- ரஷ்யா முழுமையாக தோற்பதை மேற்கத்திய நாடுகள் விரும்பவில்லை எனவும் அதனால்தான் தங்களுக்கு ஆயுதங்களையும் விமானங்களையும் தர மறுக்கின்றனர் எனவும் ஜெலன்ஸ்கியின் ஆலோ சகர் அலெக்ஸி அரெஸ்ட்ரோவிச் கூறியுள்ளார். அமெரிக்கா உக்ரைனுக்கு ஆயுதங்களை அள்ளித் தருவது மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுக்கும் என டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
- டிரம்புக்கு தெரிவது பைடனுக்கு தெரியவில்லையே! ரஷ்ய எண்ணெய்க்கு தடைவிதிப்பதன் மூலம் ஐரோப்பா “எரிசக்தி தற்கொலை” செய்து கொள்கிறது என ரோஸ்னெட் எனும் ரஷ்ய கம்பெனியின் இகோர் செச்சின் எச்சரித்துள்ளார். அமெரிக்காவுக்காக இந்த தற்கொலை தேவையா?
- 250 அந்நிய நிறுவனங்கள் ரஷ்யாவை விட்டு வெளியேறியுள்ளன. அதே சமயத்தில் 100 ஐரோப்பிய நிறுவனங்கள் இன்னும் ரஷ்யாவில் செயல்படுகின்றன எனஅமெரிக்காவின் யேல் பல்கலைக் கழக ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.
- அமெரிக்காவின் நிர்ப்பந்தம் முழுமையாக வெற்றிபெறவில்லை போலும். உக்ரைனுக்கு அதி நவீன டிரோன் விமானங்கள் தந்தால் அவை ரஷ்யாவின் கைகளுக்கு சென்றுவிடு வதால் அவற்றை உக்ரைனுக்கு தருவதை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.
- உக்ரைன் ராணுவம் திறமைக் குறைவாக உள்ளது என்பதை அமெரிக்கா அங்கீகரிக்கிறதா? ரஷ்யா யாரையும் மிரட்டவில்லை எனவும் அதே சமயத்தில் ரஷ்யாவிடம் என்ன உள்ளது என்பதையும் அவற்றை ரஷ்யா பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதையும் பொறுப்பற்றுப் பேசும் மேற்கத்திய அரசியல்வாதிகள் உணர வேண்டும் எனவும் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- தன்னிடம் உள்ள 50சதவீத ஆயுதங்களை இழந்துவிட்டதாகவும் மேற்கத்திய நாடுகள் இதனை ஈடு செய்யும் வகையில் ஆயுதங்களை தருவது இல்லை எனவும் உக்ரைன் ராணுவ அதிகாரி கார்பென்கோ புலம்பியுள்ளார்.
- மண் குதிரையை நம்பி உக்ரைன் ஆற்றில் இறங்கலாமா?
- ரஷ்யப் படையினரிடம் சரண் அடைந்த அமெரிக்க வீரர்கள் உக்ரைன் ராணுவம் திறமையற்றும் திட்ட மிடாமலும் செயல்படுகிறது எனவும் அத்தகைய ராணுவத்தை நம்பி எந்த அமெரிக்கரும் உக்ரை னுக்கு வர வேண்டாம் எனவும் வேண்டியுள்ளனர். கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்!