tamilnadu

img

கோடை கால இலவச கூடைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு விழா

கோடை கால இலவச கூடைப்பந்து  பயிற்சி முகாம் நிறைவு விழா

அறந்தாங்கியில் 

அறந்தாங்கி, மே 20-  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகத்தின் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, 20 ஆம் ஆண்டு கோடைகால இலவச கூடைப்பந்து  பயிற்சி முகாம் நிறைவு விழா அறந்தாங்கி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளி கூடைப்பந்தாட்ட மைதானத்தில் நடைபெற்றது.  இவ்விழாவிற்கு, நகர மன்ற தலைவர் இரா. ஆனந்த் தலைமை வகித்தார். உடன் அறந்தாங்கி அரசு ஆண்கள் மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் உடற்கல்வி இயக்குநர் செல்லத்துரை, அறந்தாங்கி அரசு ஆண்கள் மாதிரி பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் பழனி ஆகியோர் பங்கேற்றனர்.  23 நாட்கள் காலை, மாலை இரு வேளையும் நடைபெற்ற பயிற்சியில் , காளிதாஸ், சரபோஜி, இளஞ்சித்திரன் ஆகிய கூடைப்பந்தாட்ட பயிற்றுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.  மேலும், மாணவர்களுக்கு முட்டை, பால் வழங்கினர். கூடைப்பந்தாட்ட கழகத்தின் பொறுப்பாளர்கள் அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகத்தின் தலைவர் தாயுமானவன் மற்றும் மெய்யர், ஸ்ரீகாந்த், சேகர், சிவா, கலாராணி ஆகியோர் பங்கேற்றனர்.  அறந்தாங்கி கூடைப்பந்தாட்ட கழகத்தின் செயலாளர் முனைவர் குயின்ட்டன் நன்றி கூறினார்.