மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பிக்க ஏற்பாடு
சென்னை: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாமல் இருக்கும் விடுபட்ட பெண்கள், மே 29 ஆம் தேதி முதல் விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடு களை தமிழக அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 2.26 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1.14 கோடி பெண்கள் தவிர, 1.12 கோடி பெண்கள் உரிமைத் தொகை பெற முடியவில்லை. எனவே, தகுதியான விடுபட்ட பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த சட்டப்பேரவை யில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
‘நீலக்கொடி’ சான்று
சென்னை: தமிழ்நாட்டில் சென்னை மெரினா, கடலூர் சில்வர், நாகை காமேஸ்வரம், இராமநாதபுரம் அரிய மான் ஆகிய நான்கு கடற்கரைகளுக்கு ‘நீலக் கொடி’ சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ரூ.18 கோடியில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ள கட லோர ஒழுங்குமுறை மேலாண்மை ஆணையம் அனு மதி வழங்கியுள்ளது. நடைபாதை, கண்காணிப்பு கோ புரம், மிதிவண்டி தடம் உள்ளிட்டவை அமைத்த பிறகு, ‘நீலக் கொடி’ சான்று கிடைக்கும்.
மின்கல வாகனங்கள்
சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருச்செந்தூர் முருகன், திருவண்ணாமலை அண்ணா மலையார் கோவில்களில் பக்தர்கள் பயன்பாட்டிற்காக ரூ.17.91 லட்சம் மதிப்புள்ள 3 மின்கல வாகன சேவை களை அமைச்சர் பி.கே. சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இனப்பெருக்கம் அதிகம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பாண்டில் ஆமைகளின் இனப் பெருக்க எண்ணிக்கை அதிகரித்துள்ளது, 2024-25 ஆம் ஆண்டில் 3.2 லட்சம் ஆமை முட்டைகள் சேகரிக்கப் பட்ட நிலையில், 2.7 லட்சம் குஞ்சுகள் கடலில் விடப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு வனத்துறை தெரிவித்துள்ளது.
7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை
சென்னை: அரபிக்கடலில் தாழ்வு மண்ட லம் காரணமாக 7 துறைமுகங்களில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச் சேரி, காரைக்கால் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து, இந்த புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ராஜினாமா ஏற்பு
சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ், தற்போது பாட்னாவில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர், திடீரென்று தனது பதவியை ராஜி னாமா செய்வதாக அறிவித்தார். இவரது ராஜி னாமா, நிதித்துறை மூலம் குடியரசுத் தலை வர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப் பட்ட நிலையில், அருண்ராஜின் ராஜினா மாவை முர்மு ஏற்றுக் கொண்டார்.
ரத்து செய்க!
சென்னை: “மேற் கூரை சூரியசக்தி மின் நிலையங்க ளுக்கு நெட்வொர்க் சார்ஜ் கட்டணம் வசூலிப்பதை மின் வாரியம் ரத்து செய்ய வேண்டும்” என தென்னிந்திய நூற்பாலைகள் சங் கம் கோரியுள்ளது.