articles

img

பம்மாத்து பாஜக படமெடுத்து வருகிறது, உஷார்!=எஸ்.நூர்முகம்மது

2024 நாடாளுமன்றத் தேர்தல் நடை பெற்று முடிந்து மோடி தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வந்துள்ளது. 400 இடங்களை வெல்வோம் என தேர்தல் பிரச்சாரத்தின் போது இறுமாப்புடன் கூறி வந்த மோடியின் கனவுகள் தகர்ந்து 240 க்கு உட்பட்ட இடங்களே பாஜகவுக்கு கிடைத்துள்ளது. தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்று இறுதிக் கட்டத்தில் வந்து சேர்ந்த கூட்டாளிகளின் தயவுடனேயே மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பொறுப்பேற்றுள்ளார். 2014, 2019 தேர்தல்களில் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்ற மோடி தற்போது ஒரு மைனாரிட்டி அரசையே அமைக்க முடிந்துள்ளது. மக்கள் அளித்த இந்த தீர்ப்பை உதாசீனம் செய்து விட்டு மோடியும், பாஜகவினரும் ஏதோ மிகப் பெரும்பான்மையுடன் ஆட்சிப் பொறுப்பேற்றது போல் பாசாங்கு செய்து வருகின்றனர்.

நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம்

நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடியும், அவரது அமைச்சரவை சகாக்கள் உள்ளிட்ட பாஜக தலைவர்களும் வெறுப்பரசியலையே தங்களது பிரதான பிரச்சார உத்தியாக மேற்கொண்டனர். 10 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த மோடி எங்குமே தங்க ளது சாதனைகளாக மக்கள் பிரச்சனைகள் மீது எடுத்த நடவடிக்கைகள் குறித்து கூறவில்லை. ஏனெ னில் கடும் பொருளாதார மந்தம், விலைவாசி உயர்வு,  பசி பட்டினி, வேலையின்மை போன்ற மக்களை வாட்டி வதைத்த பிரச்சனைகளை பேசிட தகுதியற்ற வர்களாக இருந்தனர். எனவே தான் மோடியே முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டார். 

இந்துக்களின் சொத்துக்களையும், தாலியையும் கூட இந்தியா கூட்டணியினர் பறித்து முஸ்லிம்க ளுக்குக் கொடுத்து விடுவர் என்று கூட பயமுறுத்தி னார். இராமர் கோயில் கட்டியதைத் தனது சாதனை யாகக் காட்டி பெருவாரியான ராம பக்தர்களின் வாக்கு களைக் கறந்து விடலாம் எனக் கனா கண்டார். அதற்காக அவசர, அவசரமாக அரை குறையாக கட்டப்பட்ட ராமர் கோயிலை அவரே பூசாரியாக நின்று திறந்து வைத்தார். அதையே சாதனையாக நாடு முழுக்கத் தேர்தல் பிரச்சாரத்தின் போது குறிப்பிட்டார். ஆனால் மக்கள் இத்தகைய போலிப் பிரச்சாரங்களைப் புறம் தள்ளினர். அவர்களை வாட்டி வதைத்துக் கொண்டிருந்த பிரச்சனைகளின் அடிப்படையில் தங்கள் வாக்குரிமையை அளித்த னர். ஏன்? ராமர் கோயில் கட்டப்பட்ட அயோத்தி பகுதி அமைந்துள்ள நாடாளுமன்ற தொகுதியிலேயே பாஜக மண்ணைக் கவ்வியது. அந்த பொதுத் தொகு தியில் சமாஜ்வாதி கட்சியைச் சார்ந்த ஒரு பட்டியலின வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கும், பிரதமர் மோடிக்கும் மக்கள் அளித்த ஓர் எச்சரிக்கை.

மீண்டும் தொடரும் வன்முறைகள்

மக்கள் வெறுப்பு அரசியலை விரும்பவில்லை என்பதையும், அதனை வெறுக்கின்றனர் என்பதை யும் தங்கள் வாக்குரிமை மூலம் தெளிவுபடுத்தியி ருந்தும் மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்ட ணியின் மைனாரிட்டி அரசு உருவான பின்னரும் கூட சிறுபான்மை முஸ்லிம்கள் மீதான தாக்குதல் கள் தொடர்கின்றன. சங் பரிவாரத்தைச் சார்ந்த குண்டர்கள் தொடர்ந்து முஸ்லிம்களை குறி வைத்து தாக்குதல்கள் நடத்துகின்றனர். பாஜகவின் ஒன்றிய, மாநில அரசுகள் இத்தகைய தாக்குதல்களுக்கு ஆதரவாக நிற்கின்றன. 

7.06.24இல் உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சார்ந்த 3 மாட்டு வியாபாரிகள் வாகனத்தில் மாடு களை ஏற்றிக் கொண்டு சத்தீஸ்கர் மாநிலம் வந்தனர். அங்கு ஆராங் எனும் இடத்தில் வைத்து பாஜகவைச் சார்ந்த பசு குண்டர்கள் அவர்களை வழிமறித்துத் தாக்கினர். அத்தாக்குதலில் 35 வயது குட்டு கான், 23 வயது சந்த் மியாகான் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். சதாம் குரைசி என்பவர் படுகா யத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவர் தனது வாக்கு மூலத்தில் தங்களைத்  தாக்கியவர்கள் குறித்து தெளிவாக காவல்துறையி னரிடம் கூறினார். இருந்தும் காவல்துறையினர் ஒருவரையும் கைது செய்யவில்லை. 

மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இது வகுப்புவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலல்ல என்றும், குற்றவாளிகள் குறித்து விசாரணை நடப்ப தாகவும் ஊடகங்களில் தெரிவித்தார். இந்நிலையில் சதாம் குரைசி 17.06.24இல் மரணமடைந்தார். அது குறித்து மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் வந்ததன் பேரில் 20 நாட்கள் கடந்த பின்னர் சத்தீஸ்கர் மாநில பாஜக இளைஞர் அணி தலைவர் ராஜா அகர்வால், பாஜக மாவட்டத் தலைவர் ஹர்சா மேத்தா, நவீன் சிங் தாக்கூர் ஆகியோர் கைது செய்யப் பட்டனர்.

உத்தரப்பிரதேசம் அலிகார் நகரில் திருட்டுப் பட்டம் கட்டி ஒரு முஸ்லிம் இளைஞர் கொல்லப் பட்டார். மத்தியப் பிரதேசம் ரத்லம் மாவட்டம்,  மண்டலா எனும் இடத்தில் ஒரு வீட்டின் குளிர் சாதனப் பெட்டியில் மாட்டு மாமிசம் இருந்ததாகக் கூறப் பட்டதன் பேரில் 24 மணி நேரத்தில் எவ்வித விசாரணை யும் இன்றி அரசு அதிகாரிகளால் முஸ்லிம்களின் 11 வீடுகள் புல்டோசரால் இடித்து தரை மட்டமாக்கப் பட்டன. லக்னோ நகரில் அக்பர் நகரில் ஆற்றின் கரையில் தடுப்புச் சுவர் கட்டுவதாகக் கூறி ஆயிரக்க ணக்கான முஸ்லிம்கள் வசித்து வந்த வீடுகள் அதி காரிகளால் புல்டோசர் உதவியுடன் இடித்து தரை மட்டமாக்கப்பட்டன. 

குஜராத் மாநிலம் வதோதராவில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் வீடுகள் ஒதுக்கப்பட்டதில் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு வீடு ஒதுக்கியதற்கு எதி ராக வன்முறை நடத்தப்பட்டு, அது ரத்து செய்யப் பட்டது. இமாச்சலப் பிரதேசத்தில் பக்ரீத் பண்டிகை யின் போது பசுவைத் தானம் செய்ததாகக் கூறி முஸ்லிம்களின் கடைகள் சூறையாடப்பட்டன. 16 முஸ்லிம்கள் நகரை விட்டு விரட்டி அடிக்கப்பட்டனர். அவர்கள் மீது பசுவைக் கொன்றதாக காவல்துறை யினர் வழக்கு தொடர்ந்தனர்.

தில்லி சங்கம் விகார் பகுதியில் வழிபாட்டுத் தலம் அருகே பசுமாடு இறந்து கிடந்ததாகக் கூறி முஸ்லிம்க ளுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. மேடக்கில் பக்ரீத்தை ஒட்டி மாடுகளை கொண்டு வந்ததாகக் கூறி மதரசா மீது மத வன்முறையைக் கட்டவிழ்த்து  விட்டனர். அதில் காயமடைந்தவர்கள் அனுமதிக் கப்பட்ட மருத்துவமனையும் தாக்கப்பட்டது. இதில் நகர பாஜக இளைஞர் அணி தலைவர் உட்பட 7 பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். 

ஜூன் 19, 20 தேதிகளில் மத்தியப் பிரதேசம் சியோனி மாவட்டத்தில் நாக்பூரைச் சார்ந்த 8 பேர் உட்பட மதவன்முறையைத் தூண்ட திட்டமிட்டு 60 பசுக்களைக் கொன்றதாக 24 பேர் கைது செய்யப் பட்டனர். குஜராத் மாநிலத்தில் ஆனந்த் எனும்  கிராமத்தில் நடைபெற்ற கிரிக்கெட் விளையாட்டில் சிறப்பாக விளையாடியதற்காக 23 வயது முஸ்லிம் இளைஞர் சல்மான் வோரா உள்ளூர் மதவெறி இளை ஞர்களால் ஜெய் ஸ்ரீராம் கோசமிட்டு படுகொலை செய்யப்பட்டார். கொலை வெறித் தாக்குதல் நடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு இன்று ஆர்ப்பாட்டம்

மைனாரிட்டி அரசாக மக்களால் தண்டிக்கப்பட்டு, மீண்டும் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பின்னரும் ஏற்கனவே மதவெறி உச்சத்துக்கு ஏற்றப்பட்ட சங் பரிவாரத்தினரின் சிறுபான்மை முஸ் லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்கின்றன. மக்களின் தீர்ப்பின் மூலம் வலுவாகக் கூறப்பட்ட செய்தியை பாஜக கட்சியோ, அதன் வெறி பிடித்த கூட்டமோ, பாஜக ஆட்சியாளர்களோ உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதன் அறிகுறி தான் தொடரும் வன் முறைகள். எனவே இத்தகைய சிறுபான்மை மக்க ளுக்கு எதிரான பாசிச வன்முறைகளைக் கண்டித்து மக்கள் கருத்தைத் திரட்டுவதும், மதச்சார்பற்ற மக்களை ஒன்றிணைப்பதும் தேவையாக உள்ளது. 

சிறுபான்மை முஸ்லிம்களின் பாதுகாப்பு அரசின் கைகளில் மட்டும் இல்லை. மதச்சார்பற்ற உணர்வுள்ள பெரும்பான்மை இந்து சமூக மக்க ளின் கடமையும் கூட. எனவே தான் 9.07.24இல் தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகர்களில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள்  நலக்குழு சார்பில் கண்டன இயக்கம் நடைபெறவுள்ளது. மதநல்லி ணக்கம், மனித நேயம், மதச்சார்பின்மை உணர்வு கொண்ட அனைத்துப் பகுதி மக்களும் இத்தகைய  கண்டன இயக்கங்களில் பங்கேற்க வேண்டுகிறோம்.

எஸ்.நூர்முகம்மது 
மாநிலத் தலைவர், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு 

;