தஞ்சாவூர் மே 24- தஞ்சாவூர் மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்கீழ் 68 நபர்களுக்கு ரூ.3.88 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார். கல்வி, வேலைவாய்ப்புகளை உரு வாக்கி, தொழில் துறை வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு முன்னேற்றம் அடைந்து வருகிறது. சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் பெயரிலான தொழில் முன்னோடிகள் திட்டம் பட்டிய லினத்தவர் மற்றும் பழங்குடியினர் களுக்கு ஒரு வரப்பிரசாதமான திட்டம். அரசு வேலை, தனியார் நிறுவ னங்களில் வேலை செய்தல் என்ற அள வில் மட்டும் இருப்பதை மாற்றி தொழில் முனைவோர்களாக மாற்றுவதன் மூலம் பலருக்கு வேலைவாய்ப்பளித்து அச்சமுதாய மக்களை முன்னேற்றம் காண இந்திய அளவில் முதன் மையான திட்டமாக அண்ணல் அம்பேத் கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்தாண்டு, மிக குறுகிய காலத் திலேயே இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 2,136 பயனாளிகளுக்கு வங்கிகளால் கடன் ஒப்பளிப்பு வழங்கப் பட்டது. மேலும், பத்து நாட்கள் தொழில் முனைவு பயிற்சி, தொழில் முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத் தால் வழங்கப்பட்டு 1,303 தொழில் முனைவோர்களுக்கு ரூ.159.76 கோடி அரசின் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் 288 பெண் தொழில் முனைவோருக்கு ரூ.33.09 கோடி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத் தவரை இத்திட்டத்தின் வாயிலாக 68 பேருக்கு ரூ.3 கோடியே 88 லட்சத்து 95 ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தினால் பயனடைந்த தொழில் முனைவோர் செ.ராஜசேக ரன் கூறுகையில், “நான் தஞ்சாவூர் மாவட்ட தொழில் மையம் அலுவலகத் தின் மூலம் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.1.22 கோடி மதிப்பில், ரூ.42 லட்சத்தில் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று வீல் அலைன்மென்ட் - வாட்டர் சர்வீஸ் ஒன்றினை தொடங்கி சுயதொழில் புரிந்து வருகிறேன். சுயதொழில் செய்ய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. இத்தொழிலின் மூலம் சுமார் ரூ.1 லட்சத்திற்கு மேல் மாதாந்திர வருமா னம் ஈட்டுகிறேன். 8 பேருக்கு என்னால் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் எனக்கு சுயதொ ழில் செய்ய வாய்ப்பளித்த தமிழக அரசு மற்றும் முதல்வருக்கு நன்றி” என்றார். இவ்வாறு மாவட்ட தொழில் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மகத் தான திட்டமான அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் தஞ்சா வூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தொகுப்பு - ரெ.மதியழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தஞ்சாவூர்.