articles

img

குழு காப்பீட்டு திட்டத்தை மீண்டும் அமலாக்கிட ஒன்று திரள்வோம்!

கோவை, திருப்பூர் மாவட் டங்களில் உள்ள நிலங்கள் நல்ல மண் வளம் கொண்ட விவசாய பூமியாகும். அதன் காரணமாக தரமான பருத்தி விளைச்சல் என்பது பெரிய அளவில் நடைபெற்றது. கோவை திருப்பூர் ஒன்று பட்ட மாவட்டத்தில் பருத்தியை பயன் படுத்தி நூல் தயாரிக்கும் ஜின்னிங் பேக்ட ரிகளும், பஞ்சாலைகளும் ஏராளமாக உருவாகி வளர்ச்சி அடைந்தன.  இந்நிலையில் வறட்சி மற்றும் கட்டுபடி யான விலை கிடைக்காதபோது விவசாயம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விவசாயம் பாதிப்புக்குள்ளானது. அப் போதுதான் அனைத்து கிராமப்புற விவ சாயிகளும் வேறு தொழிலான விசைத் தறித் தொழிலுக்கு மாறினார்கள். இது கிராமங்களில் உள்ள மக்களுக்கு வேலை வாய்ப்பையும் உருவாக்கியது. மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப் பட்டு, கிராமங்களை விட்டு வெளியேறுவ தும் தடுக்கப்பட்டது. 1980 முதல் 2000 ஆம் ஆண்டு வரை புதிய விசைத்தறிக் கூடங்கள் உருவாகி தொழில் வளர்ச்சி அடைந்தது. அது 2000 ஆம் ஆண்டுக்கு  மேல் சிறுகச் சிறுக தொழிலாளர்களின் வருகை குறைந்து கடந்த 10 ஆண்டு களாக தொழில் நலிவடைந்து வருகிறது

ஜவுளித் தொழில்

திருப்பூர் கோவை ஆகிய மாவட்டங்க ளில் ஜவுளி உற்பத்தியாளர்கள், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையா ளர்கள், விசைத்தறித் தொழிலாளர்கள் என 3 அடுக்குகளாக இத்தொழிலில் ஈடு படுகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்க ளிடம் பாவு நூல் வாங்கி அதனை கூலி அடிப்படையில் காடா துணியாக நெசவு செய்து கொடுத்து கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலியைப் பெறுகிறார்கள். இவர்களிடம்  2 இலட்சம் விசைத்தறிகள் உள்ளன. மறைமுகமாகவும், நேரடியாகவும் 1 இலட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். திருப்பூர், கோவை மாவட்டங்களில் தினசரி 1 கோடி மீட்டர் காடா துணி உற்பத்தி செய்யப்படுகிறது. அதற்கான கூலி குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை கூலி உயர்வு ஒப்பந்தம் நிறைவேற்றி அதன்படி வழங்கப்படும்.

கூலி உயர்வு

 ஆனால் ஜவுளி உற்பத்தியாளர்கள் 2014 ஆம் ஆண்டு கூலி உயர்வு ஒப் பந்தம் நிறைவேற்றியும் அந்த கூலி உயர்வு வழங்குவதற்கு ஜவுளி உற்பத்தி யாளர்கள் மறுத்துவிட்டனர். விசைத்தறி யாளர்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும், விசைத்தறித் தொழிலாளர்க ளும் இணைந்து ஆர்ப்பாட்டம், தர்ணா, அரை நிர்வாண போராட்டம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி சோமனூர் ரகத்திற்கு 23 சதவீதம், மற்ற ரகங்களுக்கு 20 சதவீதம் என 24.11.2021 அன்று கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனாலும் ஜவுளி உற்பத்தியா ளர்கள் கூலி  உயர்வு  வழங்காமல் இழுத்த டித்தடிக்கின்றனர். இதனால், விசைத்தறி உரிமையாளர்களும் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க முடியாத நிலை உள்ளது. 

கடன் வலையில் சிக்கித்
தத்தளிக்கும் தொழிலாளர்கள் 

வெகுவாக உயர்ந்து விட்ட விலைவாசி  உயர்வால் உழைப்புக்கேற்ற கூலி தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. விசைத்தறித் தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்தும் போதுமான வருமானம் இல்லாததால், தொழிலா ளர்கள் அன்றாடத் தேவைகளுக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும், குடும்ப உறுப்பினர்களின் மருத்துவச் செலவுக்காகவும், காதணி விழா, கோவில் விழா, சீர், திருமணம் உள்ளிட்ட குடும்ப விசேஷங்களுக்காகவும், இறப்பு காரி யங்களுக்காகவும் அட்வான்ஸ் என்ற பெயரில் ஒவ்வொரு தொழிலாளியும் இரண்டு இலட்சம் வரை கடன் வாங்கியும் வாழ்க்கை நடத்த முடியாமல் பெரும் கடனில் சிக்கித் தவிக்கின்றனர். 

குழு காப்பீட்டுத் திட்டம் 

இவற்றை அரசு கணக்கில் எடுத்துக் கொண்டு, திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்கள் மற்றும் தமிழகம் முழுவ தும் வாழும் பல்லாயிரக்கணக்கான விசைத் தறித் தொழிலாளர்கள், வார்ப்பிங், சைசிங், வைண்டிங், வீவிங் உட்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் ”குழு காப்பீட்டுத் திட்டத்தை” இன்சூரன்ஸ் முறையில், ஒன்றிய ஜவுளித்துறை, “லைஃப் இன்சூரன்ஸ்” கார்ப்பரேசன் ஆப் இந்தியாவுடன்” இணைந்து 1990 - 2000 ஆம் ஆண்டுகளுக்கிடையில் இத் திட்டத்தை மத்தியிலிருந்த காங்கிரஸ் ஆட்சி செயல்படுத்தி வந்தது. இதற்கு வருட பிரிமியமாக ரூ.80-ஐ தொழிலாளர் கள் செலுத்தினால் போதும். 

முடக்கிய மோடி அரசு

இத்திட்டத்தின் மூலம் விசைத்தறித் தொழிலாளர்களின் குடும்பத்தில்  9, 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் குழந்தை களுக்கு ரூ.1200 உதவித்தொகையும், இயற்கை மரணம் அடைந்தால் (50 வயதுக்குட்பட்டவர்களுக்கு) ரூ.60,000 -மும், விபத்து மரணத்திற்கு ரூ.2,00.000 -மும் நிவாரணம் வழங்கப்பட்டு வந்தது.  2018 ஆம் ஆண்டு வரை செயல்பட்டு வந்த திட்டத்தை, மத்தியில் பாஜக அரசு வந்த பின்னால் இத்திட்டத்தின் மூலம் இயற்கை மரணத்திற்கு ரூ.2லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ.4லட்சமும் வழங்கப்படும் என பகட்டான அறிவிப்பை வெளியிட்டது.ஆனால் இத்திட்டம் செயல்படுத்தாமலேயே 2019 ஆம் ஆண்டு முற்றாக நிறுத்தப்பட்டது.  இவ்வாறு விசைத்தறி தொழிலாளர்க ளின் குடும்பங்களுக்கும், குழந்தைகளுக் கும் பேருதவியாக இருந்த உன்னதமான குழு காப்பீட்டுத் திட்டத்தை ஒன்றிய அரசு நிறுத்தியதால், விசைத்தறித் தொழிலா ளர்களின் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆகவே விசைத் தறித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத் திற்கு உதவிடும் இத்திட்டத்தை மேலும் விரி வாக்கி மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசை நிர்ப்பந்திக்கும் வழியை, பஞ் சாலை மற்றும் விசைத்தறியில் செயல் படும் சிஐடியு அமைப்புகளின் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பில் கோவையில் நடைபெறும் முதல்  அகில இந்திய மாநாடு உருவாக்கும்.
 

;