அயோத்திதாசருக்கு அரசு மரியாதை
சென்னை: அயோத்திதாசப் பண்டிதரின் பிறந்தநாளை யொட்டி, சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, கோவி.செழியன், சி.வி.கணேசன், மா.மதி வேந்தன், மேயர் ஆர்.பிரியா, செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னதாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டி ருப்பதாவது: “சென்னையில் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம், பட்டியலின மக்களுக்காக ரூ. 1,000 கோடி யில் நாம் செயல்படுத்தி வரும் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டத்துக்குப் பண்டிதரின் பெயர் எனத் ‘திராவிடப் பேரொளி’ அயோத்திதாசரைப் போற்றி வருகிறது திமுக அரசு! சமத்துவத்தை வலியுறுத்திய அவரது கருத்துகள் வலுக்கட்டும்! ஆதிக்கம் அழியட்டும்!” என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
மூத்த அணு விஞ்ஞானி மறைவு: முதலமைச்சர் இரங்கல்
சென்னை: நாட்டின் உள்நாட்டு அணுசக்தி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூத்த விஞ்ஞானியும், அணுசக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவருமான எம்.ஆர். ஸ்ரீனி வாசன் (95) காலமானார். கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஊட்டியில் வசித்து வந்தார். அவரது மறை வுக்கு இரங்கல் தெரிவித்திருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய அணு ஆற்றல் திட்டத்தின் தூணாக விளங்கும் முனைவர் சீனிவாசன். அவரது பயணம் இந்திய அணுத் திட்டத்தின் தந்தையாகப் போற்றப்படும் முனை வர் ஹோமி ஜே.பாபாவுடன் இணைந்து இந்தியாவின் முதல் அணு உலையைக் கட்டமைப்பதில் தொடங்கியது. பின்பு, 18 அணு ஆற்றல் அலகுகளைக் கட்டமைப்பதில் தலை மைப் பங்காற்றி ஆற்றல் தன்னிறைவுக்கு வழிவகுத்தார். தேசத்தின் வளர்ச்சிக்கு உண்மையாகப் பாடுபட்ட அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
பல்கலை. மேல்முறையீடு தள்ளுபடி
சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக் கழக பேராசிரியராக பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, 2023 ஏப்.30 ஆம் தேதி பணி ஓய்வு பெறவிருந்தார். அவரது மருமகள் அளித்த வரதட்சணைக் கொடுமை புகாரின் பேரில், பேராசிரியர் திருநாவுக்கரசு, அவரது மகன் உள்ளிட்டோ ருக்கு எதிராக செம்பியம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கை காரணம் காட்டி, குறிப்பாணை பிறப்பித்த பல்கலைக்கழகம், அவர் ஓய்வு பெறுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து திருநாவுக்கரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்த ரவை எதிர்த்து பல்கலைக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஓய்வூதியப் பலன்களை 12 வாரங்களில் வழங்க வேண்டும் என்றும் பல்கலைக்கழகத்துக்கு நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
போலீசாருக்கு பாராட்டு
சென்னை: ஈரோடு சிவகிரி முதிய தம்பதி கொலை வழக்கில் துப்பு துலக்கி, குற்றவாளிகளை விரைந்து கண்டு பிடித்த போலீசாரை நேரில் அழைத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
சென்னை: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மலைக்கட்டை கிராமத்தில் கல்குவாரியில் மண் சரிந்து உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் முதலமைச்சர் ஆறுதல் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்த மைக்கேல் என்பவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசு பதில்
சென்னை: இறந்து போன நபரின் கைரேகையை ஆதார் தரவுகளுடன் ஒப்பிட்டு பார்ப்பது இயலாதது என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்துள்ளது. இறந்து போன மர்ம நபரின் அடையாளத்தை கண்டறிய, அவரின் கை ரேகை மூலம் விவரங்களை தரக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணையில் UIDAI அமைப்புக்கு உத்தரவிடக் கோரிய வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பதில் அளித்தது. ஒன்றிய அரசின் பதில் மனுவை அடுத்து வழக்கின் விசாரணை ஜூன் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஐபோன் உற்பத்தி தொடக்கம்
ஓசூர்: ஒசூர் ஆலையில் ஐபோன் உற்பத்தியை தொடங்கியது டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம். ஐபோன் 16, ஐபோன் 16e உள்பட அனைத்து வகை ஐபோன்களின் உற்பத்தியும் ஒசூர் டாடா ஆலையில் தொடங்கப்பட்டது.
12 பேருக்கு கொரோனா
புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போது 12 பேர் கொரோனா சிகிச்சைப் பிரிவில் தங்க வைக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படு வதாக புதுச்சேரி சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரவிச் சந்திரன் தெரிவித்தார்.
எஃப்ஐஆர் மட்டும் போதுமானது அல்ல!
மதுரை: முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்வது மட்டும் போது மானது அல்ல என்பதை புலனாய்வு அமைப்பு நினைவில் கொள்ள வேண்டும். பாதிக்கப் பட்டவர்கள் தங்கள் பணத்தைத் திரும்பப் பெறு வதை உறுதி செய்வதே TNPID சட்டத்தின் நோக்கம் என நியோமேக்ஸ் வழக்கில் உயர்நீதி மன்ற மதுரை கிளை நீதிபதி கருத்து தெரி வித்துள்ளார்.