world

img

வெனிசுலா: நிக்கோலஸ் மதுரோவின் ஐக்கிய சோசலிச கட்சி மாபெரும் வெற்றி 

ஏகாதிபத்திய அமெரிக்காவின் சதியை முறியடித்து வெனிசுலா  தேசிய சட்டமன்ற தேர்தலில் மதுரோ கட்சி மாபெரும் வெற்றியடைந்துள்ளது. 
வெனிசுலாவில் கடந்த 2018ம் ஆண்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மதுரோ தலைமையிலான கட்சி வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டின. இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் குவைடோ தன்னைத் தானே அதிபராக அறிவித்தார். மேலும் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட 50 நாடுகள் அங்கீகாரம் அளித்துள்ளதாக கூறினார். எனினும் அந்நாட்டு ராணுவத்தின் ஆதரவுடன் மதுரோ தலைமையிலான கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. ரஷ்யா, சீனா, துருக்கி உள்ளிட்ட நட்பு நாடுகளின் ஆதரவுடன் மதுரோ ஆட்சியில் இருந்தார். 
இந்நிலையில் எண்ணெய் வளமிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடியை உருவாக்கியதோடு, அரசியல் குழப்பங்களையும் தொடர்ந்து  அமெரிக்கா தூண்டியது.  அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் அரசுக்கு தொடர்ந்து கடும் நெருக்கடிகளை கொடுத்து வந்தது. 
இந்நிலையில் தற்போது நடந்து முடிந்த தேசிய சட்டப்போரவை தேர்தலில் மதுரோ தலைமையிலான ஐக்கிய சோசலிச கட்சி அந்நாட்டு மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் வெற்றி பெற்றுள்ளது.  277 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் ஐக்கிய ஜனநாயக கட்சி 253 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.  மதுரோவின் கூட்டாளிகள் 69 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளனர். இது வெனிசுலா மக்கள் வலது சாரிகளை நிராகரித்து இடது சாரிகளை தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. 
இந்த தேர்தல் வெற்றி வன்முறை மற்றும் சர்வதேச தலையீட்டை முடிவுக்கு கொண்டு வரும் என்று மதுரோ தெரிவித்துள்ளார். 

;