articles

img

கச்சா எண்ணெயில் குளித்த சூழல் போராளி - சிதம்பரம் இரவிச்சந்திரன்

கிரெட்டா தன்பர்க் கடந்த மூன்று ஆண்டு களாக உலக மக்களிடையில் காலநிலை மாற்றத்தின் தீவிரத்தால் ஏற்பட்டுவரும் பாதிப்புகள் பற்றி உணர்த்தப் போராடிவருகி றார். பள்ளிப்பருவத்தில் ஸ்வீடன் நாடாளு மன்றத்தின் வாயிலில் வருங்காலத்திற்கான வெள்ளிக் கிழமைப் போராட்ட இயக்கத்தை (Fridays for future) நடத்திவருகிறார். ஒற்றையாள் போராட்ட மாகத் தொடங்கிய இது இன்று உலகம் முழுவதும் இளம் தலைமுறையினரிடையில் பெரும் விழிப்பு ணர்வை ஏற்படுத்தியுள்ளது.

நம்பிக்கை நட்சத்திரம்

இந்த இளம்பெண்ணின் வீரம் மிகுந்த செயல் கள் நாளை உலகை மோசமான காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளில் இருந்து காக்க உதவும் என்று சூழல் நலத்தில் அக்கறையுள்ள மேல் நாட்டு ஊடகங்கள் நம்புகின்றன. கொரோனா பரவியிருந்த காலத்திலும் க்ரெட்டா இணைய தொடர்புகள் வழியாக தொடர்ந்தும் தன் சூழல் செயல்களை நடத்திக்கொண்டிருந்தார். சூழ லைக் காக்க தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யத் துணியும் இவரின் சாகசச் செயலிற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் ஒரு சம்பவம் நடந்தது. இருநூறு ஆண்டுகளாக உலகின் எந்த மூலையில் நடக்கும் சூழல் சீரழிவிற்கும், அநீதி க்கும் எதிராக குரல் கொடுத்துவரும் பிரிட்டனைச் சேர்ந்த கார்டியன் ஊடகத்தின் சார்பில் இந்த நிகழ்வு நடந்தது. கோடிக்கணக்கில் இலாபம் சம்பாதிக்க உலகம் முழுவதும் உள்ள ஒரு சில கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் கடலிலும் கரையிலும் எண்ணெய் சுரண்டும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. இவை குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கும் புவியின் சூழலை ஒவ்வொருநாளும் கொன்றுவருகின்றன.

இதைக் கடுமையாகச் சாடும்வகையில் கார்டியன் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கிரெட்டா குரூடு ஆயி லில் குளிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. கடினமான பணிதான் இது என்றாலும் இளம் வயது பெண்ணான கிரெட்டா சூழல் காக்க தன்னால் முடிந்த முயற்சிகளை செய்யத் தயாரா னார். போட்டோ ஷூட் எனப்படும் கார்டியன் நிகழ்விற்கு சம்மதித்தார். இத்தகைய ஒரு நிகழ்வில் கிரெட்டா கலந்து கொள்வது இதுவே முதல்முறை. இந்நிகழ்வை கார்டியனைச் சேர்ந்த மார்கஸ் ஓம்சன் (Marcus Ohmsson) நடத்தினார். கார்டியனின் சனிக்கிழமைப் பதிப்பில் அட்டைப்படமாக வந்த எண்ணெய் யில் குளித்து நிற்கும் கிரெட்டாவின் படம் உலகின் கவனத்தை ஈர்த்துள்லது. அவருடன் நடந்த நேர்முகத்தின்போது எடுக் கப்பட்ட மூன்று படங்களில் ஒன்று கார்டியன் இதழின் அட்டையிலும், அனைத்துப் படங்களும் அதன் இணையப்பதிப்பிலும் வெளியிடப் பட்டன. தலையில் இருந்து கருத்தஎண்ணெய் நெற்றியில் வழிந்து கண்களை மறைத்து கன்னங்கள் வழியாக உடலில் பரவுகிறது.

கவனத்தை ஈர்க்க நூதனவழி

காலநிலை மாற்றம், சூழல் சீரழிவிற்கு எதிராக அனைவரின் கவனத்தை ஈர்க்க குறிப்பாக உலக நாடுகளை ஆளும் ஆட்சியாளர்களின் கண்க ளைத் திறக்க கிரெட்டா தன் உடல் மீது எண்ணெய் யை ஊற்றி காட்சியளிக்கிறார். ஒரு சில நிமிடங் கள் தன் மேல் எண்ணெய்யை ஊற்றி இருக் கும்போதே துயரத்தை அனுபவித்ததாகக் கூறும் கிரெட்டா இதே கொடுமையை ஒரு பாவமும் செய்யாத கோடிக்கணக்கான உயிரினங்களுக்கு செய்துகொண்டிருக்கிறோம் என்ற செய்தியை இந்தக் காட்சிகள் மூலம் சுட்டிக்காட்டுகிறார்.

கபட நாடகம்

பெட்ரோலியம், நிலக்கரியைத் தோண்டி எடுப்பதால் ஏற்படும் சூழல் பாதிப்புகளுக்கு எதிராக இதன் மூலம் கிரெட்டா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சில நாட்களுக்கு முன் சர்வ தேச நிதி அமைப்பு (IMF) கடலையும், கரையையும் மாசுபடுத்தி உலகெங்கும் இருக்கும் எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடமும் ஒரு மில்லி யன் டாலர்கள் வருமானம் ஈட்டுவதாக தகவல் வெளியிட்டுள்ளது. செய்துகொண்டிருக்கும் இத்தகைய சுரண்டல் வேலையை ஒருபக்கம் தொடரும் உலகத் தலைவர்கள் மற்றொரு பக்கம் காலநிலை போராளிகளுக்கு ஆதரவாகப் பேசுவது கபடத்தனமான செயல் என்றும், இது அவர்கள் நடத்தும் அரசியலின் ஒரு பகுதியே என்று அவர் கடுமையாகச் சாடுகிறார். பிரிட்டன், அமெரிக்கா, நியூசிலாந்து, இந்தியா போன்ற உலக நாடுகளின் ஆட்சி யாளர்கள் சூழலைப் பாதுகாக்க எதுவும் செய்வ தில்லை என்றாலும் வாய்ப்பந்தல் போடுகின்ற னர் என்று கிரெட்டா வெளிச்சம் போட்டுக் காட்டு கிறார். சமீபத்தில் இந்தியத் தலைவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திரக் கூட்டத்தில் சூழலைக் காக்க அனைவரும் ஒன்றுபடவேண் டும் என்று பேசியதை பியா... பியா... (bia... bia...) அதாவது அர்த்தமற்ற வெற்றுப்பேச்சு என்று கிரெட்டா கிண்டல் செய்துள்ளார். முன் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை ஆரம்பத்தில் இருந்தே கடுமையாக எதிர்த்த கிரெட்டா இப்போது ஆட்சி யில் இருக்கும் பைடனும் எதையும் உருப்படியா கச் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள் ளார். காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளைக் குறைக்க எல்லாம் செய்வதாகக் கூறிக்கொள் ளும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் குப்ரியா, காம்போ பிரதேசங்களில் நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அனுமதி அளித்ததை கிரெட்டா  கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டை அதிகரிக்க பன்னாட்டு பணக்கார கம்பெனிகளு க்கு எல்லா வசதிகளையும் செய்துகொடுக்கும் இவர்கள் காலநிலை மாற்றத்தைப் பற்றி பிர சங்கம் நடத்துவது ஏமாற்றுவேலை என்கிறார். ஐக்கியநாடுகள் சபையில் பேசிய அமெரிக் கா, இந்தியா, பிரிட்டிஷ் தலைவர்களின் பேச்சுக் கள் ஒன்றும் இல்லாத வெட்டிப்பேச்சுகளே என்று  கிரெட்டா ஜெர்மனி, இத்தாலியில் கலந்து கொண்ட காலநிலை மாற்றத்திற்கான இளை யோர் விழிப்புணர்வுக் கூட்டங்களில் சாடி யுள்ளார். “எங்கள் கனவுகளை, வருங்காலத்தை இவர்கள் தங்கள் வெட்டிப்பேச்சுகளில் மூழ் கடிக்கப் பார்க்கிறார்கள்” என்று அவர் கூறி யுள்ளார். இவர்களின் செயல்கள் தன்னை வியப்ப டையச் செய்யவில்லை என்று கூறும் கிரெட்டா இவர்களை நம்பி இனிப் பயனில்லை செய லில் நாம் இறங்கவேண்டும் என்று இளைஞர்க ளைக் கேட்டுக்கொள்கிறார். தீங்கில்லாத சாயங்களுடன் ஆலிவ் எண்ணெய்யும் கலந்த கலவை போட்டோ ஷூட்  நிகழ்ச்சிக்காக கிரெட்டாவின் தலையில் ஊற்றப் பட்டது. இந்த முயற்சிக்கு சம்மதம் தெரிவித்து ஒத்துழைப்பு கொடுத்த கிரெட்டாவின் செயல் பெரிய தியாகம் என்றும், இதற்கு அவர் துணிந்தது காலநிலை போராட்டத்தில் அவருக்கு இருக்கும் அடங்காத ஈடுபாட்டை காட்டுகிறது என்றும் கார்டியன் கூறியுள்ளது.

கிளாஸ்கோவை நோக்கி  காத்திருக்கும் உலகம்

அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை பிரிட்டன் கிளாஸ்கோ நகரில் நடக்கும் காப்26 (Confer ence of Partids COP) மாநாட்டில் காலநிலை  மாற்றத்தின் தீவிரத்தைக் குறைக்க உருப்படியாக ஏதேனும் செய்யப்படும் என்ற நம்பிக்கையுடன் உலகம் காத்திருக்கிறது. இதில் கிரெட்டாவும் கலந்துகொள்ள திட்டமிட்டுள்ளார். நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையுடன் நாமும் காத்தி ருப்போம்.
  

;