2023 ஆகஸ்ட் 16 அன்று உச்சநீதி மன்றத்தின் ‘சமூக நீதி உபகுழு’ வெளியிட்ட ‘பாலியல் கற்பிதங்க ளை எதிர்கொள்வதில் சட்டத்தின் பங்கு’ என்ற கையேடு இன்றைய சமூக, அரசியல் சூழலில் மிகவும் முக்கி யத்துவம் உள்ளதாக திகழ்கிறது. இந்த கையேடு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி மௌசுமி பட்டாச்சார்யா, தில்லி உயர் நீதிமன்றத்தின் பிரதிபா சிங் மற்றும் பேராசிரியர் ஜூமா சென் ஆகியோர் கொண்ட வரைவுக் குழுவால் உருவாக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த கையேடு, அரசியல மைப்பின் 141ஆவது பிரிவின் அடிப்படையில் இந்திய எல்லைக்குள் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் உள்ளடக்கியது.
சமூக மாற்றத்துக்கான கருவி
இந்த கையேடு, நமது நாட்டில், நீதித்துறை முடிவெடுப்பதிலும் தீர்ப்பு எழுதுவதிலும் தனிப்பட்ட எண்ணங்கள், வார்த்தைகள் மற்றும் செயல்களில் ஒரே மாதிரியான பாலின கற்பிதங்களைப் பயன்படுத்து வது எப்படி ஆபத்தானது என சுட்டிக்காட்டுகிறது. இந்திய சமூகத்தில் மத அடிப்படைவாதிகள் உரு வாக்கிய கற்பிதங்களால் காலங்காலமாக ஒடுக் கப்பட்ட மக்களுக்கும், அதிலும் குறிப்பாக பெண்க ளுக்கும் பல கொடுமைகள் தொடர்ந்து இழைக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவான பல சட்டங்களும் அதைத் தொடர்ந்து இந்திய அரசி யல் சாசன சட்டமும் தான் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைக்கு ஓரளவு விடியலாக அமைந்தன. இதை முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள், ‘சட்டம் என்பது சமூகத்தில் மாற்றம் உண்டாக்குவதற்கான கருவி’ என்பார்.
பெண் வெறுப்பை வெளிப்படுத்துதல்
ஆணாதிக்கம் வேரூன்றிய இந்திய முதலாளித்துவ - நிலப் பிரபுத்துவ சமூகத்திற்கு பெண் வெறுப்பு அரசி யல் புதிதல்ல; நீதிமன்றங்களும் இதிலிருந்து விடுபட வில்லை என்ற கருத்து நீண்டகாலமாக இருந்து வரு கிறது. நீதிமன்றங்கள் பெண் வெறுப்பை வெளிப்படுத் தும் போது, பெண்களுக்கு இழைக்கப்படும் வன்முறை யைத் தீர்க்கத் தவறும் போது, நீதி என்பது கேலிக் கூத்தாக மாறுகிறது. தொழில்நுட்பமும் விஞ்ஞான வளர்ச்சியும் முன்னோக்கிச் செல்லும் வேளையில் பெண்களை அடக்கி ஒடுக்குவதற்கு துணைபோகும் சில தீர்ப்புகள், விசாரணையின் போது அவமானகர மான கேள்விகள் மற்றும் விசாரணை செயல்பாட்டின் போது அவர்கள் மீது காட்டும் விரோதம் போன்றவை பெண்களை பாலியல் ரீதியாக வெளிப்படையாக இழிவுபடுத்தும் செயல்களே ஆகும். இச்சமூகத்தில் எல்லா ஆண்களும் சுதந்திரமான வர்களாக பிறக்கும்போது, கட்டுப்பாடு என்ற பெய ரில் எல்லாப் பெண்களும் ஏன் அடிமையாகவே வளர்க்கப்படுகின்றனர்? மேலும் இழிவான வார்த்தை கள் அனைத்தும் பெண்களை மையமாக வைத்துத் தான் பேசப்படுகிறது. மனித குலத்திற்கு தலைமை தாங்கி வழி நடத்திய பெண் சமூகத்தை சாதி, மதம், சடங்கு என்ற பெயரில் மரியாதைக் குறைவாகவும் சமத்துவம் இல்லாமலும் ஆணாதிக்கச் சிந்தனையா னது ஒடுக்கி வைத்துள்ளது. கணவனை இழந்து பல ஆயிரக்கணக்கான பெண்கள் உயிருடன் எரிக்கப்பட்ட கொடுமை இந்திய சமூகத்தில் தான் அரங்கேறியது. இதற்கு எதிராக ராஜாராம் மோகன்ராய் உட்பட பலர் போராடிய தன் விளைவாக ‘சதி ஒழிப்புச் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. 1980கள் வரை இந்த சதி என்ற கொடூர சம்பவம் உத்தரப் பிரதேசம் போன்ற வட மாநிலங்க ளில் நடந்துள்ளது என்பதை நீதிமன்ற வழக்குகளில் காண முடிகிறது.
அடிப்படை உரிமைகள்
பெண்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையா ளர்களின் தொடர் போராட்டங்களால் விதவை திருமண சட்டம், சிசுக்கொலை தடை சட்டம், குழந்தை திருமண தடை சட்டம், தேவதாசி ஒழிப்பு சட்டம், இந்து வாரிசு சட்டம், வரதட்சணை கொடுமைக்கு எதிரான சட்டம், பணி இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டம், குடும்ப வன்முறையிலிருந்து பெண்க ளைப் பாதுகாக்கும் சட்டம், விவாகரத்து, சொத்து ரிமை, ஜீவனாம்சம் உட்பட பல சட்டங்கள் இயற்றப் பட்டன. நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிறப் பால் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் வகை யில் அனைவருக்கும் ‘அடிப்படை உரிமைகளை’ உறுதி செய்தது.
புரட்சிகர பணி...
இவ்வளவு இருந்தும் இன்றும் இச்சமூகத்தில் பெண்கள் உயிருள்ள பொம்மையாகத்தான் வாழ்ந்து வருகின்றனர். வரலாற்றில் பல பிற்போக்கு நம்பிக்கை களால் அச்சுறுத்தப்பட்டவர்களாகவும் சமூகம் மற்றும் நீதி அமைப்புக்குள் சமமான தீர்வுகள் மறுக்கப் பட்டவர்களாகவும் உள்ளனர். இவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு காரணம் பழைமை வாத, ஆணாதிக்கச் சிந்தனையே. எனவே, இந்த ஒரே மாதிரியான சிந்தனை- செயலுக்கு முடிவு கட்டும் வகையிலும்; பெண்கள் குறித்த தவறான பார்வையை, பதங்களை, வார்த்தைப் பிரயோகங்களை முதலில் நீதித்துறையிலிருந்து மாற்றும் ஒரு புரட்சிகரமான பணியை தற்போது உச்சநீதிமன்றம் செய்துள்ளது. கையேடு குறித்து பேசிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், கடந்தக்காலத்தில் நீதி மன்றத் தீர்ப்புகளில் பெண்களுக்கு எதிராகப் பயன் படுத்தப்பட்ட -புண்படுத்தும் ஏராளமான வார்த்தைப் பிரயோகங்களை சுட்டிக் காட்டினார். “இந்த முறை யற்ற வார்த்தைகள் நீதிமன்றத் தீர்ப்புகளில் பயன் படுத்தப்பட்டுள்ளன. இந்த கையேட்டின் நோக்கம் அந்த தீர்ப்புகளை விமர்சிப்பதோ அல்லது சந்தேகப் படுவதோ அல்ல. இது பாலின நிலைப்பாடுகளில் நீதித்துறை எவ்வாறு கவனக்குறைவாக உள்ளது என் பதை அடிக்கோடிட்டுக் காட்டுவதாகும்” என்றார்.
இந்திரா ஜெய்சிங் கடிதம்
உச்சநீதிமன்றம் இந்த கையேட்டை வெளியிட்ட ஒரு சில நாட்களிலேயே வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான வழக்கு ஒன்றில் இந்திய தண்டனைச் சட்டத்தின் 498 ஏ பிரிவை ‘தவறாகப் பயன்படுத்துவ தன்’ மூலம் பெண்கள் “சட்டப் பயங்கரவாதத்தை” கட்ட விழ்த்துவிடுவதாக அதீதமாக குறிப்பிட்டு, கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அமர்வு, தீர்ப்பு வழங்கி யுள்ளது. “இது நீதிபதியின் பாலினச் சார்பு உணர்வை காட்டுகிறது,” என்று கூறி மூத்த பெண் வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட்டுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், பார் உறுப்பினர்களிடையே பாலின சமத்துவம் இல்லை; நீதிமன்றங்களில், பார் மற்றும் வழக்கறிஞர் அலுவலகங்களில் பெண் வழக்கறி ஞர்களை சகஆண் வழக்கறிஞர்கள் நடத்தும் விதம் குறித்து கவலை தெரிவித்த அவர், விசாகா தீர்ப்பின் பரிந்துரைகளை அனைத்து நீதிமன்ற பார்களிலும் கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் அவர், பார் உறுப்பினராக இருந்தபோது தனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவங்களை மேற்கோள் காட்டியும், பாலியல் வல்லுறவுக் குற்ற வழக்குகளில் வாதங்களின் போது வெளியிடப்பட்ட ‘‘அவமானகர மான கருத்துக்களை” சுட்டிக்காட்டியும் இருந்தார்.
எனவே, உச்ச நீதிமன்றம் வழக்காடுதல், வாதங்கள் மற்றும் நீதிமன்றங்களின் தீர்ப்புகளில் தவிர்க்கப்பட வேண்டிய சொற்களின் பட்டியலுடன் வழிகாட்டுதல் அடங்கிய கையேட்டை வெளியிட வேண்டும் எனவும் பரிந்துரைத்தார். பாலினக் கற்பிதங்களில் இருந்து உருவாகும் சில ஆழ்நிலை சார்புகளை நாம் அனைவ ருமே பின்பற்றுகிறோம் என்பதில் சந்தேகமில்லை. நாம் ஒவ்வொருவரும் நமது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வடிவில் ஒரே மாதிரியானவற்றை நம்பியிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்பதை, பாலின நிகர் நிலைக்கான உச்சநீதி மன்றக் கையேடு செய்துள்ள ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. ஆரம்பகாலம் முதல் பழமைவாதக் கருத்துகளுக்கு எதிராக நவீன அரசியல் உருவாக்கிய சீர்திருத்தங்க ளும் அரசியல் அமைப்புச் சட்டங்களும் மக்களின் பொதுப் புத்தியில் உள்ள- பெண்களுக்கு எதிரான தவறான கற்பிதங்களின் பார்வையை மாற்றுவதில் கணிசமான பங்களிப்பு செய்துள்ளது. இருப்பினும் நீதி மன்றம் துவங்கி சமூகத்தின் உயர் அடுக்குகளில் உள்ள அதிகார வர்க்கத்தின் அனைத்து மட்டங்க ளில் உள்ள ஆண்களின் மனசாட்சிகளோடு மோதி கேள்வி எழுப்பும் போர் முழக்கமாக ‘பாலினக் கற்பிதங்க ளுக்கு எதிரான கையேட்டை’ உச்சநீதிமன்றம் வெளி யிட்டுள்ளது.
கட்டுரையாளர்: சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர்