%  உணவு, பொருட்கள் பொட்டலமிடப் பயன் படும் பாலிஸ்டைரின் (Polystyrene) பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருந்தன. மற்றொரு 25% நெகிழிப்பைகள் தயாரிக்கப் பயன்படும் பாலி எதிலீன் கலந்திருந்தது.

இரத்தத்தில் பாலிமர் துகள்கள்

மனித இரத்தத்தில் பாலிமர் பிளாஸ்டிக் குகள் முதல்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆய்வுமுடிவுகள் கவலையளிப்பவை என்று நெதர்லாந்து ஆம்ஸ்டர்டாம் விரிஜ்  (Vrije) பல்கலைக்கழக சூழல் நஞ்சியல் துறை பேராசிரியர் மற்றும் ஆய்வுக்குழுவின் தலைவர் டிக் வேதாக் (Prof Dick Vethaak) கூறுகிறார். இது பற்றிய தொடர் ஆய்வுகள்  வேறு குழுக்களால் நடத்தப்பட்டு வரு கின்றன. இதன் மூலம் இத்துகள்கள் மனித உடல் முழுவதும் பயணம் செய்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நுண் பிளாஸ்டிக் துகள்களுடன் வாழும் குழந்தைகள்

புட்டிகள் மூலம் குழந்தைகள் பாலூட்டப் படுவதால் அவர்களின் மலத்தில் வயது வந்தவர்களைக் காட்டிலும் 10% அதிகமாக நுண் பிளாஸ்டிக் துகள் கலந்திருப்பது முன்பு கண்டறியப்பட்டது. பிளாஸ்டிக் பாட்டில்கள்  மூலம் பால் குடிப்பதால்  அவர்கள் ஒவ்வொரு  நாளும் மில்லியன் கணக்கான நுண் பிளாஸ்டிக்  துகள்களை விழுங்குகின்றனர். ஏற்கனவே சூழலில் காணப்படும் மாசுக்களால் சிசுக்கள்  மற்றும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படு கின்றனர்.

ஒன்றிற்கும் அதிகமான பிளாஸ்டிக் வகைகள்

இப்புதிய ஆய்வு முடிவுகள் பற்றிய  கட்டுரை சர்வதேச சூழலியல் மற்றும் தகவ மைப்புத் தொழில்நுட்பம் (Environment International & adopted existing techniques) என்ற இதழில் வெளியிடப்பட் டுள்ளது. 0.0007 மில்லிமீட்டர் அளவில் உள்ள  மிக நுண்ணிய துகள்களை ஆய்வாளர்கள் கண்டறிந்து பகுப்பாய்வு செய்தனர்.  எடுக்கப் பட்ட மாதிரிகளில் இரண்டு மூன்று வகையைச் சேர்ந்த பிளாஸ்டிக் துகள்கள் இருந்தன.

துல்லிய ஆய்வுகள்

மிக முக்கிய ஆய்வு இது என்பதால் மாசு களைத் தவிர்க்க ஆய்வாளர்கள் ஸ்டீல்  உறிஞ்சு குழல் ஊசிகள் மற்றும் கண்ணாடி  சோதனைக்குழாய்களையே பயன்படுத்தினர்.  மேலும் ஆய்வாளர்கள் ஆய்வின் முக்கிய நோக்கமாக உள்ள ரசாயணப்பொருளை துல்லியமாகக் கண்டறிய உதவும் ப்ளாங்க் மாதிரி (blank sample) முறையை பயன் படுத்தினர். பிளாஸ்டிக்கின் அளவு மற்றும் வகை ஆய்விற்கு உட்படுத்தப்பட்டவர்களின் இரத்தத்தில் வேறுபட்டு காணப்பட்டது.

மனித உடலில் என்ன நடக்கிறது?

ஆய்விற்கு முன் பரிசோதனைக்கு உட் படுத்தப்பட்டவர்கள் பிளாஸ்டிக் கோப்பை யில் காபி அருந்தியது மற்றும் பிளாஸ்டிக்  முகக்கவசம் அணிந்திருந்தது போன்ற சிறிய பிளாஸ்டிக் மாசுகளுக்கு ஆளாக்கப்பட்டதால் இந்த வேறுபாடுகள் தோன்றியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பிளாஸ் டிக்குகளால் நம் உடலில் என்ன நிகழ்கிறது என்பது பெரிய கேள்வி என்று வேதாக் கூறுகிறார்.

புரியாத புதிர்கள்

நுண் துகள்கள் நம் உடலிலேயே தங்கிவிடு கின்றனவா? அவை உடலின் வேறு உறுப்பு களுக்கு இடமாற்றம் செய்யப்படுகின்றனவா? இப்போது கண்டறியப்பட்டுள்ள அளவுகள் உடலில் நோய்களைத் தூண்டிவிடக் காரண மாக அமையுமா? போன்றவை குறித்து  மேலும் தீவிர ஆய்வுகள் நடத்தப்படவேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.

நிதியுதவி செய்த நிறுவனங்கள்

இந்த ஆய்வுகள் டச்சு தேசிய சுகாதார ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு (National Organisation for health research & development) மற்றும் பிளாஸ்டிக்  மாசைக் குறைக்க பாடுபடும் காமன் சீஸ்  (Common Seas) என்ற சமூகத் தொண்டு அமைப்பு ஆகியவற்றின் நிதியுதவியுடன் நடத்தப்பட்டது. 2040ல் பிளாஸ்டிக் பொருட் களின் உற்பத்தி இப்போது உள்ளது போல இருமடங்கு அதிகரிக்கும் என்று காமன் சீஸ் தொண்டு அமைப்பின் தோற்றுநர் ஜோ ராயல் (Jo Royale) கூறுகிறார்.

உலகளாவிய நிதியுதவி தேவை

இந்த அமைப்பு மற்ற 18 அமைப்புகளு டன் இணைந்து யு கே பிளாஸ்டிக்குகளால் உடலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய  15 மில்லியன் பவுண்டு நிதியுதவி செய்ய வேண்டும் என்று வலுவான கோரிக்கை விடுத் துள்ளன. தாயின் கருவில் இருக்கும் சிசுக்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனில் நுண் பிளாஸ்டிக்குகள் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி ஆராய ஐரோப்பிய ஒன்றியன் (EU) நிதியுதவி செய்துள்லது.

ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி  தரும் செய்திகள்

சமீப ஆய்வுகள் இரத்த சிவப்பணுக்களின் வெளிப்புறப் படலத்தை நுண் பிளாஸ்டிக்கு கள் தாழ்ப்பாள் போட்டு மூடிவிடுகின்றன என்று கண்டறிந்துள்ளது. இதனால் இந்த செல்களின் ஆக்சிஜன் எடுத்துச்செல்லும் திறன் பாதிக்கப்படுகிறது. நுண் பிளாஸ்டிக் குகள் கருவுற்ற பெண்களின் நஞ்சுக்கொடியில் இருப்பதும் தெரியவந்துள்லது. கருவுற்ற எலிகளில் இவை நுரையீரலில் இருந்து கருவில் இருக்கும் சிசுவின் இதயம், மூளை மற்றும் பிற உறுப்புகளுக்கு வேகமாகக் கடத்தப்படுகின்றன.

தொடரும் ஆய்வுகள்

ஆய்வுக்கூடங்களில் பாதுகாத்து வைக் கப்பட்டுள்ள மனித செல்களை பிளாஸ்டிக் நுண் துகள்கள் பாதிக்கின்றன என்று முன்பே  அறியப்பட்டுள்ளது. உடலில் புகும் நுண்  பிளாஸ்டிக்குகள் புற்றுநோயை ஏற்படுத்த லாம். நுண் மற்றும் நானோ பிளாஸ்டிக்குகள் மனித உடலமைப்பு, செயல்களை எவ்வாறு பாதிக்கிறது என்று அறிய மேலும் தீவிரமான ஆய்வுகள் நடத்தப்படவேண்டும். இத்துகள்கள் செல்களின் அமைப்பு மற்றும் செயல்பாட்டை எவ்வாறு பாதிக்கிறது, இதனால் உருவாகும் புற்றுநோயை எவ் வாறு தூண்டுகிறது என்பது பற்றி அவசர மாக ஆராயப்படவேண்டும் என்று விஞ்ஞானி கள் வலியுறுத்துகின்றனர். பிளாஸ்டிக்குகளின் பயன்பாடு மற்றும் அதன் உற்பத்தி நாளுக்குநாள் அதிகரிக்கும் சூழ்நிலையில் இவை நம் உடலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி ஆய்வுகள் உட னடியாக நடத்தப்படவேண்டும். தாமதமாகும் ஒவ்வொரு நாளும் மனித குலத்தின் முக்கிய நோய்க்காரணியாக பிளாஸ்டிக்குகள் மாறி அவை அவனையே அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும்.