மதுரை, ஜூலை 16- மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறு கின்ற கலவரத்தை தடுத்து நிறுத்த ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் மீதான கொலை வெறியாட்டத்தை தடுக்க வேண்டும். மத வேறுபாடின்றி அனைத்து மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமி ழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப் பின் சார்பில் ஜூலை 16 ஞாயிறன்று மதுரையில் கொட்டும் மழையில் பேரணி- பொதுக்கூட்டம் நடை பெற்றது. மதுரை அரிஸ்டோ மருத்துவமனை அருகே இருந்து துவங்கிய பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்ற பழங் காநத்தம் ரவுண்டானாவில் நிறைவு பெற்றது. பொதுக்கூட்டத்திற்கு அமைப்பின் மதுரை மாநகர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ந.ஜெயச்சந்திரன் தலை மை வகித்தார். ஆர்.விஜயராஜன் வர வேற்றுப் பேசினார். ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய், சோக்கோ அறக் கட்டளை எஸ்.செல்வகோமதி, சிஐ டியு மாவட்டச் செயலாளர் இரா.லெனின் ஆகியோர் முன்னிலை வகித்த னர். அமைப்பின் மாநில ஒருங்கி ணைப்பாளர் பேரா.அருணன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே. பாலபாரதி, மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ச.அப்துல் சமது, மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி டிபேன், தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் பூமிநாதன், சிஎஸ்.ஐ பிஷப் டி.ஜெய் சிங் பிரின்ஸ் பிராபகர் ,பொதுச் செயலாளர் ஆர்.வி.சிங், அமலவை அதி பர் அந்தோணி புஷ்பரஞ்சிதம் ஆகி யோர் உரையாற்றினர். மதுரை மாநக ராட்சி துணை மேயர் டி.நாகராஜன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் வீ. கார்த்திகேயன், மதுரை மாவட்ட முஸ்லிம் லீக் ஐக்கிய ஜமாத் தலை வர் எஸ்.ஏ.லியாகத் அலி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.