சனி, செப்டம்பர் 19, 2020

தமிழகம்

ஆம்புலன்ஸ்க்காக 12 மணி நேரம் காத்திருந்த தொற்றாளர்

மதுரை, ஜூலை 5- திருப்பூர் அவினாசி நாரஷா தெருவைச் சேர்ந்த 59 வயது நபருக்கு புதன்கிழமை கொரோனா தொற்றிருப்பது உறுதிசெய்யப்பட் டது. அவரை திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல 108-ஐ அழைத்துள்ளனர். கிட்டத்தட்ட 12 மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வந்துசேரவில்லை. வியாழன் நள்ளிரவு வரை பொறுமையாக இருந்த அந்த நபர் வேறு வழியின்றி தனது மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொண்டார். பின்னர் அவரது மகன் அவரை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

;