ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம் சட்டமன்ற தொகுதி தேர்ப்பட்டி பகுதியில் ஓட்டுக்குப் பணம் கொடுத்ததுடன், அதை நியாயப்படுத்தி பேசிய அதிமுக நிர்வாகியான சித்தப்பாவுக்கு, திமுக மாணவர் அணியைச் சேர்ந்த, அண்ணன் மகன் கன்னத்தில் அறைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.