states

img

உலகையே அழிக்கிறது டிரம்ப் - நெதன்யாகு - மோடி களவாணி கும்பல் பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு

உலகையே அழிக்கிறது டிரம்ப் - நெதன்யாகு - மோடி களவாணி கும்பல் பிரகாஷ் ராஜ் குற்றச்சாட்டு

டிரம்ப், நெதன்யாகு, மோடியைக் கொண்ட களவாணிக் கும்பல் உல கையே அழிக்கிறது என்று திரை கலைஞர் பிரகாஷ் ராஜ் குற்றம்சாட்டி யுள்ளார். கேரள மாநிலம் பாலக்காட்டின் திரி தலாவில் அமைச்சர் எம்.பி. ராஜேஷின் ‘தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்’ என்ற புத்தகத்தை வெளியிட்டு அவர் மேலும் பேசுகையில்,”ஏற்கெனவே டிரம்ப்  (அமெரிக்க ஜனாதிபதி) மற்றும் நெதன்  யாகுவைக் (இஸ்ரேல் பிரதமர்) கொண்ட  களாவணிக் கும்பலில் இப்போது பிரதமர் மோடி இணைந்துள்ளார். அத்தகைய கும்பலை அங்கீகரிப்பதில் கேரளத்தின் விழிப்புணர்வு பாராட்டத்தக்கது. அது எப்போதும் என்னைப் பாதித்துள்ளது. நானும் கேரளத்தின் வளர்ப்பு மகன். உண்மையான கேரளக் கதை என்ன என்பதை நாம் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். பிரகாஷ் ராஜ் ஆகிய  நான் அதிக நேரம் கேரளாவில் இருப் பேன். கலை மூலம் அதிக அரசியல் பேசு வேன்” என அவர் கூறினார்.