world

img

உக்ரைன்- ரஷ்ய போர் செய்திகள்

  • உக்ரைன் போருக்காக சீனாவிடம் ஆயுதங்களை ரஷ்யா கேட்டிருப்பதாகவும் ரஷ்யாவின் ஆயுதங்கள் குறைந்து கொண்டே வருகின்றன எனவும் ரஷ்யா சிக்கலில் உள்ளது எனவும் மேற்கத்திய ஊடகங்கள் கூறுகின்றன. இதனை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. ரஷ்யா ஆயுதங்களை கேட்கவில்லை என சீனாவின் வெளியுறவு அமைச்சர் கூறியுள்ளார்.  மேற்கத்திய ஊடகங்கள் நம்மூர் ஊடகங்களை போலவே பொய்பரப்பிகளாக ஆகிவிட்டனவா?
  • ரஷ்ய தாக்குதலை சமாளிக்க முடியாமல் பின்வாங்கிய உக்ரைன் ராணுவத்தினர் ஒரு ரசாயன ஆலையை குண்டு மூலம் தாக்கி யுள்ளனர். இதன் விளைவாக பல இடங்களில் நச்சு புகை பரவும் ஆபத்து உருவாகி யிருப்பதாக டான்பாஸ்க் குடியரசு எச்சரித்துள்ளது. இந்த ரசாயன தாக்குதலை ரஷ்யா மீது பழி போடும் சதி உள்ளது எனவும் கருதப்படுகிறது. ஏனெனில் இரு நாட்களுக்கு முன்பு ரஷ்யா ரசாயன தாக்குதல்  நடத்தினால் நேட்டோ நேரடியாக ரஷ்யாவை தாக்கும் என போலந்து அரசாங்கம் கூறியிருந்தது.
  • ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டால் அதனை ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் அங்கீகரிக்க வேண்டியிருக்கும் என ரஷ்யா கூறியுள்ளது. ஏனெனில் 1990ல் ரஷ்யா நோக்கி நேட்டோ விரிவாக்கம் செய்யப்  படாது என வாய்மூலம் தந்த வாக்குறுதியை அமெரிக்காவும் நேட்டோவும் கடைப்பிடிக்க வில்லை. இந்த முறை ரஷ்யா ஏமாற தயாராக இல்லை.
  • நோலான் பீட்டர்சன் என்பவர் அமெரிக்க ராணுவ வீரர். ஆப்கானிஸ்தானில் பணியாற்றியவர். நேட்டோவின் பிரச்சாரத்தை நம்பி கை நிறைய டாலர்கள் ஈட்டிய வேலையை உதறிவிட்டு உக்ரைனுக்காக போராட வந்தவர். அவரும் வெளிநாடு வீரர்கள் இன்னும் 200 பேரும் தங்கியிருந்த ஓட்டல் மீது ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல் நடந்தது. அவருடன் இருந்த 180 பேர் நொடியில் கொல்லப்பட்டனர். இதனை கண்ட  பீட்டர்சனும் இன்னும் சிலரும் உடனடியாக வாகனத்தை பிடித்து போலந்து வந்து சேர்ந்துவிட்டனர். தாய்நாடு திரும்புகின்றனர். நேட்டோ உதவாமல் உக்ரைன் தாக்குப் பிடிக்காது எனவும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் எவரும் உக்ரைன் செல்ல வேண்டாம் எனவும் பீட்டர்சன் வெளியிட்ட காணொலி வைரலாக சுற்றுகிறது.
  • வெளிநாட்டு வீரர்கள் மீது எங்களது தாக்கு தல்கள் தொடரும் எனவும் தயவு தாட்சண்யம் காட்ட மாட்டோம் எனவும்  ரஷ்யா அறிவித்துள்ளது. எனினும் கனடா/பிரேசில் மற்றும் வேறு சில நாடுகளிலிருந்து சிலர் உக்ரைன் வந்து சேர்ந்துள்ளனர். 
  • 4ஆவது கட்டமாக புதிய தடைகள் ரஷ்யா மீது சுமத்தப்படும் என பிரான்சு நாட்டின் ஜனாதிபதி மேக்ரோன் அறிவித்துள்ளார். இவற்றை எப்படி சந்திப்பது என்பது எங்களுக்கு தெரியும் என ரஷ்யா பதில் அளித்துள்ளது.
  • ஐரோப்பிய நாடான செர்பியா தான் ஒரு போதும் நேட்டோவில் சேரமாட்டோம் என அறிவித்துள்ளது. எங்கள் தேசத்தை சின்னாபின்னமாக்கியதும் பெல்கிரேடு மீது 72 நாட்கள் குண்டு பொழிந்து அழித்ததையும் எப்படி மறக்க முடியும் எனவும் செர்பிய ஜனாதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்  விரைவில் ரஷ்ய எரி பொருளுக்கு ஒப்பந்தம்  போடப்போவதாகவும் செர்பியா அறிவித்துள் ளது. இதே போல நேட்டோவின் முடிவை ஏற்க மறுத்த இன்னொரு ஐரோப்பிய நாடு ஹங்கேரி.
  • உக்ரைன் - போலந்து எல்லையில் லிவோவ் பகுதியில் உள்ள ஒரு ராணுவ பயிற்சி நிலை யத்தை வெகுதூரம் பயணிக்கும் ஏவுகணை மூலம் ரஷ்யா அழித்துள்ளது. அங்கு இருந்த 35 உக்ரைன் மற்றும் வெளிநாட்டினர் உயிரிழந்தனர். ஏராளமான ஆயுதங்களும் அழிக்கப்பட்டன. நேட்டோவின் ஆயுதங்கள் போலந்து வழியாக இந்த இடத்துக்கு வந்துதான் உக்ரைனின் பல பகுதிகளுக்கு செல்கின்றன. நேட்டோ ராணுவ அதிகாரிகள் உக்ரைன் வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இங்குதான். இது நேட்டோவுக்கு விடுக்கப் பட்ட எச்சரிக்கை என வல்லுநர்கள் கருது கின்றனர்.
  • உக்ரைன் தனது குடி மக்களில் சில பிரிவினர் ராணுவ பணியில் இணைய வேண்டும் என கட்டாயப்படுத்துவதாகவும் இதிலிருந்து தப்பிக்க சிலர் பெண் வேடம் தரித்து அண்டை  நாடுகளுக்கு தப்பித்து வருவதாகவும் டீன் பிரைன் எனும் ஒரு மேற்கத்திய பத்திரிகை யாளர் கூறியுள்ளார்.
  • ரஷ்யாவில் யார் போருக்கு எதிராக பேசினா லும் உடனடியாக கைது செய்யப்படு கின்றனர். ஒரு பாதிரியார் கூட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என சில ரஷ்ய ஊடகங்களே கூறுகின்றன.
  • உக்ரைனின் மரியபோல் நகரில் அசோவ் பட்டாலியன் எனப்படும் நாஜிக்கள் அமைப்பு  தனது தூதரகத்தையும் ஊழியர்கள் 30பேரை யும் பணய கைதிகளாக  வைத்திருப்பதாக கிரீஸ் குற்றம் சாட்டியுள்ளது. கிரீஸ் நேட்டோ வின் உறுப்பினர் என்பது கூடுதல் செய்தி.
  • ரஷ்யா மீது தடைவிதிக்கும் நேட்டோவின் முடிவில் துருக்கி பங்கேற்காது என ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கி நேட்டோவின் உறுப்பினர்.
  • நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். ஜோபை டனின் தலைமையின் கீழ் அமெரிக்காவின் மானம் மரியாதை காற்றில் கரைந்துவிட்டது எனவும் எவரும் அமெரிக்காவை பார்த்து பயப்படுவதில்லை எனவும் கூறியுள்ளார். டிரம்பின் உரை  அமெரிக்கர்களின் ஒரு பிரிவினரிடையே பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது என கூறப்படுகிறது.
  • வெனிசூலா ரஷ்யாவின் நட்பு நாடு. ஆனால் அமெரிக்கா விரும்பினால் பெட்ரோல் தர தயாராக இருக்கிறோம். அதற்கு முன்பு அமெரிக்கா வெனிசூலாவை அங்கீகரிக்க வேண்டும் என ஜனாதிபதி மதுரோ தன்னை சந்தித்த அமெரிக்க அதிகாரிகளிடம் கூறி யுள்ளார்.

அமெரிக்கா குறித்து ஒரு டுவிட்டர்வாசி: சமீபத்தில் அமெரிக்கா தூண்டிய வண்ண புரட்சிகள்(கலகங்கள்):

    • ஹாங்கங்க் - தோல்வி
        • கஜகஸ்தான் - தோல்வி
        • பெலரஸ் - தோல்வி.

சமீபத்தில் அமெரிக்கா நடத்திய போர்கள்:

    • சிரியா- தோல்வி.
        • ஆப்கானிஸ்தான்- தப்பித்தோம்  பிழைத்தோம் என திரும்பியது.
        • உக்ரைன்- கடும் அவமானம்.

திரும்பத் திரும்ப ஒரே தவறை செய்தால் அதன் பெயர்- பைத்தியக்காரத்தனம்.

- தொகுப்பு: அன்வர் உசேன்