கோக்-பெப்சி உள்ளிட்ட அந்நிய குளிர்பானங்களை வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி முதல் கடைகளில் விற்கமாட்டோம் என வணிகர் சங்கத் தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
மதச் சார்பற்ற முற் போக்கு கூட்டணியின் விழுப்புரம்(தனி) தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் ரவிக் குமார், கள்ளக்குறிச்சி தொகுதி திமுக வேட்பாளர் பொன். கவுதம சிகாமணி ஆகியோருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது.
விழுப்புரத்தில் மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் விழுப்புரம்(தனி) மக்களவை தொகுதி விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் து.ரவிக்குமாருக்கு வாக்குகள் கோரி விழுப்புரத்தில் பொதுக் கூட்டம் நடைபெற்றது