வீனஸ் பள்ளியில் கோடைகால பயிற்சி நிறைவு
சிதம்பரம், மே 24 - சிதம்பரம் வீனஸ் பள்ளியில் கடந்த 41 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் கோடைகால ஆங்கில இலக்கணம் மற்றும் பேச்சு பயிற்சி வகுப்புகளின் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்புகளில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். பள்ளி தாளாளர் வீனஸ் குமார் தலைமை தாங்கினார். தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கினர். ஆங்கிலத்தில் பேசும்போது எழுதும்போது ஏற்படும் பிழைகள் குறித்த விளக்கம் தந்தனர். இணைத்தாளாளர் ரூபியால் ராணி, முதல்வர் நரேந்திரன், நிர்வாக அலுவலர் ரூபி ரேஸ் பொனிகலா, வீனஸ் நர்சரி பள்ளி முதல்வர் லியோ பெஸ்கி ராவ் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.