articles

img

பாஜகவின் தில்லாலங்கடி திருகுதாள வேலைகள்!

இந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் சர்ஃப் எக்சல் சலவைத் தூளுக்கு ‘கறை நல்லது’ என்று விளம்பரம் செய்யும். அதேபோல, பாஜக கம்பெனியும் கறை நல்லது என்று விளம்பரம் செய்யாத குறையாக, கறைபட்டவர்களை தனது கட்சியில் கரைத்துக் கொண்டு கறைகளை நீக்கி புனிதப் பட்டம் வழங்கி வருகிறது. 

பாஜக எனும் வாஷிங் மிஷினில் தூக்கிப் போட்டால் போதும் எத்தகைய அழுக்காக இருந்தாலும் அதை நீக்கிவிடும் ஆற்றல் அந்தக் கட்சிக்கு உண்டு. அந்த வாஷிங் மிஷி னின் அறிவிக்கப்படாத முகவர்களாக அமலாக்  கத்துறை, வருமான வரித்துறை போன்றவை இயங்கி வருகின்றன.  பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த  9 ஆண்டுகளில் அமலாக்கத்துறை 3 ஆயிரம் இடங்களில் சோதனை நடத்தியுள்ளது. இதில் ஆயிரம் வழக்குகளில்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. 50 தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது கூட குற்றம் நிரூ பிக்கப்படவில்லை. அமலாக்கத்துறை வழக் கில் தண்டனை பெற்றவர்கள் 30 பேருக்கும் குறைவானவர்களே. அமலாக்கத்துறையின் நோக்கம் ஊழலை  கண்டுபிடிப்பது; ஒழிப்பது அல்ல. அவர்கள் ஒளிந்துகொள்ளும் இடமாக பாஜகவை மாற்றுவதே ஆகும். பிரதமர் மோடியே இதை ஒப்புக் கொண்டிருக்கிறார். பாட்னாவில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தை, அம லாக்கத்துறைதான் எதிர்க்கட்சிகளை ஒருங்கி ணைக்கிறது என்று அவர் நக்கல் அடிப்ப தாக நினைத்துக் கொண்டு, உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். தில்லி துணை  முதல்வர் மணிஷ் சிசோடியா அமலாக்கத் துறையால் விசாரிக்கப்பட்டு, கைது செய்யப் பட்டார். தில்லி மதுபான ஊழல் வழக்கில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதாவும் விசாரிக்கப்பட்டார். ஒன்றிய அரசு நடத்திய எந்தக் கூட்டத்திலும் சந்திரசேகர ராவ் கட்சி பங்கேற்றதில்லை. பாஜக எதிர்ப்பை சற்று தணித்த நிலை யில், கவிதாவின் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. பாட்னா கூட்டத்திற்கும் அந்தக் கட்சி செல்லவில்லை. ஆனால் மணிப்பூர் தொடர்பாக அமித்ஷா நடத்திய கூட்டத்தில் அக்கட்சி பங்கேற்றது.

பீகார் முன் னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, இப்போதைய  துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகி யோர் அமலாக்கத் துறையின் விசாரணை  வளையத்துக்குள் சிக்க வைக்கப்பட்டுள்ள னர். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகு ஜன் சமாஜ் கட்சி, சமாஜ் வாதி கட்சி, திரிணா முல் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமை யிலான சிவசேனை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  என எதிர்க்கட்சி தலைவர்களைச் சுற்றியே அமலாக்கத்துறை ஆலவட்டம் போடும். கர்நாடக பாஜக எம்எல்ஏ மதல் விரு பாக்ஷாவின் மகன் வீட்டில் சோதனை நடத்தி ரூ.6 கோடி லோக் ஆயுக்தா போலீசாரால் கைப்பற்றப்பட்டது. ஆனால் அவரின் வீட்டு முகவரி அமலாக்கத்துறைக்கு கிடைக்கவே இல்லை. தமிழ்நாட்டில் குட்கா ஊழல் தொடர்பாக தலைமைச் செயலகத்திலேயே சோதனை நடைபெற்றது. அந்த வழக்கில்,  மத்தியப் புலனாய்வுத்துறை இன்னமும் குற்  றப்பத்திரிகைகூட தாக்கல் செய்யாமல் அவ காசம் கேட்டே ஆயாசம் அடைந்துவிட்டது.  மகாராஷ்டிர ஸ்வயாபிமான் பக்ஷா என்ற அமைப்பினை தொடங்குவதற்கு முன்பு நாரா யண்ரானே ரூ.300 கோடி பணமோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டார். பாஜகவில் இணைந்த  உடனேயே அவர் மீதான வழக்கே காணாமல்  போய்விட்டது.  மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ்  தலைவராக இருந்த சுவேந்த் அதிகாரி, நாரதா  ஸ்டிங் ஆபரேசனில் சிக்கினார். பாஜகவுக்குச் சென்று ஆபரேசன் செய்து கொண்ட உட னேயே அவர் மீதான விசாரணை மயங்கி விழுந்துவிட்டது. அவர் தற்போது பாஜகவில் சட்டமன்ற கட்சித் தலைவராக அவதாரம் எடுத்துள்ளார். அசாமில் காங்கிரசில் இருந்த பிஸ்வா சர்மா மீது பாஜக 2010 இல் ஊழல் குற்றச் சாட்டை முன்வைத்தது. அவர் மீதான ஊழல்  புகார்களை அறிக்கையாகவே 2015 இல் வெளி யிட்டது பாஜக. தனது கட்சியில் சேர்ந்தவுடன் ஊழல் கறை அனைத்தும் முற்றாக சலவை செய்யப்பட்டு, அவர் தற்போது அசாம் மாநில முதல்வராகவும் மாறிவிட்டார். 

தன்னுடைய நோக்கத்திற்குப் பயன்படா விட்டால் செய்தி நிறுவனங்களையும் ஒன்றிய  அரசு விட்டு வைக்காது. தைனிக் பாஸ்கர்,  பாரத் சமாச்சார், நியுஸ் கிளிக், நியுஸ் லாண்டரி, தி குயின்ட், கிரேட்டர் காஷ்மீர், தி வயர் உள்ளிட்ட ஊடக நிறுவனங்களும் சோத னைக்கு ஆளாகின. என்டிடிவி நிறுவனம் தொடர் சோதனைக்கு ஆளான நிலையில், அந்நிறுவனத்தை மோடியின் நண்பரான அதானி ஆலிங்கனம் செய்துவிட்டார். குஜராத் வன்முறை தொடர்பான ஆவணப்  படம் வெளியிட்ட பிபிசி நிறுவனத்தின் மீது வரு மான வரித்துறை பாய்ந்து பிறாண்டியது.  இது ஒருபுறம் இருக்க, ஆள்பிடி அரசிய லில் பாஜக உலக சாதனை படைத்து வருகிறது.  2014 முதல் குதிரைகளே மிரண்டு ஓடும் அள வுக்கு குதிரை பேர அரசியல் நடத்தியுள்ளது பாஜக. அதன் தொடர்ச்சிதான் மகாராஷ்டி ரத்தில் அஜித் பவாரை ஆளும் கூட்டணிக்கு இழுத்து அவரை மீண்டும் துணை முதல்வர் ஆக்கியுள்ளதாகும்.  2014 ஆம் ஆண்டு பாஜக தலைவரான தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் 70 ஆயி ரம் கோடி மோசடி செய்துவிட்டதாக குற்றம்  சாட்டினார். இப்போதும் அவரும் துணை  முதல்வர், இவரும் துணை முதல்வர். மகா ராஷ்டிரா கூட்டுறவு வங்கி ஊழலில் அஜித் பவார் மற்றும் அவரது மனைவி பெயர் குற்  றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது. அம லாக்கப் பிரிவும் சோதனை நடத்தியது. பாஜக வுடன் இவர் நெருக்கமானவுடன் அமலாக்கத் துறை இருவரது பெயரையும் நீக்கிவிட்டது. இவர் ஆளும் கூட்டணிக்கு வந்தவுடன், ஆயிரம் கரங்கள் நீட்டி அன்போடு அணைத்துக் கொண்டார்கள். ஊழல் புகார்கள் பொசுங்கிப் போய்விட்டன. இதேபோல அவர் ஏற்கனவே பாஜக கூட்டணிக்குத் தாவி, வழக்குகளை வாபஸ் பெறச் செய்து மீண்டும் தேசியவாத காங்கிரசுக்கு தவ்விக் குதித்தார். மீண்டும் வழக்குகள் விரட்டிக் கொண்டு வரவே, பார் விளையாட்டை மீண்டும் துவக்கிவிட்டார். யாருக்கும் வெட்கமில்லை என்பது அஜித் பவாருக்கும், பாஜகவுக்கும்தான் முற்றாகப் பொருந்தும்.

2016 ஏப்ரலில் உத்தரகண்டில் காங்கிரஸ்  கட்சியைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் பாஜக  தூண்டுதலால் முதல்வர் ஹரிஷ் ராவத்துக்கு  எதிராக கலகம் செய்தனர். குழப்பத்தைப் பயன் படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை மோடி  அரசு திணித்தது. ஆனால் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான உயர்நீதிமன்ற அமர்வு குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து  செய்ததோடு, ஹரிஷ் ராவத் அரசு நம்பிக்கை வாக்கு கோர உத்தரவிட்டது. ராவத் ஆட்சி யை தக்க வைத்துக் கொண்டார். குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்த கே.எம்.ஜோசப்-இன் பதவி உயர்வு ஒன்றிய அரசி னால் இழுத்தடிக்கப்பட்டு, அவர் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பும் தட்டிப் பறிக்கப்பட்டது. 2018 இல் பாஜக திரிபுராவில் ஆட்சியை பிடிப்பதற்கு முன்பு சட்டமன்றத்தில் அக் கட்சிக்கு ஒரு உறுப்பினர் கூட இல்லை. திரிணா முல் காங்கிரஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்களை வளைத்து எதிர்க்கட்சியாக உருமாறியது பாஜக. 2016 இல் புதுச்சேரியில் 30 இடங்களில் 15 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது. திமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. தேர்த லுக்கு மூன்று மாதங்களே இருந்த நிலையில்,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர் கள், 6 சட்டமன்ற உறுப்பினர்களை ஒரே அமுக்  காக அமுக்கி ஆட்சியைக் கவிழ்த்தது பாஜக.  ஏற்கனவே பாஜகவைச் சேர்ந்த மூவரை நிய மன உறுப்பினர்களாக வைத்திருந்தது வசதி யாக போயிற்று. இப்போது, அதே நியமன உறுப்பினர்கள் உத்தியைப் பயன்படுத்தி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏக்களை விட  அதிக எண்ணிக்கையில் பாஜக எம்எல்ஏக் களை கையில் வைத்துள்ளது. ரங்கசாமி பெய ரளவுக்குத்தான் முதல்வராக இருக்கிறார்.  துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தர்  ராஜன் அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துக் கொண்டு மறைமுகமாகக் கூட அல்ல; நேரடியாகவே ஆட்சி நடத்துகிறார். 2016 இல் அருணாச்சலப் பிரதேசத்தில் 60  உறுப்பினர்களில் 11 உறுப்பினர்களை மட்டுமே  பெற்றிருந்த பாஜக, குறுக்கு வழியில் ஆட்சி யைப் பிடித்தது. இவர்களை நம்பி களமி றங்கிய கலிகோபுல் தற்கொலை செய்து கொண்டு இறந்தார். 

2017 இல் கோவாவில் குதிரை ரேஸ் நடத்தி  குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்தது பாஜக.  இப்போது பற்றியெரிந்து கொண்டிருக்கும் மணிப்பூரிலும் இதே வழியில்தான் பாஜக இரட்டை இன்ஜின் ஆட்சியை அமைத்தது. 2018 மேகாலயா தேர்தலில் 21 இடங்க ளைப் பெற்ற காங்கிரசைப் பின்னுக்குத் தள்ளி  வெறும் 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பாஜக, 19 இடங்களை பெற்ற  தேசிய மக்கள் கட்சியுடன் சேர்ந்து கோட்டை யை கைப்பற்றியது.  2018 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில்  ஆளுநரின் அருளாசியுடன் ஆட்சி அமைத்தார்  எடியூரப்பா. ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் சில நாட்களிலேயே குப்புற விழுந்தார். எனினும், தனது முயற்சி யில் சற்றும் தளராத விக்ரமாதித்தனை மிஞ்சும்  வகையில், ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ்  மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியிலி ருந்து எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி 2021-ல் மீண்டும் ஆட்சி அமைத்தது பாஜக. குறுக்கு வழியில் வந்த பாஜகவுக்கு 2023 தேர்தலில் கர்நாடக மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாஜகவுடன் சேர்ந்து மெகபூபா முப்தி ஆட்சிக்கு துரோகம்  செய்து மாநில சட்டமன்றத்தை கலைத்து குடி யரசுத் தலைவர் ஆட்சியைப் புகுத்தி, அந்த மாநிலத்தையே 2 யூனியன் பிரதேசங்களாக நொறுக்கி அரசியல் சட்டத்தின் 370 ஆவது பிரிவையும் ரத்து செய்தது ஒன்றிய பாஜக அரசு. அங்கு, அமைதி நிலவுவதாக அன்றா டம் அலப்பறை செய்தாலும் அந்த மாநிலம்  இன்னமும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை.  2018 ஜூன் துவங்கி 5 ஆண்டுகள் முடிந்து விட்டது. தேர்தலே நடத்தப்படவில்லை. ஆளு நர் மூலமாக பாஜகவே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. 2019 ஆம் ஆண்டில் சிக்கிமில் 32 தொகுதி களில் 17 இடங்களில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவும், 15 இடங்களில் சிக்கிம் ஜன நாயக முன்னணியும் வெற்றி பெற்றிருந்தன. ஒரு இடத்தில்கூட பாஜக வெற்றி பெற வில்லை. ஆனாலும் கொஞ்சம்கூட கூச்சப்படா மல் சிக்கிம் ஜனநாயக முன்னணியில் 10 எம்எல்ஏக்களை வளைத்து சிக்கிம் கிராந்தி காரி மோர்ச்சாவுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது பாஜக. அதைத் தொடர்ந்து நடை பெற்ற இடைத்தேர்தலிலும் 3 இடங்களில் இரண்டை வழக்கம் போல பாஜக கைப்பற்றி யது. ஒரு எம்எல்ஏ கூட வெற்றி பெறாத மாநி லத்தில் தற்போது 12 எம்எல்ஏக்கள் உள்ள கட்சியாக மாறியிருக்கிறது.

2018 இல் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் ஆட்சி அமைத்த  நிலையில், 2020 இல் அந்தக் கட்சியைச் சேர்ந்த  6 அமைச்சர்கள், 20 சட்டமன்ற உறுப்பி னர்களை வளைத்த பாஜக மீண்டும் குறுக்கு  வழியில் ஆட்சியை கைப்பற்றியது. தோற்று  தில்லிக் கட்சி வேலைக்கு போன சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதல்வராக்கப்பட்டார். தெலுங்கானா மாநிலத்திலும் ஆபரேசன் தாமரை திட்டத்தை செயல்படுத்த பாஜக முயன்றது. ஆனால் அது வெற்றி பெற வில்லை. அந்தக் கட்சியைச் சேர்ந்த துஜார் வெள்ளப்பள்ளி மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.  ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அரசை  கவிழ்க்க அவரை எம்எல்ஏ பதவியிலிருந்து விலக்க வேண்டும் என ஆளுநரை நிர்ப்பந்தித் தது பாஜக. ஹேமந்த் சோரன் தாமாக முன்  வந்து பெரும்பான்மையை நிரூபித்த போதும்,  அவருக்கு அமலாக்கத்துறை தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது.  ஒரு எம்எல்ஏகூட இல்லையென்றாலும் அந்த மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் தில்  லாலங்கடி வேலை பாஜகவுக்கு அத்துப்படி. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜய பாஸ்கர், பி.வி.ரமணா, வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளில் விசாரணையை நடத்த தமிழக ஆளுநர் ஊழல் ஒழிப்பு புகழ் ஆர்.என்.ரவி அனுமதி தராமல் இழுத்தடித்து வருகிறார். இதுகுறித்து தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தில் என்ன செய்தும் தாமரையை மலர வைக்க முடியாத ஆத்திரத்தில், தற்  போது அமலாக்கத்துறையை ஏவி விட்டுள்ள னர். ஆனாலும் அவர்கள் நினைத்தது நடக்க வில்லை. நடக்கப் போவதுமில்லை.

;