சத்தியில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அடிக்கல்
ஈரோடு, ஜூலை 2- சத்தியமங்கலத்தில் ரூ.41 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதித்துறை அலுவலர்களின் குடியிருப் புக் கட்டடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஈரோடு மாவட்டம், சத்தி யமங்கலம் அரசு மருத்து வமனை அருகே ரூ.41 கோடி மதிப் பீட்டில் ஐந்து நீதிமன்றங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் அலுவலர்களின் குடியிருப்புக் கட்டடம் கட் டும் பணிக்கு புதனன்று ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி எஸ்.சமீனா அடிக்கல் நாட்டி னார். நீதிமன்றம் மற்றும் அலுவலகக் கட்ட டம் 9976 சதுர மீட்டர் (107341.76 சதுரடி) பரப்பளவில் ஐந்து நீதிபதிகள் உள்ளடக் கிய நீதிமன்றக் கட்டடம் மற்றும் இவர்க ளுக்கென தனித்தனியே நீதியரசர் அறை, காப்பறை, பாதுகாப்பு பெட்டக அறை, பொது மக்கள் காத்திருப்பு அறை, சிறை மற் றும் கழிவறை ஆகிய வசதிகள் ஒரு அடுக்கில் கட்டப்படவுள்ளது. நீதிமன்ற அலுவலக அறை, சொத்து ஆவணங்கள் அறை, பதி வறை, நகலறை-5 எண்கள் (தலா), வழக் கறிஞர்கள் சங்க வளாகம், கூட்ட ரங்கு, நூலகம், பொதுசேவை மையம், காணொலிக்காட்சி அறை மற்றும் கழிவறை ஆகிய வசதிகள் ஒரு அடுக்காகவும் மூன்று தளங்களில் செயல்படுத்திட திட்டமிடப்பட் டுள்ளது. கூடுதல் வசதிகளாக மின்தூக்கி கள், படிக்கட்டுகள், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதி, தீயணைப்பு உள்ளிட்ட பலவேறு வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் கோபிச்செட்டிபாளை யம் சார் ஆட்சியர் எஸ்.சிவானந்தம், வனத் துறை துணை இயக்குநர் குலால் யோகேஷ் விலாஸ், நகராட்சி தலைவர் ஜானகி ராம சாமி, பொதுப்பணித்துறை செயற்பொறியா ளர் முருகேசன், அரசு வழக்கறிஞர் என்.எஸ். என்.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.