tamilnadu

img

திருப்பதி – புதுச்சேரி இடையே ரயில்

திருப்பதி – புதுச்சேரி இடையே ரயில் 

சென்னை எழும்பூர் - புதுச்சேரி இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் சனிக் கிழைமை (ஏப்,12) முதல் சனிக்கிழமைகளில் வழக்கம்  போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறி வித்துள்ளது. இதேபோன்று திருப்பதி - புதுச்சேரி இடையேயான விரைவு ரயில்களும் ஞாயிற்றுக்கிழமை (ஏப்.13) முதல் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் இயக்கம் மற்றும் நிர்வாக காரணங்க ளுக்காக சென்னை எழும்பூர் -புதுச்சேரி இடையே அன்றாடம் காலை 6.35 மணிக்கு இயக்கப்பட்டு வந்த மெமு விரைவு ரயில் (எண்:66051) இனி சனிக்கிழமைகளில் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வே கடந்த 3-ம் தேதி (ஏப்ரல் 3) அறிவித்திருந்தது. இதேபோன்று மறு மார்க்கத்தில் புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூ ருக்கு அன்றாடம் பிற்ப கல் 3 மணிக்கு இயக்கப்  படும் விரைவு ரயி லும் (எண்:66052) சனிக்  கிழமைகளில் இயக்கப் படாது என்றும் அறி விக்கப்பட்டிருந்தது. எமேலும், திருப்பதி -புதுச்சேரி இடையே தினந்தோறும் அதிகாலை 4 மணக்கு இயக்கப்பட்டு வந்த மெமு விரைவு ரயில் (எண்:16111) ஞாயிற்றுக்கிழமைகளில் இனி இயக்கப்படாது என்றும், மறுமார்க்கத்தில் புதுச்சேரி - திருப்பதி இடையே அன்றாடம் மாலை 4 மணியளவில் இயக்கப்படும் விரைவு ரயிலும் (எண்:16112) வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் இயக்கப்படாது என்று தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் அறிவித்திருந்தது. மறுஅறிவிப்பு வரும்வரை இந்த உத்தரவு நடைமுறையில் இருக்கும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்திருந்தது. இந்த நிலையில், சென்னை எழும்பூர் - புதுச்சேரி, புதுச்சேரி- சென்னை எழும்பூர் இடை யேயான ரயில் சேவை சனிக்கிழமை ( ஏப்.12) முதல் சனிக்கிழமையிலும் வழக்கம்போல் இருக்கும் என்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் அறி வித்துள்ளது. இதுபோன்று, ஞாயிற்றுக்கிழமைகளில் ரத்து செய்யப்பட்டிருந்த திருப்பதி, - புதுச்சேரி, புதுச்சேரி- திருப்பதி மெமு விரைவு ரயில்களும் ஞாயிறு முதல் (ஏப்.13) ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் அறி விக்கப்பட்டுள்ளது.