வெள்ளி, செப்டம்பர் 25, 2020

என்ன சொல்லியிருக்காங்க

img

கல்லூரிகளிலும் ஆன்லைன் வகுப்புகள்

திருவனந்தபுரம், ஜுன் 2- கேரள கல்லூரிகளுக்கான ஆன் லைன் வகுப்புகள் உயர்கல்வி அமைச்சர் கே.டி.ஜலீலின் வரலாற்று வகுப்பிலி ருந்து தொடங்கியது.கோவிட் சூழலில் கல்வி நிலையங்களை திறந்து வகுப்பு களைத் தொடங்க இயலாத நிலையில் ஜூன் 1 முதல் வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கின. அமைச்சரின் நேரடி வகுப்பு திருவனந்தபுரம் சமஸ்கிருத கல்லூரியில் உள்ள ஓரிஸ் ஹாலில் நடைபெற்றது. வரலாறு என்கிற சொல்லின் உற் பத்தி குறித்த கதையை கூறி ஆன்லைன் வகுப்பை அமைச்சர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, உலகம் முழுவதும் நடந்த மறுமலர்ச்சிகளின் வரலாற்றை விளக்கி யும், மனிதநேயமே மறுமலர்ச்சி என்ற செய்தியை பகிர்ந்தும் வகுப்பு தொடர்ந் தது. மீண்டும் ஆசிரியர் ஆனது நல்ல அனுபவமாக இருந்தது எனவும், ஆசிரி யர் மனநிலையை பெற வகுப்பு நடத்தி யதாகவும் அமைச்சர் கூறினார்.

;